தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

கள்ளக்காதலுக்கு பலியான இளந்தளிர்: ராட்சசியான பூவரசி!

இதயமுள்ள அத்தனை பேரையும் இடிந்து போய் உட்கார வைத்திருக்கிறான் ஆதித்யா.

அப்பா - அம்மாவுக்கு டாடா காட்டிவிட்டு சென்னை சாலைகளில் காரில்
பள்ளிக்குப் பறக்கும் அந்த சிட்டுப் பையன் ஆதித்யா... தனக்கு சம்பந்தமே
இல்லாத நாகப்பட்டினம் பேருந்து நிலையத்தில் ஈக்கள் மொய்க்க
சூட்கேஸுக்குள் பிணமாகக் கிடந்திருக்கிறான்.

ஒரு பாவமும் அறியாத இந்த வெள்ளந்திப் பிள்ளையின் உயிருக்கு உலை
வைத்திருக்கிறது 'பெரிய' மனிதர்களின் கேடு கெட்ட கள்ளக் காதல்!

சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த ஜெயக்குமாரின் காதல்(!) மனைவி
ஆனந்தலட்சுமி. பிசினஸ் செய்வதோடு, ரிலையன்ஸ் இன்சூரன்ஸ் கம்பெனியில்
மண்டல மேலாளராகவும் பணிபுரிகிறார் ஜெயக்குமார். இவரது மனைவி ஆனந்தலட்சுமி
தனியார் ஐ.டி. கம்பெனியில் வேலையில் இருக்கிறார். இவர்களின் தாம்பத்ய
சின்னமாய் இரண்டாவதாகப் பிறந்தவன் ஆதித்யா.

ஜெயக்குமாருக்கு நெருக்கமானவரும், பஜாஜ் இன்சூரன்ஸ் நிறுவனத்தில்
பணிபுரிபவருமான பூவரசி, ஜெயக்குமாரின் வீட்டுக்கு அடிக்கடி
வந்துசெல்வார். அப்படித்தான் கடந்த ஜூலை 17-ம் தேதி வந்தவர்,
பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் கோயிலுக்கு ஆதித்யாவை அழைத்துச்
சென்றிருக்கிறார்.

அப்போது ஆதித்யாவை டாடா காட்டி அனுப்பி வைத்த அவனது அம்மா ஆனந்த லட்சுமி
அடுத்து ஆதித்யாவை எங்கே எப்படி பார்த்தார் தெரியுமா?

19&ம் தேதி திங்கள் நள்ளிரவு 1.30&க்கு நாகைக்கு காரில் வந்திறங்கிய
ஆனந்தலட்சுமியை நாகை நகர காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்ற போலீஸார்
முதலில் அவருக்குக் காட்டியது புத்தம் புது நீலநிற பூப்போட்ட கலர்
பேண்ட், நீலநிற 'டி' ஷர்ட்டையும்தான். அதைப் பார்த்த சில நொடிகளிலேயே...
'அய்யய்யோ இது என் பிள்ளை டிரஸ்தாங்க... அவன் போகும்போது இதைத்தாங்க
போட்டிருந்தான்' என்றபடியே ஓலமெடுத்து அழத் தொடங்கினார் ஆனந்தலட்சுமி.
அவரை ஆறுதல்படுத்திய போலீஸார் மெல்ல தைரியம் சொல்லி... சில
மணித்துளிகள் கழித்து மார்ச்சுவரிக்கு அழைத்துச் சென்றனர்.

செல்லும்போதே என் ஆதித்யாவுக்கு கன்னத்துல தழும்பு, கால் கட்டைவிரல்ல
தழும்பு இருக்கும்' என தன் செல்லத் தங்கத்தின் அங்க அடையாளங்களை
அழுகையினூடாக சொல்லிக்கொண்டே சென்ற ஆனந்தலட்சுமி, மார்ச்சுவரிக்கு
சென்று தனது மகன் கிடந்த கோலத்தைப் பார்த்ததுமே, மூர்ச்சையாகிவிட்டார்.
ஆமாம் அது ஆதித்-யாவின் உடல்தான்.

நாகப்பட்டினம் பேருந்து நிலையத்தில் 18&ம் தேதி மதியம்
புதுச்சேரியிலிருந்து வந்த ஒரு பேருந்தில் ஒரே ஒரு நீல நிற சூட்கேஸ்
மட்டும் கேட்பாரற்றுக் கிடந்திருக்கிறது. கடைசியில் அதைப்பார்த்த அந்த
பஸ்ஸின் கண்டக்டர் சூட்கேஸ் பற்றி போலீஸுக்கோ, போக்குவரத்து
அலுவகத்துக்கோ தகவல் கொடுக்காமல் அப்படியே தூக்கி பஸ் ஸ்டாண்டிலேயே
வைத்துவிட்டுப் போய்விட்டார்.

பயணிகள் தவறி விட்டுப்போனதாக இருக்கும் என்றெண்ணி அதனை பிச்சைக்காரர்கள்
கைப்பற்றித் திறக்க முயற்சி செய்ததை அருகில் உள்ளவர்கள் பார்த்து
போலீஸுக்குத் தகவல் கொடுத்திருக்கிறார்கள். விரைந்து வந்த போலீஸார்
அதில் வெடிகுண்டு இருக்குமோ என்ற அச்சத்தோடு, மிக ஜாக்கிரதையாக அவுரி
திடலுக்குத் தூக்கிச் சென்று பலத்த பாதுகாப்புடன் திறந்து
பார்த்தபோதுதான் கல் மனதையும் கரைய செய்யும் அந்தக் கொடூரம்
தெரியவந்தது.

நான்கு வயது மதிக்கத்தக்க இளந்தளிர் ஒன்று கழுத்தை நெரித்து கொலை
செய்யப்பட்டு, பாலிதீன் பையில் கட்டி வைக்கப்பட்டிருந்தது. புத்தம் புது
நீலநிற பூப்போட்ட கலர் பேன்ட்டும், நீலநிற 'டி' சர்ட்டும்
போடப்பட்டிருந்தது. கை கால்கள் முறுக்கி கட்டப்பட்டிருந்தன. பேருந்து
நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில சூட்கேஸ் கொண்டு வந்து வைத்தது
யார் என்று கண்டறியும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டனர். மேலும் அந்த
பஸ்ஸின் கண்டக்டர் யார் என்பதையும் போலீஸார் விசாரித்துவருகிறார்கள்.

ஏற்கனவே சென்னையில் ஆதித்யாவைக் காணோம் என போலீஸில் அவனது தந்தை புகார்
கொடுத்திருந்தார். இந்த நிலையில், நாளிதழ்களில் நாகப்பட்டினம் சம்பவம்
செய்தியாக வர இரண்டையும் முடிச்சுப் போட்டுப் பார்த்த சென்னை போலீஸார்
ஆதித்யாவை அழைத்துச் சென்ற பூவரசியை விசாரித்தனர்.

இதன் பிறகுதான், ''என்னை கல்யாணம் செய்துகொள்வதாக வாக்குறுதி கொடுத்து
இரண்டு முறை கர்ப்பமாக்கினார் ஜெயக்குமார். ஆனால் கல்யாணம்
செய்துகொள்ளவில்லை. அவருக்கு பாடம் கற்பிக்கும் விதமாகத்தான் அவரது மகன்
ஆதித்யாவை ஒரு வெறியில் கொலை செய்துவிட்டேன். என்னைத் தூக்கில் போட்டு
விடுங்கள்'' என உண்மையை ஒப்புக்கொண்டு கதறிக்கொண்டிருக்கிறார் பூவரசி.

இவ்வளவு நடந்து 19&ம் தேதி இரவு ஆனந்தலட்சுமி தனது மகனைப் பார்க்க நாகை
வந்தபோதும்...20&ம் தேதி வரை குழந்தையின் தந்தை ஜெயக்குமார் வரவில்லை.
ஆனந்தலட்சுமியிடம் சொல்லிவிட்டு நாகப்பட்டினம் நகராட்சி ஊழியர்கள், சில
நிருபர்கள் உள்ளிட்ட சிலர் ஆதித்யாவை தூக்கிச் சென்று கண்ணீரோடு அடக்கம்
செய்திருக்-கிறார்கள். தனது கள்ளக் காதல் தன் மகனையே பலிவாங்கிவிட்டதே
என்ற குற்ற உணர்ச்சியில் கடைசி வரை தனது மகனைப் பார்க்காமலேயே இரும்பு
இதயத்தோடு இருந்துவிட்டார் ஜெயக்குமார்.

திருமணம் முடித்து, கட்டித்-தங்கங்களான குழந்தைகள் பிறந்தபின்பும் கள்ளக்
காதல் என்னும் நச்சுக் கிருமியை வளர்க்கும், முகம் தெரியாத
ஜெயக்குமார்களை, அநியாயமாக பலியான ஆதித்யா ஒரு கணமாவது சிந்திக்க
வைத்திருக்கிறான்!