தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

அறிவுசார் சொத்துரிமைக் கல்வி...


மேலைநாடுகளில் இருப்பதை விட இந்தியாவில் அறிவுசார் சொத்துரிமை (இன்டலெக்சுவல் பிராப்பர்டி ரைட்ஸ்) தொடர்பான விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது. இதனால்தான் இந்தியாவின் படைப்புகள் பலவற்றுக்கு மேலைநாடுகள் அறிவுசார் சொத்துரிமையைப் பெற போட்டியிடுகின்றன. இந்தியாவில் இது தொடர்பான நிபுணர்களும், கல்வி அறிவும் குறைவாக இருப்பது இதற்கு முக்கியக் காரணம்.இக்குறையைப் போக்கும் வகையில் இப்போது இந்தியாவில் அறிவுசார் சொத்துரிமை தொடர்பான புதிய சான்றிதழ் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியத் தொழிலகக் கூட்டமைப்பும் (சிஐஐ), "ஜிஐஎஸ்டி எட்ஜ்' கல்வி நிறுவனமும் இணைந்து சர்வதேச தரத்தில் இந்தப் படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளன.இதுவரை தனியாக கல்வி நிறுவனங்களுக்குச் சென்று படிக்கும் வகையில் அறிவுசார் சொத்துரிமை தொடர்பான பட்டப்படிப்புகள் வழங்கப்பட்டு வந்தன. ஆனால் இப்போதைய புதிய முறையில் மிகக் குறுகிய காலத்தில் வீட்டில் இருந்தபடியே தங்களுக்கு வசதியான நேரத்தில் இந்த கல்வியைப் பெறமுடியும் என்பது கூடுதல் சிறப்பு.÷இணையதளம் மூலம் 5 வாரங்களில் இந்த சான்றிதழ் படிப்பு கற்றுத் தரப்படுகிறது. நாள்தோறும் தங்களுக்கு வசதிப்பட்ட 2 மணிநேரத்தை செலவிட்டால் போதுமானது. இப்போது கல்லூரிகளில் படித்து வருபவர்கள் மற்றும் வேலைகளில் இருப்பவர்களும் கூட இதில் சேர முடியும். பயிற்சி, தேர்வு என அனைத்தும் ஆன்லைன் மூலமே நடத்தப்படுகிறது.÷மாணவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை இணையதளம் மூலம் வகுப்பெடுக்கும் ஆசிரியர்கள் உடனுக்குடன் தீர்த்து வைப்பார்கள். டிரேட் மார்க், தாவர வகைகள், புவியியல் குறியீடுகள் மற்றும் தொழில், கல்வி என அனைத்துப் பிரிவுகளிலும் உள்ள அறிவுசார் சொத்துரிமை விவரங்களுடன் பாடத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக தொழில்துறை சார்ந்த அறிவுசார் சொத்துரிமைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே இக்கல்வி முடிப்பவர்களுக்கு வேலைவாய்ப்பும் அதிகம் உள்ளது என்று ஜிஐஎஸ்டி எட்ஜ் நிறுவனம் தெரிவித்துள்ளது.÷இன்றைய உலகில் வெறும் பட்டப்படிப்புக்கு வேலை கிடைப்பது என்பது குதிரைக் கொம்பான விஷயம். எனவே மாணவர்கள் இதுபோன்ற கூடுதல் சான்றிதழ் படிப்புகளைப் படிப்பது வேலை பெறும் தகுதியை உயர்த்திக் கொள்ள நிச்சயமாக உதவும். இது தொடர்பான மேலும் விவரங்களை என்ற gistedge.com   இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.