தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

போபால் விஷவாயு வழக்கின் ஆவணங்கள் தலைமறைவு

போபால் விஷவாயு சம்பவத்தை விசாரித்த என்.கே.சிங் கமிஷனின் ஆவணங்கள் தலைமை
செயலகத்திலிருந்து காணாமல் போய்விட்டன. எனவே, இந்த விஷவாயு சம்பவம்
குறித்து மீண்டும் தீர விசாரிக்கப்படும், என, மத்தியப்பிரதேச முதல்வர்
தெரிவித்துள்ளார்.


மத்தியப்பிரதேச சட்டசபையில் நேற்று போபால் விஷவாயு சம்பவம் குறித்து
காங்கிரஸ் உறுப்பினர் ஆரிப் ஆகியூல் ஒத்திவைப்பு தீர்மானத்தை கொண்டு
வந்தார்.


இந்த தீர்மானம் தொடர்பான விவாதத்தின் போது முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்
கூறியதாவது: உலகின் மிக மோசமான அழிவு சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை
தண்டிக்காமல் விடுவதில்லை; பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான இழப்பீட்டு
தொகையை வாங்கித் தருவது என, எங்கள் அரசு உறுதி பூண்டுள்ளது. விஷவாயு
சம்பவத்துக்கு காரணமான யூனியன் கார்பைடு ஆலையின் தலைவர் வாரன் ஆன்டர்சன்
கைது செய்யப்பட்டும் பாதுகாப்பாக தப்பிச்செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எந்த சூழ்நிலையில் யாருடைய உத்தரவின் பேரில் அவர் பாதுகாப்பாக
அனுப்பப்பட்டார், என்பதற்கு அப்போதைய மாநில முதல்வர் அர்ஜுன்சிங் பதில்
சொல்லியே ஆக வேண்டும். விஷவாயு சம்பவம் குறித்து விசாரிக்க
ஏற்படுத்தப்பட்ட ஒருநபர் என்.கே.கமிஷனின் விசாரணை நீட்டிக்கப்படவில்லை.


அப்போதைய அரசு இந்த சம்பவம் தொடர்பாக, மத்திய அரசின் சொல்படி தான்
செயல்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் தான் எப்படி பேச வேண்டும், என்பது கூட
மத்திய அரசிடம் கேட்டு தான் அப்போதைய முதல்வர் பதில் அளித்துள்ளார்.
என்.கே.கமிஷன் விசாரணை அறிக்கை குறித்த ஆவணங்கள் கூட தலைமை
செயலகத்திலிருந்து காணாமல் போய்விட்டன. அந்த அளவுக்கு யூனியன் கார்பைடு
ஆலை நிர்வாகத்தை காப்பாற்ற முயற்சிகள் நடந்துள்ளன. பல ஆயிரம் பேர் பலியான
இந்த சம்பவத்தை குற்ற வழக்காகவோ, பல பேர் கொல்லப்பட்ட சம்பவ வழக்காகவோ
கருதி சி.பி.ஐ.,இந்த வழக்கை விசாரிக்காமல் சாதாரணமாக விசாரித்துள்ளது.
எனவே, அப்போதைய சம்பவத்தின் பின்னணியை மீண்டும் நாங்கள் தீர
விசாரிப்போம். இவ்வாறு சிவராஜ் சிங் சவுகான் கூறினார்.