தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

கன்ட்ரோல் ரூமிலிருந்து ஏட்டு ஏகாம்பரம்

காணாமல் போன பில் புக்!

திருச்சி மாநகர போலீஸ் நிலையங்களில் தணிக்கைத் துறையினர் ஆய்வு
செய்தபோது, பல காவல் நிலையங்களில் போக்குவரத்து அபராதத் தொகை வசூலித்த
பில் புக்குகள் கன்னாபின்னா என திருத்தப்பட்டிருந்ததாம். சில காவல்
நிலையங்களிலோ பில் புக்குகளே காணாமல் போனதாக தகவல் வந்தது. அதிலும்
கண்ணான நிலையத்தில் 'கலை' யான அதிகாரியின் பொறுப்பில் பல பில் புக்குகள்
காணவில்லையாம். மிரண்டு போன தணிக்கைத் துறையினர் பொதுமக்கள் பொருட்கள்
காணவில்லை என்றால் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுப்பார்கள். போலீஸ்
நிலையத்தில் காணாமல் போனதற்கு எங்கு புகார் கொடுப்பது என்று
நொந்துபோய் திரும்பியிருக்கிறார்கள்.

''சுதந்திரமா செயல்பட முடியலை!''

நாமக்கல் டி.எஸ்.பி. சீனிவாசன் லஞ்ச ஒழிப்பு போலீஸாரால்
பிடிக்கப்பட்டதும் மாவட்டத்-திலுள்ள பல போலீஸார் தற்காலிகமாக கையைக்
'கட்டி' வைத்திருக்கிறார்கள். ஆனால், டி.எஸ்.பி. கேம்ப் மட்டும் பயங்கர
கவலையோடு இருக்கிறதாம். ''மாட்டிய டி.எஸ்.பி. இருந்தவரைக்கும் வசூல்
விஷயத்தில் எங்களை சுதந்திரமாக செயல்படவிட்டார். தான் வசூல்
பண்ணியதிலும், ஒரு சிறிய தொகையை அலுவலகத்தில் இருக்கும் மற்ற
காவலர்களுக்கு செலவுக்கு கொடுப்பார். அவர் மாட்டிக் கொண்டதால் வசூல்
வேட்டை பாதிக்கப்பட்டுவிட்டதே...'' என்பதுதான் அவர்களின் புலம்பல்.

அந்த நாலு பேருக்கு அல்வா!

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி மதுவிலக்குப் பிரிவில் உள்ள பெண்
அதிகாரி ஒருவர், கள்ளச்சாராய பேர்வழிகளிடம் பணம் பண்ணுவதிலும் மகா
கில்லாடியாம். இவருக்கு முட்டுக்கட்டையாக இருந்த நான்கு காவலர்களை
மேலிடத்தில் போட்டுக்கொடுத்து திருவாரூருக்கு மாற்றிவிட்டு தனிக்காட்டு
ராணியாக வலம் வருகிறாராம். திடீர் மாற்றல் உத்தரவால் புலம்புகிறார்கள்
அந்த நான்கு காக்கிகள்.

ஆமை வேகம்!

நாகை மாவட்ட நிர்வாகம், எஸ்.பி. அலுவலக செயல்பாடுகளைக் கண்காணித்து
மேலிடத்துக்கு முன்கூட்டியே தகவல் அனுப்புவதுதான் எஸ்.பி.சி.ஐ.டி.
பிரிவின் பிரதான பணி. ஆனால் நாகை மாவட்டத்தில் இந்த பிரிவு ஆமை
வேகத்தில்தான் இயங்குகிறதாம். 'ரொம்ப முக்கியமான எக்ஸ்க்ளுசிவ் செய்தி
சார்' என்று பில்டப் எல்லாம் கொடுத்து இவர்கள் செய்தி அனுப்ப, 'நீங்க
முந்தா நாள் பேப்பர் படிக்கலியா? அதுல இதப்பத்தி விரிவா
வந்திருக்குய்யா... என்னதான் வேலை பாக்குறீங்க?' என மேலிடத்திலிருந்து
செம கடியாம்.