தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

ஐநா கேட்டுக்கொண்டால் ராஜபக்சவின் போர்க்குற்றங்களை வெளிக்கொண்டுவர தயார்

இலங்கையில் கடந்த ஆண்டு தமிழர்களை கொன்றுகுவித்த ராஜபக்ச அரசு மீதான
போர்க்குற்ற விசாரணையை நியூயார்க்கில் நேற்று ஐ.நா.நிபுணர் குழு
தொடங்கியது. இக்குழுவிற்கு உதவுவதற்காக ஐநா மனித உரிமை ஆணையம் துணைக்குழு
ஒன்றையும் அமைத்துள்ளது.


அதே நேரத்தில் சூடான் அதிபர் அல் பஷீர் போர்க்குற்றங்களை விசாரித்த உலக
குற்றவியல் நீதிமன்றம், கறுப்பின பழங்குடி மக்களை கொன்று குவித்ததற்கு
அவரை கைது செய்ய ஆணையிட்டது.


அதிபர் அல் பஷீர் வழக்கு தொடர்பாக உலகப்புகழ் பெற்ற வழக்கறிஞர் லூயிஸ்
மொரீனோ அக்காம்போ, 'போர்க்குற்ற உண்மையை வெளியில் கொண்டு வந்துள்ளோம்.
அதிபர் அல் பஷீர் மறைக்க முயன்ற உண்மைகள் தற்போது வெளிப்பட்டுள்ளது. இந்த
வழக்கு தொடர்பாக கொலை மிரட்டல்கள் வந்தன. ஆனால் அவற்றை பொருட்படுத்தாது
இந்த வழக்கு நடத்தப்பட்டது என்று தெரிவித்தார்.


அவர் மேலும், 'ஐநா கேட்டுக்கொண்டால் இலங்கை அதிபர் ராஜபக்சவின்
போர்க்குற்ற விசாரணை வழக்கில் ஆஜராகி உண்மைகளை வெளிக்கொண்டுவர தயார்
என்று தெரிவித்தார்.