தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

தவளை மற்றும் தேரை - சில உண்மைகள்

தவளை, நீரிலும் நிலத்திலும் வாழும் உயிரினம். தங்களுடைய ஆரம்ப கால வாழ்க்கை முழுதும் நீரில் வாழும். வளர்ந்த பிறகு உடம்பை ஈரமாக்கிக் கொள்ள நீரில் இருக்கும்.



* தவளைகளுக்கு பெரிய தலைகள், நீண்ட கால்கள். வால் கிடையாது.



* தவளைகள் நன்கு நீந்தக்கூடியவை. நிலத்தில், நடப்பதைவிட குதித்துக் குதித்துச் செல்லும்.



* ஈரப்பதம் உள்ள எல்லா இடத்திலும் தவளைகள் இருக்கும். இவற்றால் கடல் போன்ற உப்பு நீரில் வாழமுடியாது.

* உலகில் மிகப்பெரிய தவளையின் பெயர் கோலியாத். இது மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ளது. இதன் எடை மூன்று கிலோ. நீளம் 80 சென்டி மீட்டர்.



* உலகின் மிகச்சிறிய தவளை பிரேஸிலில் உள்ளது. இதன் நீளம் 8.5 மில்லிமீட்டர் மட்டும்தான்.



* தவளைகளின் இயல்பே குதிப்பதுதான். தவளைகளில் அதிக உயரம் குதிப்பவை தென்ஆப்பிரிக்காவின் ஊசி மூக்குத் தவளைகள். வெறும் ஆறு சென்டிமீட்டர் நீளம் இருக்கும் இந்தத் தவளைகள் அநாயாசமாக 5.35 மீட்டர் உயரத்தை ஒரே தாவலில் குதிக்கும்.



* தவளைகளும் தேரைகளும் சேர்ந்து 2600-க்கும் மேற்பட்ட வகைகள் உண்டு.



* தென் அமெரிக்காவின் விஷத்தவளைகளிடம் மிகுந்த விஷம் இருக்கும். இதன் விஷத்தை அம்புகளில் தடவி மிருங்களையும் எதிரிகளையும் கொல்ல உபயோகிப்பார்கள் அந்தப்பகுதி மக்கள். இவற்றின் பிரகாசமான நிறமே கொல்லவரும் மிருகங்களிடமிருந்து காப்பாற்றும்.



* வட அமெரிக்காவின் சிறுத்தைத் தவளை, பெரும்பாலான தவளைகள் போல் இரவில்தான் சுறுசுறுப்பாக இருக்கும். எதிரி மிருகங்கள் துரத்தினால் ஒவ்வொரு குதிப்புக்கும் இடவலமாக மாறி மாறிச் சென்று மிருங்களைக் குழப்பும்.



* பெரிய தவளைகள் எல்லாம் சின்னச் சின்ன மிருகங்களைக் கொன்று தின்னும். சில தவளைகள் தங்கள் நீளமான நாக்கை நீட்டிப் பூச்சிகளைப் பிடிக்கும். மற்றவை குதித்துப் பூச்சிகளைப் பிடிக்கும்.



* இனவிருத்தி காலத்தில் ஆண் தவளைகளும், பெண் தவளைகளும் தகுதியான குளம், குட்டைகளுக்குப் போகும்.

* பெண் தவளைகள் ஏகப்பட்ட முட்டைகள் போடும். இவை உடைந்து குட்டித் தவளைகள் வரும். குட்டித் தவளைகள் தங்களைத் தாங்களே பாத்துக்கொள்ள வேண்டும். சிறு தாவரங்களை உண்ண ஆரம்பித்து சில நாட்களில் சின்ன சின்ன நீர்வாழ் மிருகங்களை உண்ண ஆரம்பிக்கும்.



* தவளைகள் சுவாசிக்க நுரையீரலை மட்டுமல்லாமல் தோலையும் பயன்படுத்தும். இதற்காக தோலில் சின்ன ஓட்டைகள் இருக்கும்.



* ஆப்பிரிக்கா காட்டில் வாழும் புல்ஃப்ராக் வகைத் தவளைகள் கூர்மையான பற்களுடன் இருக்கும். குட்டிகளுக்கு யார் மூலமாவது ஆபத்து வந்தால் _ அது பாம்போ, மனிதனோ… உடனடியாக சண்டைக்குப் போய்விடும்.



* ஒரு மில்லிமீட்டரில் இருந்து ஐந்து மில்லிமீட்டர் அல்லது அதற்கு மேலும் ஒன்றிரண்டு மில்லிமீட்டர் கூடிய அளவுகளில் முட்டையிடும். இவை ஆயிரக்கணக்கில் இருக்கும். ஆனால் பிழைப்பது பத்தோ, இருபதோதான்.



* பூச்சிகள், புழுக்கள், மீன்கள், பிற குட்டித் தவளைகள் போன்றவை தவளைகளின் உணவு.



தவளை, தேரை


* தேரைகள் தவளைகளின் சகோதர இனம். இவை பார்ப்பதற்கும், இவற்றின் வாழ்வு முறையும் ஓரிரு வித்தியாசங்களைத் தவிர தவளைகள் போல்தான்.



* தேரைகளின் தோல் தவளைகளின் தோலைவிட ஈரப்பதம் குறைந்திருக்கும். தேரைகளுக்குப் பற்கள் இல்லை. இரண்டிற்கும் விலா எலும்புகள் வேறுபட்டிருக்கும்.



* தேரைகளில் பெரிய தேரையின் பெயர் Marine Taod. 24 சென்டிமீட்டர் நீளமும், 1.3 கிலோ எடையும் இருக்கும்.



* தேரைகளின் ஆயுட்காலம் முப்பது வருடங்களும் அதற்கு மேலும் அமையலாம்.


* தேரைகள் சுமார் மூவாயிரம் முட்டைகள் இடும்.



என்ன நண்பர்களே நீங்கள் படிக்கும் போது தவளையின் காலை வைத்து இரசாயன பகுப்பு பற்றி படித்திருக்கிறோம். அது ஒரு ஈருடக வாழ் பிராணி ஆகும். ஆனால் தேரை அப்படி இல்லை. தவளை நமது விவசாயிகளிற்கு எல்லாம் நல்ல தோழனாக இருந்து மண்ணில் உதவி புரிகிறது. என்ன வேடிக்கை என்றால் அந்த தவளை, தேரை போன்ற விலங்குகளை எமது ஈழ மக்கள் பிடித்து அங்கே வந்துள்ள சீனன் கூலி படிக்கு விற்பது தான். என்னவோ எல்லாம் அங்கே நடக்கும் போது இது என்ன ஆச்சரியமா நண்பர்களே.