மேதகு முன்னாள் இந்திய குடியரசுத் தலைவருமான அப்துல் கலாம்
செல்லுமிடமெல்லாம் நம்பிக்கை விதைத்து வரும் நிலையில்...
போலி மதிப்பெண் சான்றிதழ் மூலம் மருத்துவம், பொறியியல் படிப்பில் சேர
முயன்ற மாணவர்கள் பற்றிய அதிர்ச்சிச் செய்தி வெளியாகியுள்ளது.
எந்த ஒரு துறையிலும் ஊழல் மற்றும் மோசடி புகார்கள் எழும்போதெல்லாம்,
தத்தம் துறையினருக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை எனும் கோணத்தி-லேயே அரசு
தனது நடவடிக்கைகளை மேற்கொள்வது வாடிக்கையாகிவிட்டது. அந்த வகையில்,
தமிழக தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தரா தேவி கொடுத்த புகாரின்
அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் போலி மதிப்பெண்
சான்றிதழ் விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள்.
பொதுவாக, 'முதல் தகவல் அறிக்கை' (எஃப்.ஐ.ஆர்.) எனப்படுவது ஒரு குற்றம்
நிகழ்ந்த உடனேயே புகாராக தாக்கல் செய்யப்பட்டு காவல்துறையினரால் பதிவு
செய்யப்படுவது ஆகும். ஆனால், சட்டத்தை இயற்றும் அரசோ மேற்படி நடைமுறையை
கடைபிடிப்பதே இல்லை. போலிச் சான்றிதழ் மோசடி சட்ட விரோதம் என
தெரிய-வந்தாலும், உடனடியாக அரசின் சம்பந்தப்பட்ட துறையினர் ஆட்சியின்
உயர்-மட்டம் வரை கூடிப் பேசி, புகாரின் வரையறை, அரசு மற்றும் அரசுத்
துறைக்கு குந்தகம் ஏற்படா வண்ணம் எல்லைகள் வகுக்கப்பட்டு புகாரைத் தயார்
செய்கின்றனர். அதன் பேரில் முதல் தகவல் அறிக்கையாக காவல்துறையினரால்
வழக்கு பதிவு செய்யப்படுவதே வழக்கமாக பின்பற்றப்பட்டு வருகிறது. என்ன
நியாயம் இது? இடையூறு இல்லாத, குறுக்கீடு அல்லாத விசாரணையால் மட்டுமே,
குற்றங்களின் உண்மையான பின்னணியை அம்பலப்-படுத்த முடியும்,
சம்பந்தப்பட்ட-வர்களுக்கு கடும் தண்டனை-கள் பெற்றுத்தர முடியும். மேலும்
எதிர்காலத்தில் அது போன்ற குற்றச்செயல்கள் நடைபெறாமல் தடுக்க முடியும்.
ஆனால் இதற்கு எல்லா முட்டுக்-கட்டைகளையும் அரசே போடுகிறது.
இப்போது இந்த போலிச் சான்றிதழ் விவகாரத்தில் கல்வித் துறை கொடுத்த
புகாரைப் பார்த்தாலே இதெல்லாம் சரி என தெரியும்.
''நடப்பு கல்வி ஆண்டில் மருத்துவம் படிக்க விண்ணப்பித்த மாணவ மாணவிகளின்
பிளஸ் டூ மதிப்பெண் பட்டியல் பற்றி போன மாதமே மருத்துவக் கல்வி இயக்ககம்
சந்தேகம் எழுப்பி அந்த மதிப்பெண் பட்டியல்களை ஆய்வு செய்தது. அப்போது
போலி என தெரிய வந்தது. அதைத் தயாரித்து கொடுத்தவர்களை பிடிக்க வியூகம்
அமைக்கப்பட்டது. கவுன்சிலிங்கில் சம்பந்தப்பட்ட மாணவ மாணவிகளை அழைத்து,
அவர்களை விசாரித்தபோது தேர்வுத் துறை பணியாளர்கள் இந்த விவகாரத்தில்
சம்பந்தப்படவில்லை என தெரியவந்தது. சென்னை மற்றும் விழுப்புரத்தைச்
சேர்ந்த நபர்கள்தான் போலி மதிப்பெண் பட்டியல் தயாரித்து
கொடுத்திருக்கிறார்கள் என தெரியவருகிறது. அதன் பேரில் சென்னை மாநகர
காவல்துறையிடம், அரசுத் தேர்வுகள் இயக்குனரகம் புகார்
கொடுத்திருக்கிறது'' என்கிறது கல்வித் துறை. அதாவது, 'என் கை சுத்தம்'
என்று 'ஊருக்கு முன்னாடியே' உரக்கச் சொல்கிறது தேர்வுத் துறை
இயக்குனரகம்.
மாணவர்கள் மறு மதிப்பீடு, மறு கூட்டலுக்கு விண்ணப்-பித்தபோது, பல
ஏஜென்ட்டுகள், மறு மதிப்பீட்டில் அதிக மதிப்பெண் பெற்றுத்தருவதாக ஆசை
வார்த்தை காட்டி, போலி சான்றிதழ்களை கொடுத்திருக்கலாம் என்ற
கோணத்திலும் விசாரித்து-வருகிறார்களாம். இதை, இந்த விவகாரத்தில்
ஈடுபட்டுள்ள உண்மைக் குற்றவாளிகளான மாணவர்களின் பெற்றோர்களை
வழக்கிலிருந்து விடுவிக்க அரசு எடுக்கும் முயற்சியாகத்தான் கருத வேண்டி
உள்ளது. இது கடுமையாக படித்து, தேர்வில் நல்ல மதிப்பெண்களை
பெற்றவர்களிடையே எவ்வளவு மன உளைச்சலை ஏற்படுத்தும் என்பதையும் அரசு
மனதில் இருத்தி செயல்பட வேண்டும்.
இது தொடர்பாக தமிழக முதல்வர், "ஒரு குழு போடப்-பட்டிருக்கிறது. அந்தக்
குழு விசாரித்து நடவடிக்கை எடுக்கும், முக்கியமாக ஏமாறுகிறவர்கள்
இருந்தால் ஏமாற்றுபவர்களால் செயல்பட முடியும். எனவே ஏமாறுகிறவர்கள்
ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்" என பதில் அளித்துள்ளார்.
போலிச் சான்றிதழ்கள் தயாரித்து பணத்துக்காக அதை மாணவர்களிடம் விற்பனை
செய்தவர்கள், கடந்த கல்வி ஆண்டுகளில் எத்தனை பேருக்கு இம்மாதிரி போலி
சான்றிதழ்கள் கொடுத்துள்ளனர் என்பதை பற்றி தமிழக அரசுத் தேர்வுகள்
இயக்குனரகம் மூச்சுக்கூட விடவில்லை.
போலிச் சான்றிதழ் மோசடி பின்புலத்தை ஆராய்ந்தால், இந்த மோசடியில்
ஈடுபட்ட மாணவர்களில் பெரும்பாலானோர், 80 சதவிகித மதிப்பெண்கள் பெற்றும்,
மருத்துவ படிப்புக்கு அது போதாததாலும், பிரபலமான பொறியியல்
கல்லூரிகளில் விரும்பிய பாடப்பிரிவில் சேரவுமே போலிச் சான்றிதழ்கள்
பெற்றுள்ளதாக தெரியவருகிறது. உயர்கல்வியைப் பொறுத்த மட்டில்
பெரும்பாலும் மாணவனின் லட்சியத்தில், பெற்றோரே பெரும்பங்கு
வகிக்கின்றனர். மதிப்பெண் குறைந்தால் தங்கள் பிள்ளைகளுக்கு நினைத்த
படிப்பு, இடம் கிடைக்காமல் போய்விடுமோ என பயந்து... பெற்றோர்களே போலி
மதிப்பெண் சான்றிதழ் தயாரிக்கும் ஏஜன்ட்டுகளோடு கூட்டு வைத்துதான் இந்த
செயல்களை செய்திருக்க முடியும். ஏனென்றால் சில மதிப்பெண்களுக்காக பல
ஆயிரம் செலவு செய்ய, ப்ளஸ் டூ படிக்கும் மாணவனால் முடியாது. மாணவன் கூட
நட்பு வழியில் பணம் புரட்டினாலும் குறிப்பாக மாணவிகளால் இவ்வளவு பெரிய
தொகையை வீட்டுக்குத் தெரியாமல் புரட்ட முடியாது. எனவே, சில மதிப்பெண்கள்
அதிகம் வாங்கி தங்கள் பிள்ளைகளை நல்ல கோர்ஸில் சேர்த்துவிடவேண்டும் என்ற
வெறியுடன் தவறான பாதையில் பயணித்திருப்பவர்கள் பெற்றோர்கள்தான். இதற்கு
தண்டனையாக அந்த அப்பாவி மாணவிகளின் எதிர்காலம் பாழடிக்கப்பட்டிருக்கிறது.
இந்த பிரச்னையை வெறும் குற்ற நடவடிக்கை-யாக பார்ப்பது மட்டுமன்றி உளவியல்
பார்வை-யோடு அணுகுவதும் அவசியமாகிறது. மாணவப் பருவத்திலேயே பணம்
கொடுத்து, போலிச் சான்றிதழ்கள் பெறும் ஒரு மாணவர், எதிர்காலத்தில் தமது
பணியில் எப்படி நேர்மையாக செயல்படுவார்? லஞ்ச லாவண்யத்தை ஒடுக்க எப்படி
எதிர்காலத்தில் உடன்படுவார்?
இதையெல்லாம் விட முக்கியமாக... "கஷ்டப்பட்டு படித்தால் மட்டும் போதாது,
பணம் இருந்தால்தான் எல்லாம் சாத்தியம்" என்றபடி கல்வி கரன்சிமயமானதே
இப்படிப்பட்ட மோசடிகளுக்கு மூலக் காரணம்.
மோசமான கல்விக் கொள்கைதான் இதுபோன்ற மோசடி-யாளர்க¬ளையும்
உரு-வாக்குகிறது. எனவே அரசு இதை வெறும் குற்ற நட-வடிக்கையாகப்
பார்க்காமல் எதிர்கால சந்ததியினரின் பிரச்னையாக தொலை நோக்குப்
பார்வையோடு அணுக வேண்டும்.