தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

முதல்வரை பாராட்டிய கம்யூனிஸ்ட் ச ம உ சிவபுண்ணியம் .

முதல்வர்  பேசியதை விட  , சிவபுண்ணியம் பேசியதுதான் இப்போது செய்தியாக பதிய படுகிறது.



திருவாரூரில் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக்கல்லூரி திறப்பு விழா முதல்வர் கருணாநிதி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. சிவபுண்ணியம்  புகழாரம் சூட்டினார்.

விழாவில் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவரும், மன்னார்குடி சட்டப்பேரவை உறுப்பினருமான வை. சிவபுண்ணியம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

விழாவில் சிவபுண்ணியம் பேசியதாவது:



பின்தங்கிய பகுதியான இங்கு அத்தியாவசியத் தேவையான மருத்துவக் கல்லூரி திறக்கப்பட்டுள்ளது. இதனால் அவசரச் சிகிச்சை உள்ளிட்டவற்றுக்கு தஞ்சாவூர் போன்ற நகரங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் குறையும். இதனால் இப்பகுதி மக்கள் பயன்பெறுவர். இப்போதுள்ள இயந்திர வாழ்க்கையில் மக்களுக்கு பலவிதமான நோய்கள் ஏற்படுகின்றன. இருப்பினும், தமிழகத்தில் மருத்துவச் சேவைப் பணிகள் சிறப்பாக நடைபெறுகின்றன. இதற்காக தமிழக முதல்வர், துணை முதல்வர், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

 



திருவாரூர் எம்.எல்.ஏ.வாக கருணாநிதி-அமைச்சர் பன்னீர்செல்வம் விருப்பம்: திருவாரூர் சட்டப் பேரவை உறுப்பினராகப் போட்டியின்றி தமிழக முதல்வர் கருணாநிதியை தேர்வு செய்ய வேண்டும் என்று நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் கூறினார்.

 


திருவாரூர் மாவட்ட மக்களுக்கு முதல்வர் ஆற்றியுள்ள பணிகளைக் கருத்தில் கொண்டு, நாம் அனைவரும் ஒன்றிணைந்து அவரை இத்தொகுதியிலிருந்து போட்டியின்றி தேர்ந்தெடுக்க வேண்டும் என்றார் அவர்.



தமிழகத்தில் மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக் கல்லூரி அமைக்கத் திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் சுப்புராஜ்.மிகக் குறுகிய காலத்தில் திருவாரூரில் மருத்துவக் கல்லூரி உருவாக்கப்பட்டுள்ளது.