ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ஜெயலலிதாவின்
நடவடிக்கைகளால் தொடர்ந்து வாய்தா வாங்கப்பட்டு வருகிறது.
மக்களைத் தொடர்ந்து அவமதித்து வரும் அவருடைய போக்கினை திமுக இளைஞர் அணி
சுட்டிக் காட்ட விழைகிறது. இந்தப் பிரச்னையை நீதிமன்றத்தின் கவனத்துக்கு
எடுத்துச் செல்லும் வகையில் தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில்
ஆகஸ்ட் 4-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.மாவட்ட இளைஞர் அணியின்
அமைப்பாளர்கள் தலைமையிலும், மாவட்டக் கழக செயலாளர்கள் முன்னிலையிலும்
இந்த ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்' என்று அறிவித்துள்ளார் மு.க.ஸ்டாலின்.