தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

சீனியர் பதில்கள்

வி.பி.கே.சரவணன், சின்னமனூர்.

பெரும்பாலான ஆண்கள் சிவந்த நிறம் கொண்ட பெண்களையே விரும்புகிறார்களே,
சிவப்பு நிற பெண்கள் அப்படி என்ன உசத்தி?
ஆப்பிரிக்கர்கள் என்ன செய்கிறார்கள்? சிவப்பு நிற பெண்களைத்
தேடுவதில்லையே! உலக அழகி என்று உலகம் முழுவதும் சொல்லும் கிளியோபாட்ரா
கருப்புதான். கருப்பும் சிவப்புமாக கலந்திருப்பதால் நமக்குப் பிரச்னை.
(அரசியலை நினைத்து குழப்பிக்கொள்ள வேண்டாம்)

எம்.ஜி.பரத், திண்டுக்கல்.

விமானத்தில் நின்று கொண்டே பயணிக்கும் திட்டத்தை, ஏர்லைன்ஸ் நிறுவனம்
ஒன்று ஆரம்பிக்கப் போகிறதாமே?
படிக்கட்டில் பயணம் செய்யலாமா? தொழுதூரில், வேண்டிய கடையில்
சாப்பாட்டிற்கு நிறுத்துவார்களா?

ச.மாரியப்பன், புதுக்கோட்டை.

அன்றாடம் போராட்டம் நடத்துவதால் அ.தி.மு.க. அடையும் லாபம் என்ன?
அடைவது தெரியவில்லை. ஆனால் உடைவது குறையும். இருப்பது புரியும்.

எஸ்.சோமசுந்தரம், அண்ணலக்ரஹாரம்.

முதுமையில் ஒருவருக்கு தேவைப்-படுவது எது?
ஹையா & ஜாலி! சிறந்த கேள்விக்கான பரிசு ரூபாய் 300 -ஐ லபக்கிவிடுவேன்.

எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.

'சீறும் பாம்பை நம்பு; சிரிக்கும் பெண்ணை நம்பாதே' என்ற பழமொழி எந்தச்
சூழலில் உருவாகியிருக்கும்?
பாம்பு கடிக்கு மருந்து உண்டு. நம்பி கடிக்கச் சொல்லலாம். இதைப்
புரிந்துகொண்டுதான் சில பேர் பெண்டாட்டிக்குப் பயந்துகொண்டு பாம்பு
தேளுடன் கூண்டில் 24 மணி நேரம் இருந்து 'சாதனை' படைக்கிறார்கள். அடுத்த
முறை உங்கள் வீட்டில் பிரச்னை வந்தால் இந்த («)சாதனையை செய்து பார்த்து
விட்டுக் கடிதம் எழுதவும்.

எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.

காலமாறுதல்களுக்கேற்ப அழிவுறாமல், ஜாதி இன்னும் தீவிரமாக வேரூன்றி வளர்வது எப்படி?
நீரூற்றி, எருவிட்டு வளர்க்-கிறோமே & அப்புறம் எப்படி அழியும்?

அ.சிவமணி, புன்-செய்-புளியம்பட்டி.

செஞ்சியார், எல்.ஜி.யார் தி.மு.க.வில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?
தி.மு.க.வில் 'வி.மு.க.'விற்குத் தலைமைதாங்கி வருகிறார்கள்.
எதிர்-கட்சி-களிலிருந்து விலகி-யவர்கள், விலக்கப்-பட்டவர்கள்
முன்னேற்றக்கழகம். போகிற போக்கில் மெஜாரிட்டி ஆகிவிடும்
போலிருக்கிறது.

எஸ்.சுவாமிநாதன், மன்னார்குடி.

ஆடையின்றி பிறந்த மனிதன், ஆசையின்றியும் பிறந்திருந்தால் உலகம் எப்படி இருக்கும்?
கேள்வி கேட்க சுவாமிநாதனும் பதில் சொல்ல சீனியரும் இருந்திருக்க
மாட்டார்கள். உலகம் எப்போதோ சுருங்கி அழிந்திருக்கும்.

மு.கமால்பாட்ஷா, உறையூர்..

சீனியர், சர்தார்ஜி ஜோக்குகளை படித்து ரசிப்பது உண்டா? அப்படியிருந்தால்
ருசிகரமான ஒன்றை சொல்லி வைக்கலாமே?
சீனியர் வெஜிட்டேரியன் வகை.
சர்தார்ஜி: அழகும் புத்தியும் அமைந்த பெண்ணைக் கண்டு பிடித்து கல்யாணம்
செய்துகொள்ள வேண்டும் என்று நினைத்தேன் பலிக்கவில்லை. நண்பர்: கிடைக்கவே
இல்லையா? சர்தார்ஜி: கிடைத்தாள். ஆனால் அவளுக்கும் அதே கொள்கையாமே?

டி.பச்சைமுத்து, புதுப்பேட்டை.

சொர்க்கம், நரகம் போன்றவை உண்மையிலேயே இருக்கிறதா-?
நிச்சயமாக நம் மனதிலேயே.

பா-.ஜெயப்பிரகாஷ், சர்க்கார்பதி.

ஏழைகள் ஐந்தாயிரம் ரூபாய் வரை சொத்து வாங்கினால் இலவசமாக பத்திரப்-பதிவு
செய்யும் திட்டத்தை அரசு அமல்-படுத்தியுள்ளது பற்றி?
சீரியஸாக பதில் எழுதிக்கொண்டிருக்கும் போது சிரிப்பு மூட்டாதீர்கள்.
(ஒரு கால் ஐந்தாயிரம் ரூபாய் மதிப்பு என்று சொல்லி எல்.ஐ.சி.
கட்டிடத்-தையும், சென்ட்ரல் ஸ்டேஷனையும் விற்று விட்டதாகப் பதிவு செய்யப்
போகிறார்கள் & ஜாக்கிரதை!).

வி.ஜி.சத்திய-நாராயணன், நங்க-நல்லூர்.

அந்தக் கால மன்ன-ராட்சிக்கும், இந்தக் கால மக்களாட்சிக்கும் என்ன வித்தியாசம்?-
மன்னராட்சியில் மந்திரிகள் சொல்வதை மன்னர் கேட்பதுண்டு. ஏனென்றால்
அவர்கள் மதியூகிகள்.

இனாம் கேசவன், கோவில்பட்டி.

அந்தக்கால மந்திரிக்கழகு... வரும் பொருள் உரைத்தல்; இப்போதைய மந்திரிக்கு அழகு..?
வரும் பொருள் அமுக்கல் & வராத பொருளையும் பிடுங்குதல்-.

ரேவதிப்ரியன், ஈரோடு.

உலகத்தலைவர்கள் எல்லாமே ஒரு சேர, நம் பிரதமர் மன்மோகன் சிங்கின்
அறிவாற்றலை பாராட்டு-கிறார்களே?
அறிவாற்றல் ஏட்டுச்-சுரைக்-காயோ என்று தோன்றுகிறது. அமைச்சர்கள்
பப்ளிக்காக அடித்துக்கொள்வதை வேடிக்கை பார்ப்பது 'நமக்கு' அவமானமாக
இருக்கிறது.

ச.மீனாட்சி சுந்தரம், பம்மல்

'பட்டினி கிடந்தாலும் பந்திக்காக அலையமாட்டோம்; நாங்களும் பந்தி போடும்
காலம் வரும்' என ராமதாஸ் கூறியிருக்கிறாரே?
பசி மயக்கம் & பாவம்!

கு.கணேசன், மறைமலைநகர்.

அமெரிக்காவில் வெளியாகும் 'தி வால் ஸ்ட்ரீட் ஜெர்னல்' என்ற ஆங்கில இதழ்
தமிழக அரசைப் பாராட்டி எழுதியுள்ளது. 'எத்தனை ஆர்ப்பாட்டங்கள்,
அறிக்கைகள், கண்டனங்கள் என நடத்திய போதும் தமிழக அரசின்
செயல்பாடுகளுக்கு இத்தகைய பாராட்டுகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன'
என்ற கருணாநிதியின் பெருமிதம் குறித்து?
பேரு பெத்த பேரு &தாக நீளு லேது!

நென்மேலி ஆர்.நந்த-குமார், தி.மலை.

''பெண்கள் பலர் கூடியிருந்தால், அங்கே பெரிய சண்டை சச்சரவு உருவாகும்'
என்று 'விவேகா சிந்தாமணி'யில் ஒரு பாடல் உள்ளது இது உண்மையா?
பொய்யான தகவல். 'ஒரு பெண் அங்கே இருந்தாலே' என்பது 'சீனியர் சிந்தாமணி' பாடல்.

நாஞ்சில் சு.நாகராஜன், பறக்கை.

இறந்த கன்றுக்-குட்டியின் தோலுக்குள் வைக்கோலை அடைத்து வைத்து பசுவை
ஏமாற்றி பால் கறப்பதற்கும், தேர்தல் நேரத்தில் ஆயிரமோ, இரண்டாயிரமோ
வாக்காளர்களுக்கு கொடுத்து வாக்குகளை பெறுவதற்கும் என்ன வித்தியாசம்?
பால் யாருக்கோ உபயோகப்படுகிறது. என்றாலும் பசு பாதிக்கப்-படுவதில்லை.
இங்கே கறந்த பின்பு பசுவைப் போட்டுத்தள்ள ரூம்போட்டு யோசிக்கிறார்கள்.

பரமத்திகனகு, ஈரோடு&4.

தான் பெற்ற குழந்தைக்கு தானோ, பத்துமாதம் சுமந்த தனது மனைவியையோ அல்லது
தன்னை ஈன்ற பெற்றோரையோ பெயர் வைக்கச் சொல்லாமல் ஓர் அரசியல்வாதியிடம்
சென்று கெஞ்சி நிற்பது கேவலம்தானே?
பல நேரங்களில் அசட்டுத்-தனத்-தினால். சில நேரங்களில் ரூபாய்
நோட்டுக்களினால். அதற்குப் பதில் அந்த அரசியல்வாதியின் பெயரையே
வைக்கலாம். வாய்க்கு வந்த படி தைரியமாகத் திட்டலாமே?

அ.அப்துல்காதர், மேற்கு-தாம்பரம்.

ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஆறுதல் யாத்திரை, அத்வானியின் ரத
யாத்திரை என்ன வித்தியாசம்?
இரண்டுமே பெட்டியைப் பாதுகாக்க. அத்வானி யாத்திரை & ஓட்டுப் பெட்டிக்காக.

உமரி பொ.கணேசன், மும்பை&37.

ஆண் & பெண் நண்பர்களாக இருப்பதை உலகம் நம்புவ-தில்லையே?
இப்போதெல்லாம் ஆணும் ஆணும் நெருங்கிய நண்பர்-களானாலே நம்பு-வதில்லையே.

சா.செல்வஜான்சன், கன்னங்குளம்.

அந்தக் காலத்தில் ஆண்கள் காளைகளை அடக்கி வீரத்தைக்காட்டி திருமணம்
செய்தது போல, இந்தக்-காலத்திலும் தொடர்ந்-திருந்தால் எப்படி இருக்கும்?
காளைகளுக்குத் திருமண-மாயிருக்கும்!

சி.திவ்யா, சிதம்பரம்.

* தயாநிதிமாறன் பந்து வீச அதை மு.க. ஸ்டாலின் பேட் செய்யும் காட்சியை
பேப்பரில் பார்த்திருப்பீரே... இதற்கு சீனியரின் கமென்ட்ரி?
அம்பயர் இருக்கும் வரை மாட்ச் நடக்கும்.

ப.சிவகுமார் பிரபு, திருப்பூர்.

உங்களின் எழுத்துலக ஆசான் யார்?
என்னுடைய எல்.கே.ஜி. ஆசிரியை. எழுத்தை அறிவித்து விட்டு நான் வளர்ந்து
எழுத ஆரம்பிப்பதற்குள் பயந்துகொண்டு 'போய்ச் சேர்ந்துவிட்டார்'!

பா.ஜெயப்பிரகாஷ், சர்க்கார்பதி.

பகல் வெளிச்சம்... இரவு வெளிச்சம் ... சீனியருக்கு பிடித்த வெளிச்சம்?
இரண்டுமில்லை. அறிவு வெளிச்சம் & இதற்கு ஆற்காட்டார் தயவு தேவையில்லையே!

உ.பாலசுப்பிரமணியம், திருவிடைமருதூர்.

** எல்லோருக்கும் எப்போதும் நல்லவனாக இருக்க என்ன வழி?
அட. இளிச்ச-வாயனுக்கு இப்படி-யொரு பேரா-?

பார்வதிமணாளன், பெங்களூரு.

தொலைக்காட்சித் தொடர்-களில் என்னைத் தொலைத்துக்-கொள்ளாதவன் நான்.
சீனியர் எப்படி-?
தொலைக்காட்சித் தொடர்களை நான் மிகவும் நேசிப்பவன். வீட்டில் என்னுடைய
அறையில் நான் 'நிம்மதியாக' , 'சுதந்திரமாக' எழுதிக்-கொண்டிருப்பதற்கு
உதவுகிறதே.

எஸ்.ஏ.கேசவன், கோவில்பட்டி.

'கணவனே கண் கண்ட தெய்வம்' என்பது கொஞ்சம் ஓவராகத் தெரியவில்லையா?-
தெய்வத்தின் பாடு பரவாயில்லை. தினமும் நைவேத்தியத்தை பரீட்சித்துப்
பார்க்கும் பரிதாபத்திலிருந்து தப்பித்து விடுகிறது. ஹூம்...

சிவா முத்துக்குமார், சிங்கப்பூர்

விலைவாசி குறைந்து-கொண்டுதான் இருக்கிறது என ஜெயலலிதாவுக்கு கலைஞர்
பதில் சொல்லியிருக்கிறாரே? அப்படியா?
விலைவாசி டிசம்பரில்தான் குறையும் என்று சொன்ன மன்மோகன்சிங்கைக்
கிண்டல் செய்வதற்காகக் கூறியிருப்பார். கூட்டணி உறுதியானால்
சரியாகிவிடும்.

வீ. முகுந்தன், காரைக்கால்

ரூபாய்க்கு சின்னம் அறிவித்து-விட்டதால் இந்திய பொருளாதாரம் உயர்ந்துவிடுமா?
இல்லை & ஆனால் இது ஓர் அங்கீகாரம் என்ற வகையில் பெருமைப்படலாம்.