தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

இந்தியா வல்லரசு ஆகும் என்று காங்கிரஸ் அரசு பொய் சொல்லுகிறது சொந்த மக்களை ஏமாற்றுகிறது .

உலகில் ஊழல் அதிகமாக பரவியுள்ள 13 நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. அரசு நிர்வாகமும் இந்த நாடுகளில்  மிக மோசமாக உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


"இந்தோ - டச் திட்ட மேலாண்மை சொசைட்டி' என்ற அமைப்பு, உலகின் பல்வேறு நாடுகளிலும், ஊழல் குறித்த ஆய்வை மேற்கொண்டது. இந்த ஆய்வின் அடிப்படையில், வாஷிங்டனை மையமாக கொண்டு செயல்படும் மேம்பாட்டுக்கான பயிற்சி மையம் என்ற அமைப்பு ஒரு அறிக்கை தயாரித்தது.



இந்த அறிக்கை, சமீபத்தில் லண்டனில் வெளியிடப்பட்டது.இதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:



இந்தியா உள்ளிட்ட 13 நாடுகளில் ஊழல் அதிகமாக பரவியுள்ளது. கவுதமாலா, பராகுவே, கானா, கென்யா, பெரு, அர்ஜென்டினா, ரஷ்யா, ருமேனியா, அல்பேனியா, மல்டோவா, போலந்து, இந்தோனேசியா ஆகியவை இந்த பட்டியலில் உள்ள மற்ற நாடுகள். இந்த நாடுகளில் அரசின் நிர்வாக செயல்பாடும் மோசமாக உள்ளது.



இந்தியாவில் செயல்படும் அரசு சுகாதார மையங்களில் 24 சதவீத பணியிடங்கள் காலியாக உள்ளன. பொதுவான நோய்களுக்கு தேவையான மருந்துகள் இங்கு கிடைப்பது இல்லை. டாக்டர்கள் தங்கள் பணி நேரத்தில் இருப்பது இல்லை. போலி டாக்டர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது.இந்த 13 நாடுகளைச் சேர்ந்த மக்களில் பெரும்பாலானோர், உள்ளூர் போலீசாருக்கு லஞ்சம் கொடுப்பவர்களாக உள்ளனர். இவ்வாறு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தலையங்கம் :


இதுதான் உண்மையான இந்தியா . ஊழலால் நிறைந்துள்ள இந்தியா . ஊழல் புற்று நோயைவிட அதிக அளவில் இந்தியாவினுள் புரை ஓடியுள்ளது. 


காங்கிரஸ் அரசு சொல்லுவதை போலவோ அல்லது முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் சொல்லுவது போலவோ இந்தியா 2020 இல் வல்லரசு ஆகும் எனபது வெறும் கனவு மட்டுமே.


நான்கு ராக்கெட்டுகளை  ஏவி விட்டு ஐந்தாறு  செயற்கை  கோள்களை விண்ணில் ஏவி விட்டு விட்டு.  ஒரு  ஆயிரம்  அறிவியல் வல்லுனர்களை மட்டும் வைத்து கொண்டு , இந்தியா வல்லரசு ஆகிவிட்டது என்று  கூறினால் அது மடமை.


பிச்சைகாரன் ஒருவன் ,  ஒருநாள் Park ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு நானும் கோடீஸ்வரன் ஆகிவிட்டேன் என்று சொல்லுவது போல்தான் இந்தியாவும் வல்லரசு ஆகிவிட்டதென சொல்லுவது.


வல்லரசு எனபது மற்ற வல்லரசு நாடுகள் செய்துள்ள ஒன்றிரண்டு செயல்களை செய்துவிட்டு , அளவீட்டில் பார்பதல்ல.


மக்களின் வாழ்வுமுறையில்  அவர்கள் நாட்டில் பெற்றுள்ள வாழ்வு வசதிகளை கணக்கிட்டு வருவது.


அப்படி நாம் பார்த்தால் இந்தியா இருக்கும் பட்டியல் இதுதான் - கவுதமாலா, பராகுவே, கானா, கென்யா, பெரு, அர்ஜென்டினா, ரஷ்யா, ருமேனியா, அல்பேனியா, மல்டோவா, போலந்து, இந்தோனேசியா.