தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய மு.க.அழகிரி விருப்பம்?

மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய விரும்புவதாக ரசாயாணத்துறை அமைச்சர் மு.க.அழகிரி, முதல்வர் கருணாநிதியிடம் தெரிவித்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் முடிவடைந்ததும் தனது பதவியை ராஜினாமா செய்ய விரும்புவதாக முதல்வரிடம் தெரிவிததுள்ளார் அழகிரி என்று அத்தகவல்கள் கூறுகின்றன. இதைக் கேட்ட முதல்வர், இப்போதைக்கு அமைச்சர் பதவியில் நீடிக்குமாறும், அவசரப்பட வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மத்திய அமைச்சர் பதவியில் ஆரம்பத்திலிருந்தே அழகிரி விருப்பமில்லாமல்தான் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் மாநில அரசியலில் அவருக்கும் துணை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் இடையே முட்டல் மோதல் வந்து விடக் கூடாது என்பதற்காகவே அழகிரியை டெல்லிக்கு அனுப்பி வைத்தார் முதல்வர்.

இருப்பினும் அழகிரிக்கு டெல்லியில் நல்ல பெயர் கிடைக்கவில்லை. மொழிப் பிரச்சினை காரணமாக அவர் நாடாளுமன்றத்திற்கு பெரும்பாலும் வருவதில்லை. அமைச்சரவைக் கூட்டத்திற்கும் பெரும்பாலும் போவதில்லை. மாநில அரசியல் மீதுதான் அவருக்கு அதிக நாட்டம் உள்ளது.

மேலும், மு.க.ஸ்டாலினை கட்சித் தலைமைப் பதவிக்கு உயர்த்துவதையும் அழகிரி நேரடியாகவே எதிர்த்து வருகிறார். கட்சித்தலைவர் பதவிக்கு கருணாநிதியைத் தவிர தகுதியானவர் யாரும் கிடையாது. கட்சித் தலைவர் பதவிக்கு போட்டி வைத்தால் நான் நிச்சயம் நிற்பேன் என பகிரங்கமாகவே அவர் கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.

இந்த நிலையில் அமைச்சர் பதவியிலிருந்து விலக அவர் விருப்பம் தெரிவித்துள்ளதாக வெளியாகியுள்ள தகவலால் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.