தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

இணையதளம் அம்பலப்படுத்திய ரகசியங்கள் புதியவை அல்ல: ஒபாமா


வாஷிங்டன், ஜூலை 28: விக்கிலீக்ஸ் இணையதளம் அம்பலப்படுத்திய புலானாய்வு ரகசிய தகவல்களில் புதிய  விஷயங்கள் ஏதும் இல்லை. அதில் உள்ள பல விஷயங்கள் ஏற்கெனவே விவாதிக்கப்பட்டுவிட்டன என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்தார். ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்திவரும் போர் தொடர்பாக போர்க்களத்திலிருந்து திரட்டப்பட்ட புலனாய்வு ரகசிய தகவல்களை விக்கிலீக்ஸ் என்கிற இணையதளம் வெளியிட்டது. இது பெரியபரபரப்பை ஏற்படுத்தியது. பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ அமைப்பு அல்-காய்தா தீவிரவாதிகளுடனும், தலிபான்களுடனும் நெருங்கிய உறவுவைத்து அவர்களுக்கு உதவுவதாகவும் புலனாய்வு ரகசிய குறிப்புகளில் உள்ளது. இந்த ரகசிய குறிப்புகளை விக்கிலீக்ஸ்  அம்பலப்படுத்தியது. ஆப்கானிஸ்தான் போர்க்கள ரகசிய தகவல்கள் அம்பலமாகவே ஆப்கான் விவகாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.அமெரிக்காவின் இரட்டைக்கோபுரம் மீது 2001 செப்டம்பர் 11ம் தேதி அல்காய்தா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலும் சரி அமெரிக்கா மீதும் அதன் தோழமை நாடுகள் மீதும் நடந்த இதர தாக்குதல்களும் சரி, ஆப்கானிஸ்தானில் தான் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது. இதை அறிந்த அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளை அடியோடு ஒழிக்க தனி கொள்கையை வகுத்தது. இதற்காக பாகிஸ்தானையும் துணைக்குச் சேர்த்துக்கொண்டது. விக்கிலீக்ஸ் இணையதளம் ரகசிய புலனாய்வு தகவல்களை அம்பலப்படுத்தியபிறகு முதல்முறையாக நாடாளுமன்ற அவைத் தலைவர்களை சந்தித்து ஒபாமா ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் நிருபர்களிடம் ஒபாமா பேசினார். ஆப்கானிஸ்தானில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்கப் படைகளுக்கு தேவையான வசதிகள் செய்து தர போதிய நிதியுதவி வழங்க செனட் அவை ஒப்புக்கொண்டதுபோல் பிரதிநிதிகள் அவையும் சம்மதம் தெரிவிக்கவேண்டும் என ஒபாமா வலியுறுத்தியுள்ளார். விக்கிலீக்ஸ் இணையதளம் அம்பலப்படுத்திய தகவல்களில் எதுவுமே புதியவை அல்ல. அதில் உள்ள விஷயங்கள் ஏற்கெனவே விவாதிக்கப்பட்டவைதான். ஆப்கானிஸ்தானில் செயல்படும் தீவிரவாத அமைப்புகளை ஒடுக்க அமெரிக்கா புதிய யுக்தியை வகுத்து செயல்பட்டுவருகிறது. இது வெற்றிகரமாக அமைய முடிந்த எல்லா வழிகளும் கையாளப்படுகிறது. போர்க்களத்தில் திரட்டப்பட்ட ரகசிய புலனாய்வு தகவல்கள் அம்பலமானது கவலை அளிக்கிறது. ரகசிய தகவல்கள் அம்பலமாவது போர்க்களக்தில் உள்ள படையினருக்கு நல்லதல்ல. அது ஆபத்தையே விளைவிக்கும். மேலும் போர் நடவடிக்கைகளுக்கும் அது குந்தகம் ஏற்படுத்திவிடக்கூடும் என்பதே எனது முக்கிய கவலை என்று நிருபர்களிடம் தெரிவித்தார் ஒபாமா.