தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

திருமா நீங்கள் யார் ?

திருமா உங்களின் அரசியல் நிலையை நீங்கள் தெளிவாக்குங்கள். உங்கள் மீது வந்துள்ள இந்த விமர்சனங்களிற்கு உங்களின் பதிலைஈழ தமிழர்களிற்கு  நம்பிக்கை  அளிக்கும்படி  தாருங்கள்.

போராட்ட குணம் கொண்ட நீங்கள் , ஈழ  தமிழர்களின் சந்தேகமற்ற  ஆதரவை பெற்றவர்  என்ற நிலையை அடையவேண்டும் என்பதே  எமது இந்த தலையங்கத்தின் நோக்கம்.



கீழே செய்தி உள்ளது  அந்த செய்திக்கு வந்த வாசகர் விமர்சனம் :



இந்த போராட்டம் இலங்கை அரசுடன் மத்திய அரசு எந்த ஒப்பந்தம் போட்டாலும் தமிழக முதல்வருடன் கலந்துகொள்ளவேண்டும் என பரிந்துரை செய்வதற்காகவா, இல்லை ஐ.நா. நியமித்த விசாரணைக் குழுவைக் கண்டித்து போராட்டம் செய்யும் இலங்கை அரசின் தூதரகங்களை இந்தியாவில் இருந்து அகற்றவா என அண்ணன் தெளிவு படுத்த வேண்டும்.

சமீப காலமாக கருணாநிதியின் மறைமுக கொள்கைபரப்புச் செயலாளராக மாறி அண்ணன் தனித்தன்மையை இழந்து வருவது என்னைப்போன்ற தம்பிமார்களுக்கு வேதனை அளிக்கிறது.



திருமாவின் போராட்டம் பற்றிய இன்றைய செய்தி இங்கே :


தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் இலங்கை அரசை கண்டித்தும் சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை அகற்ற வலியுறுத்தியும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மயிலாப்பூர் நாகேஸ்வரராவ் பூங்கா அருகே நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் கலைக்கோட்டு தயம், வன்னிஅரசு, ஆர்வலன், வீரமுத்து, கபிலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இலங்கை அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. பின்னர் திருமாவளவன் பேசியதாவது:-


மீனவர் செல்லப்பன் சமீபத்தில் சிங்கள கடற்படையால் கொல்லப்பட்டார். இதற்கிடையில் நேற்று மீண்டும் கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீது சிங்கள படையினர் தாக்குதல் நடத்தி உள்ளனர்.


இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி பாதுகாப்பு அளிக்கப்படும் என உறுதி அளித்த பிறகும் இந்த தாக்குதல் நடத்தி இருப்பது வேதனை அளிக்கிறது. தமிழக மீனவர்கள், தொடர்ந்து படுகொலை செய்யப்படுகிறார்கள். 25 ஆண்டு காலமாக பல்வேறு கொடுமைகளை அனுபவித்து வருகிறார்கள்.


கடந்த 5 வருடமாக தமிழக மீனவர்கள் 100-க்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர். அதுபற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.


இலங்கை அரசை இந்திய அரசு கடும் எச்சரிக்கை செய்து தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும். இலங்கை அரசுடன் இந்திய அரசு எந்த ஒரு ஒப்பந்தம் செய்தாலும் தமிழக முதல்வருடன் கலந்து பேசிதான் கையெழுத்திட வேண்டும்.

இதுவரை 7 ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது. இதுபற்றி கலைஞரிடம் கலந்து பேசவில்லை. மேலும் இலங்கையில் ஐ.நா.சபை அலுவலகம் இழுத்து மூடுவதற்கும் மனித உரிமை மீறல்களை ஆராய அமைக்கப்பட்ட 3 பேர் கொண்ட குழுவை அனுமதிக்க கூடாது என்றும் இலங்கை அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.


ஐ.நா. சபையையே எதிர்க்கிற இலங்கை அரசின் தூதரங்களை இந்தியாவில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும். சென்னையில் உள்ள தூதரகத்தையும் உடனே அகற்ற வேண்டும். மத்திய அரசு இதை அப்புறப்படுத்தாவிட்டால் பொது மக்களை திரட்டி இலங்கை தூதரகத்தை இழுத்து மூடுவோம்.


இவ்வாறு அவர் பேசினார்.

 

செய்தியும் விமர்சனமும்  இருந்த இடம் :

மாலைமலரின் இணையம்.