தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

வன்னியர் இடஒதுக்கீடு-அரசுக்கு அன்புமணி எச்சரிக்கை

வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்காவிட்டால் வரும் காலங்களில் போராட்டம் வேறு வடிவம் என்று என்று முன்னாள் மத்திய அமைச்சரும் பாமக இளைஞரணித் தலைவருமான அன்புமணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு கோரி காஞ்சிபுரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசுகையில்,

வன்னியர்கள் பொருளாதரம் மற்றும் கல்வியில் மிகவும் பின்தங்கியுள்ளனர். பெரும்பாலான வன்னியர்கள் குடிசைகளில்தான் வாழ்கின்றனர். எனவே அவர்களின் உயர்வுக்காக 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.

இந்தப் போராட்டம் சமூக நீதிக்கான போராட்டம். நீதிபதிகள், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளை கணக்கெடுத்தால் வன்னியர்கள் மிகச் சொற்ப அளவிலேயே உள்ளனர்.

அருந்ததியர்களுக்கு, முஸ்லிம்களுக்கு என்று தனி இடஒதுக்கீடு கேட்டவர் பாமக நிறுவனர் ராமதாஸ். அதன் அடிப்படையில் தற்போது வன்னியர்களுக்கும் கேட்கிறார்.

தமிழக அரசு இந்தக் கோரிக்கையை பரிசீலித்து பிரச்சனையைத் தீர்க்க வேண்டும். இல்லாவிட்டால் வரும் காலங்களில் போராட்டம் வேறு வடிவம் பெறும் . ஓராண்டு, இரண்டு ஆண்டு அல்ல இடஒதுக்கீட்டுக்காக நாங்கள் ஏழு ஆண்டுகள் கூட சிறை செல்ல தயாராக இருக்கிறோம்.

மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தி இடஒதுக்கீட்டை அந்தந்த மாநிலங்கள் நிர்ணயித்துக் கொள்வது தொடர்பாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு ஒன்றை அளித்துள்ளது. அதன் அடிப்படையில் தமிழக அரசு உடனடியாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.

எந்த ஜாதியினர் எவ்வளவு பேர் உள்ளனரோ அதற்கு தகுந்தாற்போல் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றார்.