வேண்டிய காவிரி நீரை உடனடியாக திறந்துவிட வேண்டும் என்று கர்நாடக
முதல்வர் [^] எதியூரப்பாவுக்கு முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் காவிரி டெல்டா பகுதிகளில் 3 லட்சம் ஏக்கர் பரப்பிலான குறுவை
சாகுபடி பயிர்களுக்கு மேட்டூர் அணையில் இருந்து, ஒவ்வொரு ஆண்டும் ஜுன்
12ம் தேதி தண்ணீர் திறந்துவிடப்படுவது வழக்கம்.
ஜுன் 12ம் தேதியில் மேட்டூர் அணையில் குறைந்தது 50 டி.எம்.சி. தண்ணீர்
இருந்தால் மட்டுமே பாசனத்துக்காக நீரைத் திறந்துவிட முடியும்.
ஆனால், கடந்த ஆண்டு இந்தத் தேதியில் 23 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே
அணையில் இருந்தது. இதனால் குறிப்பிட்ட நாளில் தண்ணீரை திறந்துவிட
முடியவில்லை.
அதே போல இந்த ஆண்டும் போதிய அளவு நீர் இல்லாததால் கடந்த 12ம் தேதி
மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை.
93.4 டி.எம்.சி. மொத்த கொள்ளவு கொண்ட மேட்டூர் அணையில் இப்போது 44
டி.எம்.சி. தண்ணீர்தான் உள்ளது.
இதனால் தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி [^], நாகப்பட்டிணம் ஆகிய காவிரி
டெல்டா மாவட்டங்களில், பயிரிடப்பட்டுள்ள குறுவைப் பயிர்கள்
பாதிக்கப்ட்டுள்ளன.
தற்போது, குடிநீருக்காக மட்டும் தினமும் ஆயிரம் கன அடி நீர்
அணையிலிருந்து திறந்துவிடப்பட்டு வருகிறது.
காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பை வழக்கமாகவே தட்டி் கழித்து வரும்
கர்நாடகம் [^], தனது அணைகள் நிரம்பி வழிந்த பிறகே தமிழகத்துக்கு தண்ணீர்
திறந்து விடுவதை வழக்கமாக்கிக் கொண்டுவிட்டது.
இந் நிலையில் தற்போது தனது அணைகளில் போதிய நீர் இல்லை என்று கர்நாடகம்
கூறிவருகிறது.
1991ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இடைக்கால உத்தரவின்படி, கடந்த
ஜுன் மாதத்தில் இருந்து இன்றைய தேதி வரை தமிழகத்துக்கு 40 டி.எம்.சி.
தண்ணீரை கர்நாடகம் திறந்து விடப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், இதுவரை வெறும் 12 டி.எம்.சி. தண்ணீர்தான் தமிழகத்துக்கு
தரப்பட்டுள்ளது. இன்னும் 28 டி.எம்.சி. தண்ணீரை, கர்நாடகம் தர
வேண்டியுள்ளது.
இது குறித்து முதல்வர் கருணாநிதி, கர்நாடக முதல்வர் எதியூரப்பாவுக்கு
நேற்று முன்தினம் ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், தமிழகத்தில் போதிய தண்ணீரின்றி காரிவி டெல்டா மாவட்டங்களில்
குறுவை சாகுபடி பயிர்கள் வாடுகின்றன. எனவே, தமிழகத்துக்கு தரவேண்டிய 28
டி.எம்.சி. தண்ணீரை உடனடியாக திறந்துவிட வேண்டும் என்று கோரியுள்ளார்.
அதே போல புனித ஜார்ஜ் கோட்டையில் ஆய்வுக் கூட்டத்தையும் முதல்வர்
கருணாநிதி நடத்தினார். அதில், பொதுப்பணித்துறை, விவசாயத்துறை
அதிகாரிகளுடன் தற்போதைய தண்ணீர் இருப்பு, பயிர்களின் நிலை குறித்து
ஆலோசனை நடத்தினார்.
நாகரிக கோமாளி
பதிவு செய்தது: 23 Jul 2010 7:56 am
கின்னஸ் சாதனை முறியடிப்பு. புதிய யுகத்தில் ஒரு முதல்வர் கடிதம் எழுதி சாதனை.
கடிதம் மக்களுக்கு பதவி தனக்கு
பதிவு செய்தது: 23 Jul 2010 8:27 am
தேர்தல் வருகிறதல்லவா இந்த ஊழல் கிழவனிடம் இருந்து எண்ணற்ற கடிதங்கள்
மென்மேலும் எதிர்பார்க்கலாம். கடிதம் எழுதி எழுதியே மக்களின் பொன்னான
காலத்தை கடத்திய கொலை கொள்ளையடித்த ஊழல் முதல்வன். யாருக்கும்
பயனளிக்காத,குப்பைதொட்டியில் வீசும் கடிதம் மக்களுக்கு, பணம் பதவி
மட்டும் தனக்கும் தன் குடும்பத்துக்கும். தமிழரின் வரலாற்றிலேயே இதுதான்
கேடுகாலம்.
தொண்டைமான்
பதிவு செய்தது: 23 Jul 2010 7:34 am
தன் குடும்ப உறுபினர்களின் விடயம் என்றால் மட்டும் கலைஞர் நேரில்
சந்தித்து அலுவலை முடிப்பார். வேறு ஏதேனும் என்றால் கடிதம் எழுதி விட்டு
கம்முனு உட்கருந்திருப்பார்.
தமிழன்
பதிவு செய்தது: 23 Jul 2010 12:04 am
மொதல்ல இந்த ஆளோட பேனாவ புடிங்கி வைங்க .
info
பதிவு செய்தது: 22 Jul 2010 11:52 pm
தன்பிள்ளைகளுக்கு அந்தத் துறை இந்தத் துறை வேண்டும் என்று டெல்லிக்கு
நேரில் செல்லும் கலைஞர் தமிழன் பிரச்சினைக்கு மட்டும் இணைய சேவை
பெருகிவிட்ட இக்காலத்தில் கடிதம் மட்டுமே எழுதுவது ஏன்? ஐந்து முறை
முதல்வராக இருந்த தமிழன் ஈழப்பிரச்சினையில் முரணற்ற, பகிரங்கமான, தெளிவான
ஒரு நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளாரா?அதை விடுங்கள் அண்டை மாநிலங்களில்
ஒன்றிலேனும் நமக்கான உரிமையைப் பெற தனது அரசியல் செல்வாக்கை
பயன்படுத்தினாரா? அல்லது மீனவர் சுடப்படுவதை தடுக்க அழுத்தம் கொடுத்தாரா?
கலை
பதிவு செய்தது: 22 Jul 2010 11:33 pm
ஈழ தமிழர் பத்தி எழுதி முடிஞ்சுது இப்ப காவிரிக்கு கடிதம்
கடிதம்
பதிவு செய்தது: 22 Jul 2010 10:51 pm
ஐயோ தாத்தாவின் ஜொள்ளு தாங்க முடியலே. எதற்கெடுத்தாலும் என்மேல் தான் கை
வைக்கிறார். புதுப் பொலிவுடன் பல புதுசுகள் புழக்கத்தில் இருக்க ,ஆயுள்
வரை என்னை நம்பியே காலத்தை ஓட்டுவார் போல .எனக்கோ வயதாகி விட்டதால் என்னை
எல்லோரும் குப்பையில் போடுகின்றனர்.
எதியூரப்பா
பதிவு செய்தது: 22 Jul 2010 10:35 pm
என்ன தமிழ்ல எழுதிடிங்க...எனக்குதான் தமிழ் தெரியாதே.
ஆட்கள் தேவை
பதிவு செய்தது: 22 Jul 2010 10:15 pm
முதல்வராக ஆட்கள் தேவை. நன்கு கடிதம் எழுதிய,அஞ்சல் தலை ஒட்டும் அனுபவம்
உள்ளோர் விண்ணபிக்கலாம்
Sumesh
பதிவு செய்தது: 22 Jul 2010 8:55 pm
கலைஞரை பார்த்து எம துர்மன்னுகே பயம் .....எமலோகம் வந்தாலும் அங்கும்
தனக்கும் தன் மகன்களுகும் பதிவி கேடுபறூ என்று தன் !!!!
கழுகு
பதிவு செய்தது: 22 Jul 2010 7:06 pm
டேய்...கடிதம்னு சொல்லாதீங்கடா...வயிறு எரியுது...மனுஷன் செத்தாலே கடிதம்
எழுதற ஆளு...பயிர் செத்தா எழுதாம விடுவாரா..
போஸ்ட்மேன்
பதிவு செய்தது: 22 Jul 2010 12:25 pm
இந்தியா முழுவதும் நஷ்டத்தில் இயங்கும் அஞ்சல் நிலையங்களுக்கு மத்தியில்,
சென்னை கோபாலபுரத்தை சேர்ந்த அஞ்சல் நிலையம் மட்டும் பயங்கர லாபத்தில்
இயங்குகிறதாம். இந்த அஞ்சல் நிலையத்தில் இருந்தது மட்டும் அதிகமாக
கடிதப்போக்குவரத்து இருக்கிறதாம்.