இடையிலான வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருக்கிறது.
இந்நிலையில் நேற்று கேரள சட்டசபையில் முல்லை பெரியாறு அணையைப்
பலப்படுத்தவும், அணைக்குப் போடப்பட்டுள்ள பாதுகாப்பைப் பலப்படுத்தவும்,
சட்டசபையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
பழைய அணையைப் பலப்படுத்தினாலும் அதன் உறுதிக்கு உத்தரவாதம் அளிக்க
முடியாதென்பதால், புதிய அணை கட்டுவது அவசியமென்று கேரள அரசு
கருதுகிறது.பயங்கரவாதிகளால் அணைக்கு அச்சுறுத்தல் இருப்பதால், மத்திய
அரசின் வழிகாட்டுதலின்படி அணைக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே அணை, "ஏ' பிரிவு பாதுகாப்பில் தான் உள்ளது.போதுமான பாதுகாப்பு
அளிப்பதில், கேரளாவுக்கு தமிழகம் ஒத்துழைக்கவில்லை. மாறாக அணைப்
பாதுகாப்பில் ஈடுபட்டிருக்கும் கேரள போலீசார், அணையை விட்டு அகல
வேண்டுமென, தமிழக அரசு கருதுகிறது.
இவ்வாறு பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.