தமிழகத்தில் தேர்தல்கள் எப்படி நடக்கின்றன எனபது எல்லா
பத்திரிக்கைகளிர்க்கும் , எல்லா ஊடகங்களிற்கும் தெரியும்.
எல்லா கட்சி அரசியல்வாதிகளிர்க்கும் தெரியும்.
காவல் துறைக்கும் தெரியும் .
பொது மக்கள் எல்லாருக்கும் தெரியும்.
தேர்தல் என்றால் மிகபெரிய ஜனநாயக கடமை என்ற நிலையில் இல்லை., ஊர்
திருவிழா மாதிரி அதுவும் ஒன்று என்றாகிவிட்டது.
தேர்தல் நடைமுறையில் ஜனநாயகம் காப்பற்ற பட வேண்டும் என்று யாரும் எந்த
பிரதான அரசியல் சக்திகளும் நினைத்ததாக தெரியவில்லை.
கடந்த சட்ட மன்ற பொது தேர்தலிலும் சரி , இப்போது முடிந்த பாராளுமன்ற
பொது தேர்தலிலும் சரி. ஓட்டுக்கு எவ்வளவு காசு என்பதே வாக்குகளை
தீர்மானிப்பதாய் உள்ளது.
இதை தடுக்க முடியாத அமைப்புதான் தேர்தல் ஆணையம். அதன் தலைவர் தேர்தல் ஆணையர்.
தேர்தல் ஆணையாளர் நேர்மையாக மட்டும் இருந்தால் போதாது. அவர் சொல்படி
கேட்கும் கீழ் மட்ட அதிகாரிகள் இருக்க வேண்டும்.
தேர்தல் ஆணையரின் எண்ணங்களை அப்படியே கடைபிடிக்கும் காவல் துறை வேண்டும்.
கீழ் மட்ட அதிகாரிகளும் காவல்துறையும் மாநில அரசின் கட்டுப்பாட்டில்
இருக்கும் பொழுது இது எப்படி சாத்தியம் ஆகும்.?
இப்போது பணம் இல்லாதவன் அரசியலை நினைத்து கூட பார்க்க முடியாத அளவிற்கு
பெரும் பணக்காரர்களின் விளையாட்டு ஆகிவிட்டது.
அப்படியே ஏழைகளும் வாழ்வின் கீழ்மட்ட மக்களும் , ஒரு கட்சியின் பலத்தில்
தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டால், அவனும் எப்படி பணக்காரன் ஆவது
என்றுதான் நினைக்கிறான்.
அவனை வளப்படுத்தி கொள்ளத்தான் முழு அரசியலையும் பயன்படுத்துகிறான்.
நிற்க.
இன்றைக்கு வந்துள்ள செய்தி. தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி , நேர்மையாக
தேர்தலை நடக்க முயற்சித்த நரேஷ் குப்தா பதவிக்காலம் முடிந்து
வெளியேறுகிறார்.
அந்த பதவிக்கு வரும் எண்ணமும் விருப்பமும் பணியில் இருக்கும் எந்த
அதிகாரிக்கும் வரவில்லை.
யாரையாவது கட்டாயம் என்று போட்டால்தான் உண்டு.
ஏனென்றால் , நரேஷ் குப்தா சந்தித்த மிரட்டல்கள்.- அரசின் இடமிருந்து ,
அரசு அதிகாரிகளிடம் இருந்து.
நரேஷ் குப்தாவின் கீழ் வேலை செய்யும் சந்திரசேகரன் என்ற ஒருவர் நடத்திய
தேர்தல்தான் , உலகம் போற்றக்கூடிய சென்னை மாநகராட்சி தேர்தல்.
இதே நரேஷ் குப்தாவின் , பணிக்காலத்தில் நடந்ததுதான் மற்றொரு உலகம்
போற்றும் 'திருமங்கலம்' இடை தேர்தல்.
அந்த திருமங்கலம் இடைதேர்தல் , இப்பொழுதும் 'திருமங்கலம் பார்முலா' என்று
சொல்லும் அளவிற்கு பெயர் பெற்ற தேர்தல்.
இந்த இரண்டு தேர்தல்களை பார்த்தால் இந்த தலைமை தேர்தல் அதிகாரி எனும்
பதவியை ஏன் நேர்மையான அதிகாரிகள் விரும்புவதில்லை என்று தெரியும்.
மற்றொன்று நேர்மையான அரசு அதிகாரிகள் என்று கொஞ்சமேனும் பெயர் எடுத்த
கிறிஸ்து தாஸ் மற்றும் உமா ஷங்கருக்கு இன்று ஏற்பட்டுள்ள கதி.
இவை எல்லாமும்தான் , நேர்மையான அதிகாரிகள் ஒன்றுக்கும் உதவாத இந்த
பதவிக்கு வர விரும்புவதில்லை.
பின்னர் நன்றாய் போய்விட்டது , ஊழல் அதிகாரிகள் வர வேண்டியதுதானே ?
அதற்கும் இந்த துறை வசதியில்லை.
ஆமாம் மற்ற துறைகள் போல "வரும்படி" பார்க்கும் துறையாக இது
இல்லை.அரசியல்வாதி வாக்களனுக்குத்தான் காசு கொடுப்பானே தவிர , தலைமை
தேர்தல் அதிகாரிக்கு அல்ல.
மாநில மற்றும் மத்திய அரசாங்கத்தின் கைத்தடி அதிகாரி , "ஆமாம் சாமி"
ஒருவர் வருவார் ., பெயர் முகம் தெரியாத அவரை வாழ்த்துகிறோம்.
வாழ்க ஜனநாயகம் !