ண்டும் மதப் பிரச்னையால் குலுங்குகிறது வேலூர் கோட்டை!
வேலூரின் மையப் பகுதியில் 138 ஏக்கர் பரப்பளவில் சுமார் 3 கிலோமீட்டர் சுற்றுச் சுவர், அகழியுடன் அமைந்துள்ள வேலூர் கோட்டைக்குள், இந்து, முஸ்லிம், கிறித்துவ வழிபாட்டுத் தலங்கள் இருக்கின்றன. ''தொல்லியல் துறையின் கட்டு-பாட்டிலிருக்கும் கோட்டைக்குள் கோயிலிலும், தேவாலயத்திலும் வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், மசூதியில் மட்டும் தொழுகைக்கு அனுமதி இன்றி காவல் துறையினர் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறார்கள்'' என மீண்டும் போராட்டத்தில் குதித்திருக்கிறார்கள் இஸ்லாமியர்கள்.
ஜூலை 3-ம் தேதி பல்வேறு முஸ்லிம் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கோட்டைக்குள் திரண்டிருக்க, த.மு.மு.க.வின் வேலூர் மாவட்ட செயலாளர் இஜாஸ் அகமது காவல்துறையினருடன் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார். நாம் அவரிடம் பேசியபோது, ''ஔரங்கசீப் ஆட்சியின்போது அவரது உத்தரவின் பேரில் தளபதி சந்தா சாஹிப் வேலூர் கோட்டையினுள் இந்த மசூதியை 1750&ல் கட்டி முடித்தார். பின்னர் வெள்ளையர் காலத்தில் சிறை பிடிக்கப்பட்ட சுதந்திர போராட்ட வீரர் திப்புவின் மகன்களை இந்த கோட்டையினுள் சிறை வைத்தனர். அப்போதெல்லாம் இந்த மசூதி வழிபாட்டில் இருந்தது. பின்னர் 1921&ம் ஆண்டில் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டின்கீழ் வந்துள்ளது. அப்போதும் கூட இந்த மசூதியில் இமாம் இல்லாமல் வழிபாடு நடந்தது.
ஆனால், பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்தபோது துணை பிரதமர் ஆக இருந்த அத்வானியின் உத்தரவால் வேலூர் கோட்டை மசூதியை தபால் ஆபீஸாக சித்தரித்துவிட்டனர். அதன் பின்னர் எங்கள் போராட்டத்தின் வீரியத்தை பார்த்து அந்த மசூதி இஸ்லாமியர்களின் பார்வைக்கு திறந்து வைக்கப்படும் என ஒப்பந்தம் போட்டனர். ஆனால், இரண்டு வருடங்களாகியும் இன்றுவரை அதைத் திறந்து வைக்கவில்லை. இந்த நிலையில் மசூதியைச் சுற்றி சுவர் எழுப்பவும், மின்வேலி அமைக்கவும் பள்ளம் தோண்டிவருகிறார்கள். அதைத் தடுக்கத்தான் இப்போது போராடிவருகிறோம். மசூதி திறப்பது குறித்து அனைத்து மத மக்களிடமும் கையெழுத்து வேட்டை நடத்தி ஆதரவு திரட்டப் போகிறோம்'' என்றார் உறுதியாக.
இதுபற்றி பி.ஜே.பி.யின் வேலூர் மாநகர செயலாளர் சி.ஆர்.பாலாஜியிடம் பேசியபோது,
''கோட்டைக்குள்ளிருந்த குதிரை லாயத்தை வெள்ளையர்கள் தபால் ஆபீஸாக உபயோகப்படுத்தினர். அதற்கு சான்றுள்ளது. அந்த கட்டடத்தைத்தான் முஸ்லிம்கள் தொழுகை நடத்தப்பட்ட மசூதி என்கின்றனர். கொஞ்ச காலத்துக்கு முன்பு வரை அவர்கள் அந்த மசூதியில் தொழுகை நடத்தும்போதெல்லாம், இந்துக்கள் தேங்காய் உடைப்பதையும் மேளம் அடிப்பதையும் எதிர்த்தனர். இது தேவையற்ற மதப் பிரச்னைக்கு வழி வகுப்பதால் இங்கு எங்களுக்கு வழிபாட்டு தலம் வேண்டாமென அப்போதைய வேலூர் எம்.பி.யான அப்துல் சமது தனது கைப்பட எழுதிக்கொடுத்துச் சென்றுள்ளார். ஆனால் இப்போது சில அரசியல்வாதிகளின் தூண்டுதலால் மீண்டும் பிரச்னை செய்கிறார்கள்'' என்றார்.
மசூதி சர்ச்சை குறித்து தொல்லியல் துறையின் அதிகாரியான பலராமனிடம் பேசினோம். ''அரசு உத்தரவுப்படி சுற்றுவேலி அமைக்க பள்ளம் வெட்டியது உண்மை. முஸ்லிம்கள் ஆட்சேபம் தெரிவித்ததால் தற்சமயம் பணிகளை நிறுத்தி வைத்திருக்கிறோம். சர்ச்சைக்குரிய அந்த இடம் மசூதி என்றுதான் எங்களது ரெக்கார்டுகளில் உள்ளது'' என்கிறார்.