கோடிக்கணக்கான பணத்தைக் கொட்டி டெல்லியில் நடைபெற இருக்கும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் 'பிளாப்' ஆனால் மிகவும் சந்தோஷப்படுவேன் என்று முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான மணி சங்கர அய்யர் கூறியுள்ளார்.
ஊரக வளர்ச்சித் திட்டங்கள், பஞ்சாயத்து ராஜ் ஆகியவற்றில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் மணி. முன்பு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சராகவும் இருந்தவர்.
இந் நிலையில் நாடாளுமன்றத்துக்கு வெளியே நிருபர்களிடம் பேசிய அய்யர்,
காமன்வெல்த் போட்டிகளுக்கு மழையால் இடையூறு ஏற்பட்டு வருவது மிகுந்த மகிழ்ச்சி தருகிறது. உண்மையைச் சொன்னால், இந்த காமன்வெல்த் போட்டிகள் தோல்வியடைந்தால் மிகவும் மகிழ்ச்சியடைவேன்.
இந்தப் போட்டிகள் வெற்றிகரமாக நடந்து முடிந்தால், அடுத்தடுத்து ஆசிய விளையாட்டுப் போட்டிகள், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் என்று வரிசையாக இந்தியாவில் நடத்தத் துடிப்பார்கள்.
இந்தியா போன்ற ஒரு நாடு விளையாட்டுப் போட்டிக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களைச் செலவிடுவது மிகவும் வீணான செயல்.
டெல்லி காமன்வெல்த் போட்டிக்கு ரூ.35,000 கோடி செலவிடப்படுகிறது. இந்தப் பணம் வசதியற்ற குழந்தைகளின் நலனுக்காக செலவிடப்பட வேண்டும். இனி சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுவதற்கு முன் மத்திய அரசு, ஒன்றுக்கு இரண்டு முறை யோசிக்க வேண்டும் என்றார் மணி.
மணி சங்கர அய்யரின் இந்தக் கருத்துக்கு அவரது காங்கிரஸ் கட்சியும் பாஜகவும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
மணி சங்கரின் கருத்துகளைத் தீவிரமாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை என்று காங்கிரஸ் கூறியுள்ளது.
மணி சங்கர அய்யரின் கருத்துகளை ஏற்றுக் கொள்ளவே முடியாது என்று பாஜக கூறியுள்ளது.
இந்தப் போட்டிகளை வெற்றிகரமாக நடத்துவது நாட்டின் கெளரவப் பிரச்சனை என்றும், இதுபோன்ற பொறுப்பற்ற கருத்துகளைத் தெரிவிப்பதை அய்யர் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் பாஜக செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.
தேசவிரோத பேச்சு-காங்கிரஸ் கடும் கண்டனம்:
மணிசங்கர் அய்யரின் கருத்து தேசவிரோதமானது என்று காமன்வெல்த் போட்டி அமைப்பு குழுத் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான சுரேஷ் கல்மாதி கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், அய்யரின் கருத்து முழுக்க, முழுக்க பொறுப்பற்றது, அபத்தமானது. மூத்த தலைவர், விளையாட்டுத் துறைக்குப் பொறுப்பு வகித்தவர் இப்படிப் பேசலாமா? இந்தியர் யாரும் இப்படிப் பேசமாட்டார்கள்.
விளையாட்டுத் துறையை அவரிடமிருந்து பறித்த விரக்தியில் இவ்வாறு பேசுகிறார். அவர் விளையாட்டு அமைச்சராக இருந்திருந்தால் காமன்வெல்த் போட்டிகள் இந்தியாவுக்கே வந்திருக்காது என்றார் கல்மாதி.
ஆனால், ரூ. 35,000 கோடியைக் கொட்டி விளையாட்டுப் போட்டி நடத்தி தான் இந்தியாவுக்கு இந்த ஊழல் அரசியல்வாதிகள் மரியாதையை வாங்கித் தரப் போகிறார்களா?.
நீங்கள் என்ன நினைக்கிறார்கள்?