தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

ஒட்டுமொத்த தமிழர்களின் கனவு நிறைவேறுமா?

News இப்படி நடந்தால் எப்படி இருக்கும். ஜெயலலிதாவும், கருணாநிதியும் கூட்டணி சேர்ந்து தமிழினத் துரோகி ராஜபக்சே மற்றும் சோனியா காந்தி போன்றவர்களை எதிர்த்து குரல் கொடுத்தால், உடனடியாக தமிழக மீனவர்களின் பிரச்சனையும், இலங்கையில் வாடும் தமிழர்களின் பிரச்சனையும் விரைவில் முடியும்.


தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகளைத் தவிர மற்ற எல்லா கட்சியும் இருந்த இடம் தெரியாமல் போய்விடும். மேலும் காங்கிரஸ் இவர்கள் சொல்வதை கேட்ட்டுதான் மத்தியில் ஆட்சி நடத்த முடியும். மத்திய அரசில் வெளியுறவுத் துறை உட்பட பல முக்கிய துறைகளை கையில் வைத்துக் கொண்டு இலங்கை பிரச்சினை உட்பட மற்ற எல்லாப் பிரச்சனைகளையும் தமிழர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் முடித்து விடலாம்.  தமிழர்களின் கனவு நிறைவேறுமா?