"
வைகோ, பழ.நெடுமாறன் தலைமையில் நடந்த இந்தப் போராட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
மயிலாப்பூர் நாகேஸ்வர ராவ் பூங்காவிலிருந்து அவர்கள் ஊர்வலமாக செல்ல முயன்றபோது போலீஸார் தடுத்து நிறுத்திக் கைது செய்தனர்.
முன்னதாக இலங்கை தூதரகம் முன்பு அதிபர் ராஜபக்சேவின் கொடும்பாவி எரிக்கப்பட்டது.
"
source :
http://thatstamil.oneindia.in/news/2010/07/14/chennai-srilanka-fishermen-vaiko-nedumaran-arrest.html
இன்று நடந்த போராட்டம் இலங்கை அரசை கண்டித்துதான்,இந்திய அரசையோ அல்லது மாநில அரசையோ கண்டித்து அல்ல.
மூன்று ஆயிரத்திற்கும் மேலான தமிழ் உணர்வாளர்கள் கலந்து கொண்டு போராடினார்கள் என்று அங்கிருந்து வரும் செய்திகள் சொல்லுகையில், முதல் செய்தியாக அதுவும் வெறும் 50 பேர் மட்டும் கலந்து கொண்டார்கள் என்று ஏன் இவர்கள் தமிழ் உணர்வாளர்களின் உணர்வை கொச்சை படுத்தி , சிங்கள அரசிற்கு சாதகமான செய்தியை அதுவும் பொய் செய்தியை வெளியிடுகிறார்கள்?
அம்சா இருக்கும் பொது அனைத்து பத்திரிக்கையாளர்களிடமும் மிகவும் தனது கவனிப்பினால் ' அனுசரணை' யான செய்திகளை வெளியிட செய்தார்.
இப்போது கிருஷ்ணமூர்த்தியிடமும் thatstamil இல் வேலை பார்க்கும் பத்திரிக்கைகாரர் ஏதேனும் 'கவனிப்பை' பெற்றுவிட்டு இலங்கை அரசிற்கு சாதகமான செய்திகளை வெளியிடுகிறார்களா ? என்ற சந்தேஹம் வருகிறது.
இது இணைய அஞ்சலில் நமக்கு சுற்றரிக்கையாய் வந்த செய்தி அதை இங்கே வெளியிட்டுள்ளோம்