சாதியினருக்குள் ஏற்பட்ட கலவரத்தில் ஒரு பால் வியாபாரி கொல்லப்பட்டார்.
அதன் பதட்டம் தணிவதற்குள் இன்று அங்குள்ள வத்ராயிருப்பு என்ற இடத்தில
மேலும் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் இருவர் படுகாயத்துடன் மதுரை அரசு
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.
இன்றைய கலவரத்தை பற்றிய மேலும் விவரங்கள் வருமாறு :
விருதுநகர் மாவட்டம் மகாராஜபுரத்தை சேர்ந்தவர்கள் முத்துராஜ். ராமு
மற்றும் மாத்தூரை சேர்ந்த மூக்கன். இவர்கள் மூவரும் சேர்ந்து
வத்திராயிருப்பு அருகேயுள்ள மாத்தூரில் மேடங்குளம் கண்மாயில் ஆட்டு கிடை
போட்டிருந்தனர்.
நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் சுமார் 20பேர் அரிவாள் உள்ளிட்ட
ஆயுதங்களுடன் மூவரையும் மிரட்டியுள்ளனர். இதில் ஏற்பட்ட தகராறில் மர்ம
கும்பல் நாட்டு வெடிகுண்டை வீசி தாக்குதல் நடத்தி சென்றுவி்ட்டனர்.
பலத்த காயமடைந்த மூவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில்
ராமு மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
மற்ற இரண்டு பேரும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சாதிகலவரதிற்கு முக்கிய காரணங்கள் :
அரசு இயந்திரங்களின் மீது நம்பிக்கை இல்லாமை .
நல்ல பொருளாதார வாய்ப்பும் , வேலை பார்க்க வசதிகளும் வேளாண்மை தொழில்
செய்பவர்களிற்கு இல்லாமை.
வேளாண் விலை பொருட்களிற்கு நல்ல விலை இல்லாததால் வரும் வேளாண் தொழில்
மீதான அவ நமிபிக்கை.
தேவையில்லாமல் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் அரசியல் நிகழ்வுகளும் ,
அரசியல்வாதிகளின் பந்தா பகட்டும்.
கடைசியாக, காவல் துறையினர் மீதான நம்பிக்கை இல்லாமை அல்லது நேர்மையான
தீர்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இல்லாமை.