தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

துணுக்குத் தோரணங்கள்’

வாழப்பாடி வீட்டாரிடம் லஞ்சம்!
மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் வாழப்பாடி ராமமூர்த்தியின் வீடு சேலம்
அழகாபுரத்தில் இருக்கிறது. தற்போது இங்கு அவரது மகன் ராம சுகந்தன்
வசித்து வருகிறார். 'மழை பெய்வதால் வீட்டின் முன் சாக்கடை தேங்கி
சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. அதை சரிசெய்யுங்கள்' என்று ராம சுகந்தன்
வீட்டிலிருந்து சேலம் மாநகராட்சிக்கு பல தடவை போன் செய்தும் யாரும்
கண்டுகொள்ளவில்லையாம். வாழப்பாடியார் பேரவையைச் சேர்ந்த நிர்வாகிகள்
சிலர், மாநகராட்சி அலுவலகத்துக்குப் போய் பேசிய பிறகுதான் மாநகராட்சிப்
பொறியாளரை அனுப்பி வைத்திருக்கிறார்கள். அவர் வந்து, 'மாநகராட்சியிடம்
நிதி இல்லை. அதனால் நீங்கள் பணம் கொடுங்கள். சரி செய்து தருகிறோம்'
என்று தயங்காமல் கேட்டாராம். 'அடப்பாவிகளா... எத்தனையோ பேருக்கு இலவசமா
கேஸ் கனெக்ஷனும், பெட்ரோல் பங்க் லைசென்ஸும் வாங்கிக் கொடுத்த ஐயா
வீட்டுக்கா இந்த கதி?' என தலையில் அடித்துக் கொள்கிறார்கள் வாழப்பாடி
பேரவையினர்.
-வேல்

போலீஸின் கையை முறித்த மோதல்!
திருவாரூர் மாவட்ட ஊராட்சிக் குழுவில் 17-வது வார்டு மாவட்ட ஊராட்சிக்
குழு உறுப்பினர் பக்கிரிசாமி இறந்ததையடுத்து இடைத்தேர்தல்
அறிவிக்கப்பட்டது. தி.மு.க. சார்பில் கண்ணனும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
சார்பில் பிச்சையனும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டனர். ஜூலை 19-ம் தேதி
கண்ணனுக்கு ஓட்டுக் கேட்டு தி.மு.க.வினர், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள
ஓவரூர் கிராமத்துக்குச் சென்றனர். அப்போது, ''ஓட்டுக்கு காசு
கொடுக்கத்தான் தி.மு.க.வினர் வருகிறார்கள்'' எனக்கூறி இந்திய
கம்யூனிஸ்ட் கட்சியினர் அவர்களை வெளியேறச் சொல்ல... இருதரப்புக்கும்
இடையே மோதல் மூண்டது. இதில் தி.மு.க.வின் முத்துப்பேட்டை நகரச் செயலாளர்
கார்த்திக்கின் ஜ¦ப் கண்ணாடி உடைந்தது. சம்பவ இடத்துக்கு வந்த எடையூர்
இன்ஸ்பெக்டர் மீதும் தாக்குதல் நடந்ததில் அவரது கை முறிந்தது. நடந்ததற்கு
இரு தரப்பும் ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டிக் கொள்ள...அடுத்தடுத்த
நாட்களில் தி.மு.கவினருக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும்
ரத்தம் சிந்தும் அளவுக்கு மோதல் நடக்கக் கூடிய அபாயம் நிலவுகிறது.
-ராம்கி

புது கூட்டணி!
எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக(?) காங்கிரஸ், பா.ம.க.,
தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் கூட்டு சேர்ந்து தி.மு.க.வை எதிர்த்து
நிற்கும் உள்ளாட்சித் தேர்தல் நடக்கிறது. நாகை மாவட்டம் மயிலாடுதுறை
அருகேயுள்ள திருவாவடுதுறை ஊராட்சி மன்றத் தேர்தலில் செல்லக்குட்டி என்ற
தி.மு.க. வேட்பாளரை எதிர்த்து கலா என்ற காங்கிரஸ் வேட்பாளர் நிற்கிறார்.
கலாவுக்கு பா.ம.க., தே.மு.தி.க. கட்சியினர் பகிரங்க ஆதரவு திரட்டி
வருகிறார்கள். தி.மு.க.வுக்கு குத்தாலம் எம்.எல்.ஏ. அன்பழகனும்,
காங்கிரஸுக்கு மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜகுமாரும் களத்தில்
வரிந்துகட்டி தீவிர வாக்கு சேகரித்து வருகிறார்கள். ஜெயிக்கப் போவது
யாரோ?
-ராகவன்

பழனிமாணிக்கத்தின் 'களவாணி' பாலிடிக்ஸ்!
சமீபத்தில் மத்திய நிதித் துறை இணையமைச்சர் பழனிமாணிக்கம் தஞ்சாவூரில்
உள்ள தன் வீட்டில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
''மக்களின் நீண்ட நாள் கோரிக்கை-யான அரியலூர் --& தஞ்சாவூர் ரயில் பாதை
தனியார் நிறுவனம் மூலம் விரைவில் நிறைவேற்றப்படும், செங்கறையூர் மேம்பால
பணி முடியும் தருவாயில் உள்ளது. அதுவும் விரைவில் திறக்கப்படும்.
திருவையாறு பேருந்துநிலையம், சேதுபாவாசத்திரத்தில் கட்டப்பட்டு வரும்
பெரியார் நினைவு சமத்துவபுரம் போன்றவையும் விரைவில் திறந்து
வைக்கப்படும்'' என்றெல்லாம் அறிவிப்புகளை அடுக்கியவர், 'பொதுவான சப்ஜெட்
ஏதாச்சும் பேசுங்களேன்' என நிருபர்களிடம் நெருங்கி வந்தார். அப்போது ஒரு
நிருபர், 'சார்... தஞ்சாவூர் கதைக் களத்துல வந்திருக்கிற ÔகளவாணிÕ படம்
பார்த்தீங்களா?' என்று கேட்க, ''என்னது '... களவாணியா'? நான¢ எந்தக்
களவாணியையும் பார்க்கலையே?'' என¢று ஒரு ஊர்ப்பெயரை சேர்த்துச் சொன்னார்.
ஒரு நிமிடம¢ யோசித்த பத்திரிகையாளர்கள், அந்த ஊர் லோக்கல் தி.மு.க.வின்
மூத்த பிரமுகரின் சொந்த ஊர் என்பதைப் புரிந்துகொண்டு சிரிக்க முடியாமல்
சென்றனர்.

''தேவை சாதிவாரி கணக்கெடுப்பு!''
சாதி வாரி கணக்கெடுப்பு அவசியம் என்று விஸ்வகர்மா இன மக்களும் வலியுறுத்த
ஆரம்பித்துள்ளனர்.

''தமிழகத்தில் விஸ்வகர்மா சமுதாய மக்கள் பொருளாதாரத்திலும், கல்வி, வேலை
வாய்ப்பு போன்றவைகளில் மிகவும் பின்தங்கியுள்ளனர். இதில், கருமார்,
கன்னார், சிற்பி, தச்சர், பொற்கொல்லர் தொழில் செய்யும் விஸ்வ கர்ம
சமூகத்தினரை மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் சேர்த்து, வேலை வாய்ப்பில்
10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும். தமிழகம்
முழுக்க ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அதன்
மூலமே பின் தங்கிய சமூகத்திற்கு நன்மைகள் செய்ய முடியும்'' என்கிறார்
அகில இந்திய கைவினைஞர் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் விசு.
சிவக்குமார். இந்த கோரிக்கையை வலியுறுத்தி தமிழக கவர்னரையும் சந்திக்க
உள்ளாராம்.