தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

வைகோவும் நெடுமாறனும் 20 வருடங்களாக சொன்னது இதுதான் !

தலையங்கம் :

சோனியா காந்தி அல்லது காங்கிரஸ் அரசு செய்த மிக பெரிய பாவ செயலுக்கு மீண்டும் தமிழர்கள்தாம் பாதிக்கபடபோகிறார்கள்.இந்த முறை தமிழக தமிழர்கள்.மத்திய அரசை பொறுத்தளவில் எந்த தமிழன் செத்தாலும் அழிந்தாலும் கவலை இல்லை. அது   ஈழ தமிழனாக  இருக்கட்டும் அல்லது தமிழ்நாட்டு தமிழனாக இருக்கட்டும்.




இலங்கையில் தமிழர்கள் வலுவுடன் இருப்பது இந்தியாவிற்கு அரண் என்று கால் நூற்றாண்டு காலமாய்  இங்குள்ள தமிழ் உணர்வாளர்கள் முக்கியமாய் வைகோ மற்றும் நெடுமாறன் போன்றோர் சொல்லி வருகின்றனர்.இந்த இருவரும் பழுத்த அரசியல் அறிவுள்ளவர்கள். மக்களின் மன ஓட்டத்தை அறிந்தவர்கள். மேலாய் தமிழர் நலனிலும் மிகுந்த அக்கறை உள்ளவர்கள்.இந்த தலையங்கதிர்க்காய்  , நம் மீது கூட அரசியல் காழ்புணர்ச்சி,  கட்சி சார்ந்து எல்லாம். ஆனால் உண்மையை சொல்லுவதில் எந்த  தயக்கமும் இல்லை நமக்கு.



ஈழத்தில் தமிழர்கள்,  இலங்கை-இந்தியா கூட்டு போரினால் அழிந்தார்கள்.இனி இலங்கை-சீனா கூட்டுபோரினால்,   பெயருக்கு இந்தியா பாதிப்படையும் என்றாலும் , இந்தியா  இரண்டாம் தரமாய் நடத்தும் , தமிழர்கள்தாம் களத்தில் உண்மையில் மிகவும் பாதிக்கப்படுவார்கள்.




காங்கிரஸ் கட்சியானது, இந்தியாவா ? ராஜீவ் காந்தியா என்று  அவர்களிர்க்குள்ளேயே,  கேள்வி கேட்டு  , இந்தியாவை விட்டுவிட்டார்கள்.சீனா, இந்தியாவின் மீது தாக்குதல் நடத்தினால் , சோனியா பாதுகாப்பாய்  இத்தாலி ஓடி விடுவார் என்று அரசியல் பார்வையாளர்கள்  பலர் சொல்லுவதை மறுக்காமல்  இருக்க முடியவில்லை.இப்போதைக்கு சீனாவிற்கும் , இந்தியாவிற்கும் சண்டை நடந்தால் அது அருணாச்சல பிரதேசத்தில் இருக்காது. ராமேஸ்வரம்  முதல் மதுரை வரை அழியும். பாண்டிச்சேரி முதல் கல்பாக்கம் வரை அழியும். ஈழத்தில் தமிழர்களை அழித்து, இந்தியாவை பாதுகாப்பற்ற சூழலில் காங்கிரஸ் அரசு நியமித்து விட்டது.



இன்றைய செய்தி :

இலங்கையில் தமிழர் பகுதியில் மீன் பிடிக்க சீனர்களுக்கு அனுமதி


இலங்கையில் தமிழர் பகுதியான நந்திக்கடல் பகுதியில் மீன் பிடிக்கும் உரிமையை சீனர்களுக்கு வழங்க இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது.முல்லைத்தீவில் உள்ள நந்திக்கடல் பகுதியில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்ட பிறகு (இதில் மாற்று கருத்து நமக்கு உண்டு)அப்பகுதி இலங்கையின் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.அங்கிருந்த ஆயிரக்கணக்கான தமிழர்கள் முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டனர். அதன்பிறகு படிப்படியாக தமிழர்கள் அவரவர் வசிப்பிடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.இந்நிலையில் தமிழர்கள் வாழ்வாதாரத்துக்கான நந்திக்கடல் பகுதியில் மீன் பிடிப்பதற்கு சீனர்களுக்கு இலங்கை அரசு அனுமதி அளிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.



இதற்கு தமிழர் தேசிய கூட்டணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோஹராதலிங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் கடந்த புதன்கிழமை அவர் பேசியுள்ளார். ஆனால் இலங்கை அரசு இதற்கு பதில் ஏதும் தெரிவிக்காமல் மெüனம் காத்துவருகிறது. முல்லைத்தீவு கடல் பகுதியில் மீண்டும் மீன் பிடிக்கலாம் என்று இலங்கை அரசு அறிவித்ததைத் தொடர்ந்து தமிழர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீன்பிடித் தொழிலில் இறங்க அவர்கள் தயாராவதற்குள் இலங்கை அரசின் நடவடிக்கை அவர்களுக்கு அதிர்ச்சியைத் தந்துள்ளது.



நந்திக்கடல் பகுதியில் 60.45 சதுர கி.மீ. சுற்றளவில் பல்வேறு வகையான இறால்கள் அதிக அளவில் உள்ளன. மருத்துவ குணம் வாய்ந்த விலை மதிப்புமிக்க மீன்களும் அப்பகுதியில் உள்ளன. இவற்றை ஏற்றுமதி செய்வதன் மூலம் அதிக அளவில் வருவாய் ஈட்டமுடியும் என்ற நோக்கில் அரசு இத்தகைய நடவடிக்கையில் இறங்கியுள்ளது.



இந்நிலையில் நந்திக் கடல் பகுதியில் இறால் பண்ணைகளை அமைப்பதற்கு சீனர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று இலங்கை மீன்வளத் துறை அமைச்சர் டாக்டர் ரஜிதா சேனரத்னே தெரிவித்துள்ளதாக பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது. அவரைத் தொடர்புகொண்டபோது இதை உறுதி செய்ய மறுத்துவிட்டார்.


இலங்கை கடல் பகுதியில் மீன் வளம் சிறப்பாக உள்ளதால் வணிக ரீதியாக அதை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.இலங்கை அரசின் இத்தகைய நடவடிக்கையால் அப்பகுதியில் வசிக்கும் தமிழ் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கும் பட்சத்தில் உள்ளூர் மக்கள் மீன் பிடிப்பதற்கு தடை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.



இதனால் தமிழர்களின் பாரம்பரிய தொழில் முடக்கப்படுவதுடன் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது என்று வினோ நோஹரதலிங்கம் தெரிவித்துள்ளார்.இப்பகுதியில் உள்ள மக்களுக்கு கடலில் சென்று மீன்பிடிப்பதைத் தவிர மாற்றுத் தொழில்கள் தெரியாது. அப்படி அவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டாலும் குறிப்பிட்ட தொலைவு வரை மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். இதில் போதிய மீன்கள் கிடைப்பதில்லை.ஏற்கெனவே இப்பகுதியில் சிங்கள மீனவர்கள் மீன் பிடித்துவரும் நிலையில் வெளிநாட்டு நிறுவனங்களும் கால் பதிப்பதால் தாங்கள் முற்றிலும் நிராயுதபாணிகளாக்கப்படுவோம் என்று தமிழர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.



தமிழக மீனவர்களுக்கு ஆபத்து?


இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் அடிக்கடி தாக்கப்பட்டு வரும் நிலையில், சீனர்களுக்கு இலங்கை அரசு அனுமதி அளித்துள்ள நடவடிக்கை மேலும் சிக்கலை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது. இதனால் தமிழக மீனவர்களுக்கு மட்டுமின்றி இந்திய அரசுக்கும் புதிய தலைவலி உருவாகியுள்ளது.இலங்கையில் சீனர்களின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. குறிப்பாக தமிழர்கள் பகுதியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளும் உரிமை சீனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால் பூர்வீககுடி தமிழ் மக்களின் வேலைவாய்ப்புகள் மறைமுகமாக பறிக்கப்பட்டன.



இந்நிலையில் கடல் தொழிலிலும் தமிழர் பகுதிகளில் சீனர்கள் காலூன்றுவதற்கு இலங்கை அரசு உரிமை அளித்துள்ளது. இது இலங்கைத் தமிழர்களுக்கு  மட்டுமின்றி தமிழக மீனவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.இந்திய கடல் பகுதியில் சீனர்கள் அத்துமீறி மீன்பிடிக்கும் பட்சத்தில் தமிழக மீனவர்களுக்கு மட்டுமின்றி இந்திய அரசுக்கும் சங்கடமான சூழ்நிலை உருவாகும். இந்த விஷயத்தில் இந்திய அரசு போதிய அக்கறை காட்டாமல் இருந்து வருவது கவலையளிக்கிறது என தமிழக மீனவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.