தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

செம்மொழி கொன்றான் - கருணாநிதி - சிவாவின் கட்டுரை

என்ன செய்வது  ஆறு  நாள் தாமதமாகத்தான் படித்தேன் பதிகிறேன். படித்த இடம் மண்ணுரிமை பதிவு.



செம்மொழி மாநாடு தொடங்கிவிட்டது. நிறைய பேருக்கு ஒரு நடுநிலையாக இதை பார்க்க விருப்பம் என்கிறார்கள். அது ஒரு தமிழ் வளர்ச்சிக்கான மாநாடு என்று நினைத்து அதை ஆதரிக்க வேண்டுமாம்.அதுவும் அதிர்வு வெளியிட்ட புலிகளின் அறிக்கை வந்ததும் இந்த நடுநிலையாளர்கள் கொஞ்சம் தைரியம் வந்தவர்களாய் கிளம்பிவிட்டார்கள். எங்களை பொறுத்தவரை இரண்டும் கெட்டான் எந்த விதத்திலும் பயனற்றவர்களே. தி.மு.க வினரை பற்றி சொல்லவும் தேவை இல்லை.




செம்மொழி மாநாடு நடத்துகிற கருணாநிதியும் தி.மு.கவும் ஐந்து முறை தமிழ்நாட்டு ஆட்சிப்பொறுப்பை ஏற்று முதலமைச்சர் இருக்கையை தேய்த்ததை தவிர வேறொன்றும் செய்துவிடவில்லை என்பதே உண்மை. 1965-ல் மொழிப்போராட்டத்தை மாணவர்கள் கையிலிருந்து பிடுங்கிக்கொண்டு போராட்டத்தின் தீவிரத்தைக்கட்டுப்படுத்தி, பயன்படுத்தி ஆட்சிக்கு வந்த காலத்தில் இருந்தே தி.மு.க வின் தூரோக வரலாறும் தொடங்கிவிட்டது. இருமொழிக்கொள்கை மும்மொழிக்கொள்கை என்ற மோசடி வார்த்தைகளைத்தவிர வேறொன்றையும் தமிழ்நாடு கண்டது இல்லை.எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று வார்த்தைகளால் ஏமாற்றிக் கொண்டே எங்கேயும் தமிழின்றி செய்து முடித்தவர்கள்தான் இந்த கூட்டம்.


செம்மொழிக்கான அனைத்துத்தகுதிகளும் இருந்தும் தமிழ் மொழி உண்மையான செம்மொழிக்கான தகுதிகளுடன் செம்மொழியாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. தமிழை செம்மொழியாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாத இந்திய அரசு வஞ்சனையுடன் தனிப்பட்டியலில் செம்மொழியாக அறிவித்து இருக்கிறது. ஏற்கனவே 2000-ம் ஆண்டுகள் பழமையானது என்ற தகுதியை 1000-ம் ஆண்டுகள் பழமையானது என்று குறைக்கப்பட்டு 1000-ம் ஆண்டுகளுக்குட்பட்ட மொழிகளுடன் சேர்க்கப்பட்டே செம்மொழியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மோசடியைத்தட்டிக்கேட்க முடியாத கருணாநிதி (இதில் கருணாநிதியும் கூட்டுக்களவாணி) அன்று அய்யா மணவை முஸ்தஃபா போன்றவர்களைக் கட்டுப்படுத்த முயற்சி செய்தார். ஆனால் விளம்பரம் மட்டும் செம்மொழி கொண்டான்...! என்றே போட்டுக்கொள்கிறார்கள்...



இந்த செம்மொழி கொண்டான் உண்மையில் செம்மொழி கொன்றான் என்றே சொல்லவேண்டிய ஆள்..இதற்கான காரணம் ஒன்று இரண்டல்ல ஏராளம். தமிழ் மொழிக்கு, இனத்திற்கு என்று செய்த துரோகம் மறக்கக்கூடியது இல்லை. அதனை மறந்து இந்த மாநாட்டுக்கு ஆதரவு தெரிவிக்கவோ, வாழ்த்துக்கூறவோ, எந்த நியாயமும் இல்லை.ஏனெனில் அதில் வெறும் கருணாநிதி துதி பாடல்களே நடக்கப்போகிறது.



கருணாநிதியின் உண்மை முகத்தை தெரிந்துகொண்டால் இதை எளிதாக புரிந்துகொள்ளலாம்.



அய்யா தேவநேயப்பாவாணர் அவர்கள் தனது வாழ்நாளை அர்ப்பணித்துக்கொண்டு தமிழர் வரலாற்றை வெளிக்கொண்டுவந்தவர். அவரை விட சிறப்பான தமிழறிஞர் இன்றளவும் இல்லை. அவர் கடைசிக்காலத்தில் கருணாநிதிக்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறார். அந்தக் கடிதத்தில் கருணாநிதியிடம் அய்யா தேவநேயப் பாவாணர் வேண்டியது கொஞ்சக் காலத்துக்கு உணவுக்கும் தங்கும் இடத்திற்கும் வழிசெய்யவேண்டும், நான் எனது கடைசி ஆய்வுகளை முடிக்கும் வரை இந்த உதவியை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்த உதவிகளை செய்து இருந்தால் தமிழுக்கும் இனத்துக்கும் அவர் இன்னும் சிறப்பான பணிகளை செய்து இருப்பார். முதலமைச்சராக இருந்தும் கயவன் கருணாநிதி கடைசிவரை கண்டுகொள்ளவே இல்லை. கடைசிக்காலத்தில் தமிழனின் வரலாற்றை எழுதிய அய்யா வறுமையில் வாழ்ந்தார். இது ஒரு தமிழறிஞரை கருணாநிதி போற்றிய விதம்..!.




மொழிப்போருக்கு உரிமை கொண்டாடும் தி.மு.க. மொழிப்போர் வரலாற்றை இதுவரைக்கும் அடுத்த தலைமுறை படிக்கும் விதத்தில் பாடத் திட்ட்த்தில் சேர்க்காதவர் தான் இந்த செம்மொழிகொண்டான். எத்தனை தமிழறிஞர்களின் வரலாறு மாணவர்களுக்கு போய்ச்சேர்கிறது. கண்டவனுக்கெல்லாம் மணிமண்டபம் கட்டும் கருணாநிதி மொழிப்போர் தியாகிகளுக்கு செய்தது எதுவுமே இல்லையே..இதன் பொருள் என்ன..? மொழிப்போராட்டத்தாலும் , மொழிப்போராட்ட தியாகிகளாலும் கருணாநிதியின் புகழ் மங்கிவிடும் என்பதால் தானே இவற்றையெல்லாம் கண்டுகொள்ளவில்லை....

 

பக்கத்தில் உள்ள கர்நாடகாவில் பத்தாம் வகுப்புவரை கன்னடமொழியை ஒரு மொழிப்பாடமாக கட்டாயம் படித்தே ஆகவேண்டும் என்ற சட்டம் இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் கருணாநிதி ஐந்து முறை ஆட்சிபொறுப்பில் இருந்தும் சட்டம் இயற்றவில்லை. ஐந்தாம் வகுப்புவரை தமிழை தமிழ்நாட்டில் பயிற்று மொழியாக்க ஒரு அரசாணை வெளியிட்டார். இந்த அரசாணை என்பது சட்டம் இல்லை .ஆதலால் தி.மு.க.வின் ஒன்றிய செயளாலர் ஒருவராலயே நீதிமன்றத்தில் தடையாணை வாங்கப்பட்டுத் தோற்கடிக்கப்பட்டது. தமிழ் நாட்டில் மட்டும் தான் ஒருவன் தமிழ் மொழியைப் படிக்காமலே உயர்படிப்புவரை படிக்கலாம். இது இன்றும் தொடர்கிறது. இந்த நிலை தொடர பொறுப்பானவர் ஐந்துமுறை முதலமைச்சராக இருந்த கருணாநிதி இல்லையா..?



தமிழை தமிழ்நாட்டில் பயிற்று மொழியாக்க ஒரு அணுவளவேனும் முயற்சி செய்யாமல் செம்மொழி மாநாடு நடத்தி தமிழ்மொழி வளர்ச்சிக்கு என்றால் இதன் பெயர் என்ன...? மோசடி இல்லையா..?



வேலை வாய்ப்பில் தமிழ்வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும். அப்போதுதான் தமிழ் மொழியில் படிப்போருக்கு வேலை உறுதிசெய்யப்படும் என்று கோரிக்கை வைத்து போராடிக்கொண்டே இருக்கிறோம் . இதை ஏன் இன்னும் செயல்படுத்த எண்ணம் இல்லை..? இது தமிழ் மொழி வளர்ச்சியில் சேர்க்கமுடியாததா..?

 

டி.ஆர்.பாலு மத்தியில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்த போது தமிழ்நாட்டில் மைல்கற்களில் ஹிந்தியில் எழுதப்பட்டதே.? அப்போது இவர்கள் சொன்ன பதில் இன்றும் நினைவில் இருக்கிறது. வட இந்தியக்காரன் சரக்குந்து ஓட்டிவருகிறான் என்பதற்காக தமிழ்நாட்டு மைல்கல் ஹிந்தி எழுத்துக்களை சுமக்க வேண்டும் என்று நாக்கூசாமல் சொன்னார்களே..? இவர்ளால் வேறு மாநிலத்தில் இப்படி பேச முடியுமா..? இவர்கள் நடத்தும் செம்மொழி மாநாடு தமிழை வளர்க்கும் என்று நாங்கள் நம்பவும் வேண்டுமோ...?



இன்றளவும் இந்திய அரசு தனது திட்டங்களுக்கு ஹிந்தியில் பெயர் சூட்டி தமிழ்நாட்டு குக்கிராமங்களுக்கும் (படம் இனைக்கப்பட்டுள்ளது) சென்று விளம்பரம் வைக்கிறதே. கருணாநிதி அரசின் கவனத்துக்கு வராமல்தானா இந்த ஹிந்தி திணிப்பு நடக்கிறது..?.




தமிழ்நாடு அரசின் அரசு விரைவுப் பேருந்துகள் முழுவதிலும் ஆங்கிலத்தில் S.E.T.C என்ற எழுத்துக்கள் தானே பெரிய அளவில் எழுதப்படுகிறது. வணிக நிறுவனங்களின் பெயர்கள் தமிழில் இருக்க வேண்டும் , பெயர்பலகைகளில் முதன்மையாக தமிழே இருக்கவேண்டும் என்று எத்தனையோ கோரிக்கைகள் அனுப்ப பட்டும், போராட்டங்களும் நடாத்தப்பட்டும் இருக்கிறது. இதை நடைமுறை படுத்தாமல் ஆட்சி நடத்தும் தி.மு.க அரசுதானே.இந்த செம்மொழி மாநாடு நடத்துகிறது. இதை எப்படி ஆதரிக்க முடியும்.




கருணாநிதி சொந்த விசயத்துக்கும் ,புகழுக்கும் எடுக்கும் சிரத்தை தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு எடுத்தது இல்லை என்பதுதான் உண்மை. இப்போது நடக்கும் வழக்கறிஞர்களின் போராட்டத்துக்கும் அப்படியே சால்சாப் பதில் தான் வந்து இருக்கிறது. அவர்கள் என்ன செம்மொழி மாநாட்டுக்கு எதிராகவா போராடுகிறார்கள். தாங்கள் வாதாடும் சென்னைஉயர்நீதிமன்றத்தின் மொழியாக தமிழை ஆக்க வேண்டும் என்கிறார்கள். அவர்களின் போராட்ட வீரியத்தை பயன்படுத்தி சட்டத்தை நிறைவேற்றி இருக்கலாம்.. இதற்கு மட்டும் கருணநிதியிடம் இருந்து சட்டம், நீதி, நீதிமன்றம் என்று பதில் வருகிறதே, அமைச்சரவையில் பங்கு கேட்கும் போர்க்குணத்தில் ஆயிரத்தில் ஒரு பங்கைக்கூட இதில் காட்டவில்லையே..? அப்படியே இவர்களால் முடியாது இதெல்லாம் மத்திய அரசின் கையில் உள்ளது என்று சொல்வார்களானால் தமிழ் மொழி தில்லிக்காரனிடம் அடிமையாக இருக்கிறது என்று தானே பொருள். இந்த மாநாட்டில் இந்த உண்மையை அறிவித்து தமிழ் மொழியின் விடுதலைக்கு வழி வகுக்க போகிறாரா கருணாநிதி. இப்படி கனவிலும் நினைக்க முடியாது. அப்படி இருக்க இந்த மாநாட்டை எப்படி ஆதரிக்க முடியும்.




இந்திய அரசு வெளிநாடுகளில் வாழும் தமிழர்களை எல்லம் NRI-களாக காட்டி அவர்கள் இருக்கும் நாடுகளிலெல்லாம் அந்த நாடுகளின் உதவியை பெற்று ஹிந்தி மொழியைப்பரப்பிவருகிறது. அதற்கான நிதியையும் அதிகரித்து வருகிறது. இதை தடுத்து தமிழ் மொழிக்கு நிதி வழங்கவும் தமிழ் மொழியை காப்பாற்றவும் ஏதேனும் திட்டம் தமிழ் நாட்டு அரசின் கொள்கைகளில் இருக்கிறதா ? அல்லது தி.மு.க.வின் கொள்கைகளில்தான் இருக்கிறதா..?அல்லது கூட்டாளியான தில்லி அரசிடம் வலியுறுத்திய கடிதாமவது இருக்கிறதா..?ஏனென்றால் இவர்கள் காட்டும் செயல்பாடு எப்போதும் தில்லிக்கு எழுதும் கடிதம் தான்.



இதுவரைக்கும் நெடுமாறன் அய்யா நடத்தும் உலகத்தமிழர் பேரமைப்பு மாநாட்டுக்கான அனுமதியை தமிழ்நாடு அரசு கொடுத்ததே இல்லை. ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தின் கதவுகளை தட்டியே அனுமதிபெற்று வருகிறார். தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு முன் பல தமிழ் உணர்வளர்கள் கைது செய்யப்பட்டார்கள். தமிழ் உணர்வாளர்களை நசுக்கும் கருணாநிதி அரசா தமிழ் மொழியை வாழவைக்கப்போகிறது..?



ஒப்பற்ற திருவள்ளுவருக்கு இணையாக ஏதோ ஒரு துக்கடா கவிஞரான கன்னட சர்வஞர் சிலையை தமிழ்நாட்டில் அனுமதித்த கருணாநிதியின் விவேகம் எவ்வளவு சிறுமைகொண்டது என்பது எளிதாக புரிந்துகொள்ளக்கூடியதே.


உயர்கல்வியில் தமிழை பயிற்று மொழியாக்க இதுவரை அரசு செய்த முயற்சிகள் என்னவென்றுபார்த்தால் எதுவும் இல்லை. ஆனால் உண்மையில் மருத்துவமொழி, இராணுவமொழி, பயிற்றுமொழி, ஆட்சிமொழி எல்லாமே தமிழில் உருவாக்கி செயற்படுத்திக் காட்டிய தமிழீழத் தேசியத்தலைவர்தான் இந்த தமிழனத்தின் ஓரே தலைவர். அதை பொறுக்காமல் தனது தமிழின தலைவர் பட்டத்தை காப்பற்றிக் கொள்ள இந்திய பார்பனிய அரசின் கைக்கூலியாக இருந்து தமிழ் இனத்தை காட்டிக்கொடுத்து சாகடித்தவர்தான் கருணாநிதி. இன்று நானும் தமிழினத்தலைவன் ! நானும் தமிழினத்தலைவன் ! என்று வடிவேலு நகைச்சுவை போல( நானும் ரொளடி.. நானும் ரொளடி) சொல்லிக்கொண்டு சொம்மொழி மாநாடு நட்த்துகிறார். இனவெறியன் இராசபக்சே தமிழர்களின் மீள்குடியேற்றம், வேலை கொடுக்கிறேன் என்று சொல்வதை எப்படி மோசடி என்கிறோமோ, அதே போன்றுதான் கருணாநிதியின் செம்மொழி மாநாடும். இந்த மாநாடு கருணாநிதிக்கு ஒரு பட்டம் சூட்டு விழாவே அன்றி தமிழுக்கும் இனத்துக்கும் ஒரு கடுகளவும் உதவாது என்பது கருணாநிதியின் கழுத்தறுப்பு வரலாற்றை அறிந்தவர்களுக்கு நன்கு தெரியும்.



புலிகளின் அறிக்கையைப்பொறுத்தவரை அவர்கள் எப்போதும் தமிழ்நாட்டு அரசியல் சூழலில் தங்கள் கருதுக்களைப்பதிவு செய்தது இல்லை..எல்லோரையும் ஆதரவு சக்தியாகவே வைத்து இருக்க விரும்பினர். முள்ளிவாய்க்கால் இழப்பிற்குப் பிறகும் அப்படியே தொடர்வது சரியான அரசியல் பார்வை இல்லை. ஏனென்றால் தற்போது தமிழ்நாட்டில் இளைஞர்கள் தன்னெழுச்சியாக பல போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள். உளவு நிறுவனங்கள் இதைப்பார்த்து திணறி போய் பழைய செருப்பு மாலை பாணியை கைவிட்டு குண்டுவைக்க தொடங்கி இருக்கின்றன. இது போன்ற அரசியல் பார்வை அந்த இளைஞர்களை தளர்வுற செய்ய வாய்ப்பு இருக்கிறது. இந்த அறிக்கை சில நல்ல நோக்கங்களுக்காக வெளியிடப்பட்டாலும் தமிழ்நாட்டு அரசியல் சூழலில் எதிர்ப்பிற்குரியதே.



தமிழை ஆட்சி மொழியாக்காமல் , கல்வி மொழியாக்காமல் , நீதிமன்ற மொழியாக்காமல் மாநாடு நடத்தினால் தமிழ் மொழியின் வளர்ச்சி என்பது ஒரு முட்டாள்தனம். அதை ஆதரிக்கவும் முடியாது..ஆக்கப் பூர்வமாக எந்த செயலும் ஆட்சி பொறுப்பில் இருந்து செய்யாத ஒரு நபர் தன் புகழுக்காக நடத்தும் ஒரு கூத்து தமிழ் வளர்ச்சிக்காக என்று சொல்வதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. தி.மு.க தனது மாநாடுகளில் அறுபதுகளில் இருந்தே சில தீர்மானங்களை இயற்றி வருகிறது. அதில் அன்றிலிருந்து மாறாத இரண்டு :1. மாநில சுயாட்சி, 2.சேது சமுத்திரத்திட்டம். இவற்றில் தி.மு.க எள்ளளவும் முன்னேற்றத்தை கண்டது இல்லை. இதே நிலைதான் கலந்து கொள்ளும் தமிழறிஞர்களின் ஆய்வுக்கட்டுரைகளுக்கும் , இந்த மாநாட்டு தீர்மானங்களுக்கும் என்பது திண்ணம். எனக்கு கொஞ்சமும் இந்த செம்மொழி மாநாடு பற்றி வெற்று சந்தோசப்படுவதற்கான காரணங்கள் கிடைக்கவில்லை.



அன்பான தமிழ் உறவுகளே உலகத்தில் எந்த இனத்துக்கும் இல்லாத நெருக்கடி தமிழினத்துக்கு இன்று. நாம் தமிழ் இனத்தை காத்து தமிழ் மொழியையும் காக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். இந்திய சிங்கள அரசுகள் தற்ப்போது செய்துகொண்டுள்ள ஒப்பந்தம் தமிழ், தமிழர் என்ற வார்த்தையை எதிர்காலத்தில் இல்லாமல் செய்யப்போகிறது. தமிழ் நாட்டில் தமிழ் உணர்வாளர்களை ஒடுக்க உளவு நிறுவனங்களுடன் கைகோர்த்து வேட்டையை தொடங்கிவிட்டது கருணாநிதி அரசு . இதையெல்லாம் முறியடித்து வெற்றிகொள்ளும் வேட்கையுடன் விழிப்புடன் இருப்போம். வெற்று ஆராவாராங்களையும் இனத்துரோகிகளையும் புறக்கனித்து தமிழ்தேசிய இலக்கு நோக்கி பயனிப்போம். இதுவே ஒவ்வொரு தமிழனுக்கும் இன்றைய கடமை.



தோழர் சிவா.
http://www.thozharsiva.blogspot.com/

அட வடிகட்டிய முட்டாள் பிரதமரே !

அட வடிகட்டிய  முட்டாள் பிரதமரே !

தலைப்பில் உள்ள வாசகங்களைத்தான் சொல்லத்தோன்றுகிறது, நமது மாண்புமிகு பிரதமர் சொல்லியருளியுள்ள  கீழ்க்கண்ட செய்திகளை  பார்க்கும் பொழுது.கனடாவில் இருந்தே இந்திய மக்களின் நாடித்துடிப்பை கண்டுபிடித்துவிட்டாராம்  நமது பிரதமர்.?!எதிர்க்கட்சி என்றால் , அவர்கள் எங்கிருக்கிறார்கள்  செவ்வாய் கிரகத்திலா ? அல்லது பக்கத்து நாட்டிலா ? அவர்களும் மக்களின் பிரதிநிதிகள்தானே ?நாளும் மக்களின் வாழ்வு போராட்டம் ஆகிவருகிறது.  இந்தியாவில் மேல்தட்டில் உள்ள   10 %   பேர் போக மீதியுள்ள அனைவரும் வாழ்வோடு போராடி வருகிறார்கள் வறுமையில் உழல்கிறார்கள் இதுதான் உண்மை.

சுதந்திரம் வாங்கிய நாளில் இருந்து பணக்கார அல்லது துரைதனமான அரசியல்வாதிகளை அல்லது ஊழல்- தொழில் அதிபர்களை அல்லது ஊரை ஏமாற்றும் பெரும் வியாபாரிகளை தலைவர்களாய்   கொண்டுள்ள கட்சிதான் காங்கிரஸ்.காங்கிரஸ் கட்சியின் அரசியல் வாதிகளை ஆராயுங்கள் . அவர்கள்  உழைத்து  நேர்மையில் பணக்காரர்களாகி இருக்க மாட்டார்கள் .'அரசியல்' தொழில் செய்து பெரும் பணக்காரர் ஆகி இருப்பார்.

காங்கிரஸ் கட்சி எப்பொழுதும் வெகுஜன மக்களின்  எண்ணங்களை புரிந்து கொண்டது  இல்லை.  அவர்களிற்கு தேவை  பெரும் தொழில் அதிபர்கள் நன்றாய் இருக்க வேண்டும் .மேட்டுக்குடி பணக்காரர்களின் தொழிலை விமர்சனம் செய்யும் பத்திரிக்கைகள் பாராட்ட வேண்டும்.அப்படி பாராட்டி இருப்பபவர்கள்  மட்டும்தான் பிரதமரது கண்களுக்கு மக்களாய் தெரிகிறார்கள் போலும்.

காங்கிரஸ் இந்தியாவின் 'தலைவிதி' -யான தலைவலி.  காங்கிரஸ் ஒழிந்தால் மட்டுமே  இந்தியா உருப்படும் . இதை எங்கு வேண்டுமானாலும் உரக்க கத்திசொல்லலாம்.

செய்தி இங்கே :


எதிர்கட்சிகள்தான் இந்த விலை உயர்வை எதிர்க்கின்றனவே தவிர மக்கள் பாராட்டுகிறார்கள் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.



பெட்ரோலியப் பொருட்களின் விலையை நிறுவனங்கள் தங்களது விருப்பம் போல் நிர்ணயித்துக் கொள்ளும் வகையில், விலை நிர்ணயம் மீதான தனது கட்டுப்பாட்டை விலக்கிக்கொள்வது குறித்து மத்திய அமைச்சரவையின் அதிகாரம் மிக்க அமைச்சர்கள் குழு, கடந்த 25 ஆம் தேதியன்று கூடி ஆலோசித்தது.


இதில் பெட்ரோலுக்கான விலை நிர்ணயம் மீதான அரசு கட்டுப்பாட்டை விலக்கிக்கொள்வது என்றும், டீசல் மீதான விலையை ரூ. 2 க்கு மேல் உயர்த்தும்போது பெட்ரோலியத் துறை அமைச்சகத்தின் ஒப்புதலை கேட்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.


அதே சமயம் மண்ணெண்ணெய் மற்றும் சமையல் எரி வாயு சிலிண்டரின் விலை நிர்ணயம் மீதான தனது கட்டுப்பாட்டை அரசு தொடர்ந்து வைத்துக்கொள்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.



இதனைத் தொடர்ந்து சர்வதேச சந்தையின் தற்போதைய நிலவரத்திற்கு ஏற்ப பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.73 ம், டீசல் லிட்டருக்கு 2 ம், சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ. 35 ம், மண்ணெண்ணெய் லிட்டருக்கு ரூ. 3 ம் அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.



இந்நிலையில் இந்த விலை உயர்வுக்கு நாடு முழுவதும் மக்களிடையே கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், மக்கள் எதுவும் அவ்வாறு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும், எதிர்கட்சிகள்தான் எதிர்ப்பு தெரிவிக்கின்றன என்றும் திருவாய்மலர்ந்துள்ளார் பிரதமர் மன்மோகன் சிங்.


தனது கனடா பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பும் வழியில் விமானத்தில் வைத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் மன்மோகன்.



அப்போது, "நமது மக்கள் புத்திசாலியானவர்கள். மக்கள் தொகை பெருக்கம், நமது நாட்டின் வளர்ச்சியை தடம்புரளச் செய்துவிடக்கூடாது என்பதை புரிந்துகொண்டுள்ளனர்.


பெட்ரோலிய பொருட்கள் மீதான விலை உயர்வு தொடர்பாக எதிர்கட்சிகள்தான் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். ஆனால் விலையை உயர்த்த வேண்டிய நெருக்கடி காரணமாகத்தான் அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டது என்பதை புரிந்துகொண்டு மக்கள் அதனை பாராட்டுகிறார்கள்.


தற்போது பெட்ரோல் மீதான விலை நிர்ணய கட்டுப்பாடு மட்டும்தான் விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது. டீசல் மீதான விலை நிர்ணய கட்டுப்பாடும் அரசிடமிருந்து விலக்கிக்கொள்ளப்பட வேண்டும்" என்று கூறினார் மன்மோகன்.

கருணாநிதிக்கு செருப்ப அடி!...

டி.ராஜேந்தரின் வடகிழக்கு பருவ மழை

கால் நூற்றாண்டுக்கும் மேலாக எழுத்தையே சொத்தாக நினைத்த பத்திரிகையாளர் ராதாராஜ், கால் காசு கூட சொத்து சேர்க்காமல் கண்ணை மூடிவிட்டார். சாகும் போது அவருக்கு வயது 47. போலீஸ் செய்தி, (பழைய)தினசரி, டி.ராஜேந்தரின் உஷா, நியூ பிலிமாலயா என்று எழுதிக் கொண்டே இருந்தவர், கண்ணை மூடுகிற கடைசி நாட்களிலும் டி.ராஜேந்தரின் குறள் டி.வி நிருபராக பணியாற்றினார்.


11 ம் வகுப்பும், 9 ம் வகுப்பும் படிக்கும் இரு மகள்கள். காதல் மணம் செய்து கொண்ட மனைவி என்று கச்சிதமான குடும்பம் அவருக்கு. நாலைந்து தினங்களுக்கு முன் ரத்த வாந்தி எடுத்தவரை பதறியடித்துக் கொண்டு வந்து விஜயா ஆஸ்பிடலில் சேர்த்தது குடும்பம். அவரது இன்னொரு குடும்பம் பத்திரிகைதானே?


பத்திரிகை நண்பர்கள் பிஸ்மி, தமிழன்பன், மதுரை செல்வம், விக்னேஷ் ராஜா, நெல்லை பாரதி என்று செய்தியை கேள்விப்பட்ட அடுத்த நொடியே ஆஸ்பிடல் வாசலில் கூடினார்கள் நண்பர்கள்.


பி.ஆர்.ஓ. மவுனம் ரவி, கையில் கிடைத்த 20 ஆயிரத்தோடு மருத்துவமனைக்கு ஓடோடி வந்தார். இயக்குனர் சசிகுமார் காதுக்கு தகவல் போனதும், அடுத்த வினாடியே 10 ஆயிரம் ரூபாய் வந்து சேர்ந்தது. யூனிட் யூனிட்டாக ரத்தம் ஏற்றிய மருத்துவர்கள் அரை மணிக்கொரு தரம் நிலைமையின் தீவிரத்தை சொல்ல சொல்ல, பில்லின் கனம் கூடிக் கொண்டே இருந்தது.


அஜீத் 15, சரத்குமார் 30, சத்யராஜ் 20 என்று நாலா புறத்திலிருந்தும் உதவியும், அக்கறையும் வந்து சேர கண்விழித்து அதையெல்லாம் பார்க்கதான் போகிறார் என்ற எதிர்பார்ப்பில் நாமெல்லாம் நின்றோம். முதல் நாள் மருத்துவமனையில் சேர்க்கும்போது சொன்ன தகவல். நாலைந்து முறை நினைவுபடுத்திய பின் மறுநாள் பிற்பகல் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தார் முதலாளி டி.ராஜேந்தர்.


சரக்கென்று அழுகை பொத்துக் கொண்டது அவருக்கு. `நான் இருக்கேன்யா. அவனை போக விடமாட்டேன்` என்ற பெரும் கூச்சலோடும். பெரும் கண்ணீரோடும் ஐ.சி.யூ.விற்குள் போனவர் அதே வடகிழக்கு பருவ மழையோடு வெளியே வந்தார். ஒரு ஓரமாக செய்வதறியாமல் நின்று கொண்டிருந்த திருமதி ராதாராஜின் கைகளில் ஒரு கவரை திணித்துவிட்டு கண்ணீரை துடைத்துக் கொண்டே காரேறி போய்விட்டார். கவருக்குள் இருந்தது எவ்வளவு? வெறும் இரண்டாயிரம்! இந்த கொடுமையை காண சகிக்காமல் அடுத்த அரை மணி நேரத்தில் விடைபெற்றுக் கொண்டார் ராதாராஜ்.


இந்த இடத்தில் இன்னொரு விஷயத்தை சொல்லியாக வேண்டும். டி.ஆர் பற்றியோ, சிம்பு பற்றியோ சக பத்திரிகையாளர்கள் தவறாக எழுதியபோதெல்லாம் அவர்களோடு பல முறை சண்டைக்கு நின்றிருக்கிறார் இந்த மனுஷன். மறுநாள் சீமான், அமீர், கருணாஸ், கஞ்சா கருப்பு, என்று திரையுலகைச் சேர்ந்த பலரும் வந்திருந்தார்கள்.


அண்ணே, நான் அவங்க குடும்பத்துக்கு ஒரு லட்சம் தர்றேண்ணே` என்றார் கருப்பு. `என் பங்குக்கு நிறைய முடியாது. ஒரு லட்சம் நிச்சயம்` என்றார் கருணாஸ். இங்கேயும் வந்தார் முதலாளி. மறுபடியும் ஒரு கவர். பிரித்தால் ஐந்தாயிரம்!


ஏதோ, அவரவரால் முடிந்தது என்று எடுத்துக் கொண்டிருக்கலாம். இந்த விவகாரத்தை. `வாழ்ந்தவர் கோடி. மறைந்தவர் கோடி. மக்களின் மனதில் நிற்பவர் யார்` என்ற வரிகளை படித்து தொலைத்ததால் வந்த வினைதான் இந்த புலம்பல்!

செம்மொழி மாநாடா இல்லை தற்பெருமை மாநாடா !

கோவை செம்மொழி மாநாட்டில் நேற்று கவியரங்கம் நடந்தது. தலைப்புக்கு சற்றும் பொருத்தமில்லாமல், முதல்வரை துதி பாடவும், அரசியல் பேசவும் மட்டுமே பயன்பட்ட இந்த கவியரங்கில், ஈழத்தமிழர் பிரச்னையும் ஆங்காங்கே எட்டிப் பார்த்தது. பேசிய அனைத்து கவிஞர்களும், முதல்வர் கருணாநிதி தான் தமிழுக்கு காவல்காரன் எனக் கூறி அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர்.

கோவையில் நடைபெற்று வரும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில், "தமிழுக்கும் அமுதென்று பேர்' என்ற கவியரங்குக்கு, கவிஞர் வாலி தலைமை தாங்கினார். பங்கேற்ற அனைவரும், முதல் வரிசையில் அமர்ந்திருந்த முதல்வர் கருணாநிதியை துதி பாடும் களமாகவே மேடையை பயன்படுத்திக் கொண்டனர்.


தலைமை வகித்து பேசிய கவிஞர் வாலி, ""தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, தமிழுக்கும் தமிழ் மண்ணுக்கும் கலைஞர் தான் காவல். அதனால் தான், அவரது நிழலில் ஒதுங்க எல்லாருக்கும் ஆவல்,'' என்றார். சமீபத்தில் அ.தி.மு.க., கட்சியில் இருந்து தி.மு.க.,வுக்கு தாவிய முன்னாள் அமைச்சர்கள் முத்துசாமியையும், சின்னசாமியையும் தனது கவிதையில் புகுத்த மறக்கவில்லை வாலி. ""ஆலயம் தானே சாமிகளுக்கு இடம். அதனால் தானோ, "சாமிகள்' அறிவாலயம் நோக்கி வருகின்றன. கலைஞர் தான் தமிழுக்கு காப்பு; அவருக்கு ஒரு கைகூப்பு,'' என்றார்.


கவியரங்கை துவக்கி வைத்து கவிஞர் மேத்தா பேசுகையில், ""இதுவரை தமிழ் உலகை பேசியது. இப்போது உலகமே தமிழைப் பற்றி பேசுகிறது. தமிழ்த் தலைவரைப் பற்றி பேசுகிறது. பேசப்படும் தலைவரைப் பற்றி நான் பேசாமல் வணங்குகிறேன். குழந்தைக்கு தாய் குவளையில் பால் ஊட்டுவாள்.ஒரு குவளை தமிழ்த் தாய்க்கே பால் ஊட்டியது; அது திருக்குவளை. நாத்திகன் என்றாலும் அவர் தினமும் ஆலயம் போய் வருவார்; அறிவாலயம் எனும் ஆலயத்துக்கு. இலக்கியத்தில் தலை கொடுக்க முன் வந்தார் குமணன்; குடியிருக்கும் வீட்டையே கொடையாகத் தந்து குமணனை வென்றார் கலைஞர். இப்போது அவர், கோடானுகோடி தமிழர்களின் இதயத்தில் குடியிருக்கிறார்,'' என்றார்.


முதல்வருடன் அமர்ந்திருந்த துணை முதல்வர் ஸ்டாலினையும் விட்டு வைக்கவில்லை. ""இவர் துணை முதல்வர் தான். ஒரு வழியில் இவர் முதல்வர். சுரேகாவின் வீட்டுக் கதவை முதலில் தட்டி கண் பார்வை கொடுத்ததில் முதல்வர். அகவை இவருக்கு 58; இவர் உதவிக்கு அழைத்தால் ஓடி வரும் 108. வாழும் வள்ளுவருக்கே குறள் சொல்பவர். தமிழ் படித்தால் வேண்டும் இங்கே வேலைவாய்ப்பு; தமிழுக்கும் வேண்டும் இங்கு வேலைவாய்ப்பு,'' என்றார்.


கவிஞர் தணிகாசலம் பேசுகையில், ""இன்று காவிரியை கடக்க ஓடம் வேண்டாம்; ஒட்டகம் போதும். அம்மா மண்டபம் அடியோடு காலி. இந்த மாமண்டபம் நிறைந்து வருவதே இன்றைய செய்தி. கணவனை இழந்த கண்ணகியின் சீற்றத்தில் நியாயம் இருந்தது. ஈழத்தில் அனைத்தையும் இழந்த எங்கள் கோபமும் நியாயம், நியாயம்,'' என்றார்.


கவிஞர் இளம்பிறை பேசுகையில், ""கடல் அலையாக பொங்கும் உணர்வை கம்பி வலைகளா தடுக்கும்? படுகாயங்கள் சருகாய் உருகும். விடுதலை பயிர்கள் விளையும். பதறி பறந்த பறவைகள் மீண்டும் ஒன்றாய் சேரும். தமிழினத்துக்கு இல்லை வீழ்ச்சி; அதற்கு இந்த மாநாடே சாட்சி,'' என்றார்.


கவிஞர் பழனிபாரதி பேசுகையில், ""நீ சுவாசிப்பது காற்றை அல்ல; தமிழ்ப் பாட்டை. முத்தமிழுக்கு தலைவன் என உன்னைக் கூறினால் ஏற்க மாட்டேன். நாடகத் தமிழ், கட்டுரைத் தமிழ், கலைஞர் தமிழ், பாட்டுத் தமிழ் போன்ற அத்தனை தமிழுக்கும் நீதான் தலைவன். வீடு வரை உறவு; வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை; கடைசி வரை கலைஞர். நேற்று கட்சி துவங்கியவர்கள் எல்லாம் முதல்வராகி விடுவதாகக் கூறுகின்றனர். நீ பிரதமர் ஆகலாம்; உன் உயரம் சூரியனின் உயரம்,'' என்றார்.


இறுதியாக பேசிய கவிஞர் பா.விஜய், தனது கவிதையால் முதல்வரை நனைத்தெடுத்தார். அவர் பேசுகையில், ""கலைஞர் கூட கோவைக்காரர் தான். கோவைக்காரர்கள் தங்கள் பேச்சில், "ஏனுங்கண்ணா, என்னங்கண்ணா' போட்டு பேசுவர். கலைஞரும் "அண்ணா, அண்ணா' என்று பேசுவதால் அவரும் கோவைக்காரர் தான். எனக்கு மூச்சில் தமிழ்; உனக்கு மூச்சே தமிழ். கலைஞருடன் நெருங்கி பழகுபவர் அனைவரும் பெரிய கவிஞர் ஆகி விடுவர். விரைவில் வெளிவரும் குஷ்பு எழுதிய குட்டிக்கவிதை புத்தகம். தமிழ்நாட்டில் செல்போன் போல் கட்சிகள். எத்தனை கட்சிகள் இருந்தாலும் அனைத்துக்கும் ரிங் டோன் கலைஞர் தான். செம்மொழி மாநாடு மிச்ச சாதனை அல்ல; உனது உச்ச சாதனை,'' என்றார்.


இவ்வாறு இறுதி வரை பேசியவர் எவரும், தலைப்பை மருந்துக்குக் கூட தொடவில்லை. அனைவரின் பாராட்டுப் பத்திரங்களையும் முதல்வர் கருணாநிதி முன்முறுவலுடன் கேட்டுக் கொண்டிருந்தார்.இறுதியில் மேடையை விட்டு இறங்கிய அனைவரும், முதல்வர் அருகில் வந்து நலம் விசாரித்து, கூட நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.


தமிழுக்கு செம்மொழி மாநாடு அங்கே - வறுமையில் சாகும் தமிழன் இங்கே .

முதலில் செய்திக்கு செல்வோம் :


பண்ருட்டி அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளித்து தற்கொலை  செய்து கொண்டனர். அதே போல சென்னையில் 2 குழந்தைகளை தூக்கிலிட்டுக் கொன்ற கணவனும், மனைவி-யும், தாங்களும் தற்கொலை செய்து கொண்டனர்.

பண்ருட்டி அருகே உள்ள திருவதிகை கிராமத்தைச் சேர்ந்த பெயிண்டரான ராஜாங்கத்தின் (49) மனைவி மல்லிகா, மகள்கள் திவ்யா (12), தீபிகா (9).
ராஜாங்கத்திற்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு வந்ததால் அவரால் சரியாக வேலைக்குச் செல்ல முடியவில்லை. இதனால் குடும்பம் வறுமை வாடி வந்தது.இதனால் விரக்தியடைந்த ராஜாங்கம் தனது மனைவி மற்றும் மகள்களுடன் உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீக்குளித்து உயிரிழந்தனர்.

2 குழந்தைகளை தூக்கிலிட்டு தம்பதி தற்கொலை:

இந் நிலையில் 2 குழந்தைகளை தூக்கிலிட்டுக் கொன்ற கணவனும், மனைவியும், தாங்களும் தற்கொலை செய்து கொண்டனர்.

சென்னை ஜாபர்கான்பேட்டை காமராஜர் காலனியில் அப்பாதுரை தெருவில் வசித்து வந்தவர் அன்வர் (32). ஆட்டோ டிரைவராக இருந்து வந்தார். தி.நகர் பகுதியில் ஆட்டோ சங்க துணைத் தலைவராகவும் செயல்பட்டு வந்தார்.இவருக்கு பரீதா (23) என்ற மனைவியும், ரைனா (4), ரிஸ்வானா (2) ஆகிய 2 குழந்தைகளும் இருந்தனர்.

வீட்டில் வறுமை தாண்டவமாடியதால் பெருமளவில் பணம் கடனாக வாங்கியிருந்தார். கிட்டத்தட்ட ரூ. 1 லட்சம் பணத்தை கந்து வட்டிக்கு வாங்கியிருந்தார் அன்வர். இதற்காக தினசரி ரூ.300 வட்டியாக செலுத்த வேண்டுமாம்.ஆனால் சமீப காலமாக அவரால் வட்டிப் பணத்தைக் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் கடன் கொடுத்தவர்கள் நெருக்க ஆரம்பித்தனர்.

இந் நிலையில் முதலில் தனது குழந்தைகள் ரைனாவையும், ரிஸ்வனாவையும் கயிற்றை கட்டி தூக்கில் தொங்கவிட்டார் அன்வர். பின்னர் அன்வரும், பரிதாவும் தூக்குப் போட்டு தாங்களும் தற்கொலை செய்து கொண்டனர்.இன்று காலை நான்கு பேரும் பிணமாக தூக்கில் தொங்கியதைப் பார்த்த அப்பகுதி மக்கள் கதறினர். போலீஸார் நான்கு பேரின் உடல்களையும் மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அன்வருக்கு கந்து வட்டிக்குப் பணம் கொடுத்தவர்கள் மிரட்டலே இந்த மரணத்திற்குக் காரணமாக கருதப்படுவதால், அன்வரை யார் யார் மிரட்டினார்கள் என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.


தலையங்கம் இதோ :

          செம்மொழி மாநாட்டு செய்திகளை அல்லது  முதல்வர் கருணாநிதிக்கு பாராட்டும் நிகழ்வுகளை  இப்போதுதான் நான் தொலைக்காட்சியில் பார்த்தேன்.

 நடப்பது  மிகபெரிய செலவில் - உலகமெல்லாம் பார்க்கும் செம்மொழி மாநாடு என்ற தர நினைப்பு கூட இல்லாமல்,  இன்று நடந்த பட்டிமன்றத்தில் (திரைதுறையா, சின்ன துறையா , அச்சுதுறையா) நக்கீரன் கோபால் அவர் வீட்டு கதைகளை சொல்லுகிறார்.  மெட்டி 'ஒழி' என்கிறார். நமீதா என்கிறார்.

 வாகை சந்திரசேகர் கருணாநிதி புராணம் பாடுகிறார்.  திருப்பூர் கிர்ஷணன் என்ன பேசினார் என்று எனக்கு இன்னும் விளங்கவில்லை.எஸ் வி சேகர்  இன்னும்- இரண்டு அர்த்தத்தில் 'அம்மா' வை திட்டுகிறார்.நேற்று இதைவிட கொடுமை ,  ஒரே முதல்வர் புராணம். முதல்வரின் புராணத்தில் தமிழ் எப்படி வளரும்.

தொலைக்காட்சியில்  பார்த்த எனக்கே இவ்வளவு கடுப்பென்றால் . செலவு செய்து நேரில் பார்த்தவர்க்களுக்கு கடுப்பு இருக்காதா ? அல்லது அதை எதிர்ப்பார்த்துதான் வந்தார்களா ?



நிற்க .


            தமிழ்நாட்டின் உணமையான பொருளாதார நிலவரத்தை மேலே  உள்ள செய்தி நமக்கு சொல்லுகிறது.சாதாரணமாய் குடும்பம் நடத்துவதே மிகபெரிய போராட்டமாய் உள்ளது.வெட்டி பெருமை பேசுவதில்- தான் இந்த அரசு மட்டுமல்ல மத்திய அரசும் உள்ளது.விலைவாசி சென்ற வருடத்திற்கும் இந்த வருடத்திற்கும் நாற்பது சதவீதம் உயர்ந்துள்ளது.  வருமானம் இருபது சதவீதம் குறைந்துள்ளது.
ஏதோ ஒரு சில துறைகளை தவிர, வெகு ஜனங்கள்  மிகபெரிய பாதிப்பில் உள்ளார்கள் எனபது தெளிவு.ஒரு ரூபாய்க்கு அரிசியும் தொலைக்காட்சியும் கொடுத்துவிட்டால் எல்லா வறுமையும் போய்விட்டது. என்று  'தேர்தல்' கணக்கில்  திமுக அரசு  உள்ளது.

உண்மை நிலவரம் அப்படியில்லை . கடந்த பத்து வருடங்களில் தமிழ் நாட்டில் குடிகாரர்களின் எண்ணிக்கை மிக அதிகம் ஆகிவிட்டது. குடிப்பழக்கம், குடும்பம் மொத்தத்தையும் பாதிக்கின்றது.குடும்பத்தலைவன் குடிப்பழக்கத்தில்  இருந்தால் அவனை நம்பி உள்ள  ஒட்டு மொத்த குடும்பம் அழிகிறது.  அல்லது கலாசார சீர்கேட்டில் விழுகிறது.மிகத்தவறான கொள்கைகளினால் நாட்டின் விவசாய உற்பத்தி மிக குறைந்து விட்டது.  விவசாயம் செய்ய ஆள் இல்லை . விவசாய விலை பொருட்கள் இல்லாமல்  விலைவாசியை எப்படியும் கட்டுபடுத்த முடியாது.


              அந்த விவசாயத்தை சீர்தூக்க எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.விவசாய விலை-நிலங்கள் எல்லாம் அழிக்கப்பட்டு வருகிறது. ஆற்றின் மணலை  'உடனடி' காசுக்காக அள்ளி  நீர் ஆதாரங்களை  கெடுத்துவிட்டார்கள்.  மணலை அள்ளுவது அனைத்து கட்சி களின்  ஆட்களும்தான். இதில் கூட்டணி வைத்துத்தான் எல்லாம் நடைபெறுகிறது.

எங்கே போகிறது தமிழகம் ? எப்போது விடியும் தமிழகத்திற்கு. எப்போது  ஆட்சியாளர்கள் உண்மையான மாநில அக்கறை கொன்று கொள்கைகளை வகுப்பார்கள் ?


கடைசியாய் சொல்கிறோம்.உங்களுக்கெல்லாம் நல்ல சாவே வராது.

இரண்டாம் நாள் என்ன செய்தார்கள் - செம்மொழி மாநாட்டில்.

             வலைபதிவர்கள்  போர்க்கொடி தூக்கினார்கள் !வலைப்பதிவாளர்கள் கட்டுரை சமர்ப்பிப்பதற்கு நேரம் ஒதுக்காததைக் கண்டித்து அவர்கள் கோஷங்களை எழுப்பியதால், சலசலப்பு ஏற்பட்டது. தமிழ் இணைய மாநாடு என்பது, இதுவரையிலும் தனியாக நடத்தப்பட்டு வந்தது. முதன் முறையாக, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுடன் இணைந்து, 9வது இணைய மாநாடாக நடந்து வருகிறது. கொடிசியா வளாகத்தில் "டி' அரங்கில் இணைய மாநாடுக்காக, 5 சிறு அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், ஜெர்மனி, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், இங்கிலாந்து மற்றும் அமெரிக்க நாடுகளிலிருந்தும் தமிழறிஞர்கள், கணினிப்பொறியாளர்கள் வந்துள்ளனர். மாநாட்டில் 15 தலைப்புகளில் 136 கட்டுரைகளை அறிஞர்கள் சமர்ப்பிக்கின்றனர்.

             தமிழ் இணைய மாநாட்டை "உத்தமம்' (இன் பிட்) என்கிற அமைப்பு நடத்தி வருகிறது. தற்போது நடக்கும் இணைய மாநாட்டுக்கு வந்த பலருக்கும், முறையாக தங்குமிட ஏற்பாடு செய்யவில்லை, அடையாள அட்டை வழங்கப்படவில்லை என்று வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் மத்தியில் பரவலான புகார் இருந்தது.  ஆயினும், நேற்று துவங்கிய இந்த மாநாட்டில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டின் முகப்பரங்க பொழிவினை சிங்கப்பூர் அமைச்சர் ஈஸ்வரன் துவக்கி வைத்துப் பேசினார். அவர் பேசுகையில், ""சிங்கப்பூரில் தமிழர்கள் குறைவாக இருந்தாலும், தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஆட்சி மொழிகளில் ஒன்றாக அந்த அரசு அங்கீகரித்துள்ளது. பள்ளிகள், வானொலி, தொலைக்காட்சி எல்லாவற்றிலும் தமிழுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது,'' என்றார். மத்திய தகவல் தொழில் நுட்பத்துறையின் சார்பில் 2 இலவச தமிழ் மென்பொருள் குறுவட்டுக்களை அத்துறையின் அமைச்சர் ராஜா வெளியிட, ஈஸ்வரன் பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சிக்கு, தமிழ் இணைய மாநாட்டுக் குழுவின் தலைவரும், கான்பூர் ஐ.ஐ.டி. தலைவருமான ஆனந்த கிருஷ்ணன் தலைமை வகித்தார்.

                        மாநாடு துவங்கி, கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டு, விவாதங்கள் நடந்தன. மாநாடுக்கு "பிளாக்கர்ஸ்' எனப்படும் வலைப்பதிவாளர்கள் 30க்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். அவர்களின் கட்டுரைகளைச் சமர்ப்பிக்க நேரம் ஒதுக்குவதாக, தகவல் தரப்பட்டு இருந்ததாகத் தெரிகிறது. அதை நம்பி வந்த இவர்களுக்கு, நேரம் ஒதுக்கப்படவில்லை. மாநாடு நடத்தும் "உத்தமம்' அமைப்பின் செயலர் மணியம் கூறியதன்பேரில் வந்ததாக அவர்கள் கூற, உத்தமம் அமைப்பின் துணைத்தலைவர் வெங்கட்ரங்கன் உள்ளிட்டோர், "முறைப்படி பதிவு செய்யாதவர்களுக்கு நேரம் ஒதுக்க முடியாது' என்று கூறியுள்ளனர். இதனால், அவர்கள் மாநாட்டு அரங்கிற்கு வெளியே வந்து சத்தம் போட ஆரம்பித்தனர். தகவலறிந்து, மாநில தகவல் தொடர்புத்துறை அமைச்சர் பூங்கோதை வந்து, அவர்களை சமாதானப்படுத்த முயன்றுள்ளார். அவர்கள் ஏற்கவில்லை. வெளிநாட்டைச் சேர்ந்த தமிழ் ஆய்வாளர்கள் முன் வந்து சமாதானப்படுத்தினர். தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தைக் குறைத்துக் கொண்டு, வலைப்பதிவாளர்கள் கட்டுரை சமர்ப்பிக்க வாய்ப்பு வழங்குவதாகக் கூறியுள்ளனர். அதனால், இன்று அவர்கள் தங்களது கட்டுரைகளைச் சமர்ப்பிப்பார்கள் என்று தெரிகிறது.

                   இது குறித்து தமிழ் இணைய மாநாட்டுக்குழுவின் உறுப்பினரும், "உத்தமம்' அமைப்பின் துணைத்தலைவருமான வெங்கட்ரங்கனிடம் கேட்டபோது, ""அவர்கள் இதுபற்றி முறைப்படி தகவல் தெரிவிக்கவில்லை; அதனால், அவர்களுக்கு நேரம் ஒதுக்க இயலவில்லை. ஆனாலும், அவர்களை புறக்கணித்து விடவில்லை. நாளை அவர்களுக்கு நேரம் ஒதுக்க ஏற்பாடு செய்துள்ளோம். தமிழில் வலைப்பூக்கள் அதிகரிப்பது, வரவேற்கப்பட வேண்டியது. வலைப்பூக்களில் எழுதுவோரைப் புறக்கணிக்கவும் தேவையில்லை. வேறு எந்த சர்ச்சையும் இல்லை,'' என்றார்.

                 முதல் தமிழ் இணைய மாநாடு, 1997ல் சிங்கப்பூரில் கோவிந்தசாமியால் நடத்தப்பட்டது. இரண்டாவது மாநாடு, 1999ல் சென்னையிலும், 3வது மாநாடு, 2000வது ஆண்டில் சிங்கப்பூரிலும், அதற்கடுத்த ஆண்டில் மலேசியாவிலும், 5வது மாநாடு, 2002ல் அமெரிக்காவிலும் நடத்தப்பட்டன. மீண்டும் சென்னையில் 6வது தமிழ் இணைய மாநாடு, 2003ம் ஆண்டில் நடந்தது. ஏழாவது மாநாடு, 2004ல் சிங்கப்பூரிலும், எட்டாவது மாநாடு, 5 ஆண்டுகள் இடைவெளியில் 2009ல் ஜெர்மனியிலும் நடத்தப்பட்டன. ஆனால், ஒரே ஆண்டிற்குள் 9வது இணைய மாநாடு, செம்மொழி மாநாட்டுடன் நேற்று துவங்கியது.

 கணினியில் தமிழின் பயன்பாட்டை அதிகப்படுத்துதல்,
கணினி வழி தமிழ் கற்றல் மற்றும் கற்பித்தல்,
கணினி மொழியியல் ஆகிய பிரிவுகளில் 20 கட்டுரைகள் ஆய்வுக்கு சமர்ப்பிக்கப்படுகின்றன.
இணைய வழிக்கல்வி- 6,
கணினி வழி தமிழ் மொழி சொற்திருத்திகள்-6,
கணினியில் தமிழ்ப்பேச்சு மற்றும் சொற்பகுப்பு ஆய்வு-13,
இணைய தொழில் நுட்பத்தில் தமிழ் மொழி மற்றும் திறவூற்று செயலிகள் என்ற தலைப்பில்-5,
தமிழ் மின் தரவு மற்றும் மின் அகராதிகள்-12,
கணினி வழி தமிழ் எழுத்து உணரி செயல்பாடுகள்-7,
தமிழில் சிந்தனைத் திறன் கணினிச் செயல் திரல்கள்-10,
கணினியில் தமிழ் தட்டச்சு=3,
தமிழ் வலைப்பூக்கள்-4,
மின்னரசும்,
தமிழ் தகவல் தொழில் நுட்பமும்-6,
கணினி வழி கல்வி-8,
தமிழில் தேடு பொறிகள்-7,
கையடக்கக் கருவிகளில் தமிழ்-5,
தமிழ் ஒருங்குறி-4,


போன்ற  தலைப்புகளில் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படுகின்றன.

சாதீய கட்சிகளின் " திராவிடரா அல்லது தமிழரா " என்ற புதிய ஆராய்ச்சி.

சாதீய கட்சிகளின் " திராவிடரா அல்லது தமிழரா " என்ற புதிய ஆராய்ச்சி.இப்போது தமிழ்நாட்டில் புதிய ஆராய்ச்சி ஒன்று நடைபெறுகிறது.

தமிழரா அல்லது திராவிடரா என்பதுவே அந்த ஆராய்ச்சி.

இந்த ஆராய்ச்சியை செய்பவர்கள் யார் ?

தமிழர்களுக்குள் ஒரு குறிப்பிட்ட  சாதியை  மட்டும் அரசியல் பிரதானப்படுத்தி  மற்ற தமிழ் இனங்களை எதிர்த்து அரசியல் செய்யும்  ஒரு குழு அல்லது அந்த குழுவின் தலைமை.

ஏன் இப்போது இந்த அவசியம் ஏற்பட்டது ?


ஏனென்றால் சாதீய அரசியல்  இனி எடுபடாது அதற்க்கு சாவு மணி அடித்தாகிவிட்டது. குறிப்பிட்ட சாதியினரின்  ஆதரவு இருந்தாலும் தேர்தலில் வெற்றி பெறவோ அல்லது அதிகாரங்களை கைப்பற்றவோ இந்த  சாதீய அடையாளம் மட்டும் போதாது அதே நேரம் தமக்கு வாக்களிக்காத அல்லது எப்போதும் தங்களை புறக்கணிக்க போகும்  மக்களை ஓரம் கட்ட  ஒரு சித்தாந்தம் வேண்டும் அதற்க்கான விடைதான் இந்த  புதிய ஆராய்ச்சி - தமிழரா ? அல்லது திராவிடரா ?


தமிழர்களை எப்படி  அடையாளம் காண போகிறோம் ?

சாதிகளின் வழியாகவா ?

மொழி பேசும் இனத்தின் வழியாகவா ?

சாதிகளின் வழி தமிழர்களை பிரித்தால் , எந்தெந்த சாதிகள் மட்டும் தமிழர்கள்?

நீங்கள் விரும்புவது அல்லது ஆராய்வது மொழி வழி இனமா ? அல்லது சாதி வழி மொழிபேசும் இனமா ?


                     நீங்கள் காக்க நினைப்பது இருக்க வேண்டும் என நினைப்பது சாதிகளையா  அல்லது சாதிகளின் மக்களையா அல்லது  தமிழ் மொழி பேசும் இனங்களையா?தமிழர் வேறு தமிழ் மொழி வேறு என்றால் யார் தமிழர்கள் என்ற பட்டியலை முதலில் தயார் செய்யுங்கள்.அவர்களை கொண்டு உங்களின் சீரிய அரசியல் நோக்கம் என்ன என்பதனை தெரிவியுங்கள். விவாதியுங்கள். வீட்டுக்கு , பராமரிப்பிர்ற்கு இரண்டு வருடத்திற்கு ஒரு முறை வண்ணம் பூசுவதை போல அரசியல் கொள்கைகளை மாற்றி அல்லது நிறம் மாற்றி அதன் பலனை அறுவடை செய்ய நினைக்கும் கீழ்தர அரசியலை தவிருங்கள். உண்மையான மக்கள் பணி செய்யுங்கள் உங்களை சாதிகளையும் மீறி  மக்கள் நேசிப்பார்கள்.

        இலங்கையில் தமிழர் இனம் வீழ்ந்ததற்கு காரணம் எனக்கு தெரிந்து திராவிடரா அல்லது தமிழரா என்ற பிரச்சினையால் அல்ல.அது காங்கிரஸ் மற்றும் சோனியாவின்  விருப்பத்தினால் நிகழ்ந்தது. அதற்க்கு துணை போன  தமிழர்களை கொண்ட அரசை தமிழ் நாடு கொண்டிருந்தது. அதற்க்கு மாநில அரசிற்கு பச்சை தமிழர்களின் ஆதரவு பலமாய் இருந்தது. இது  எப்படி சொன்னாலும் உண்மை. இன்னும் ஆராய்ந்தால் தமிழ் இனம் வீழ்ந்தது தமிழ் இனத்திற்குள் இருக்கும் துரோகிகள்தாம்  பெரும் காரணம்.


தமிழ் இன அல்லது தமிழ் சாதிகளின் ஆதரவுடன் அரசியல் செய்யும் விடுதலை சிறுத்தைகள் அல்லது பாட்டாளி மக்கள் கட்சியினரின் இன்றைய நிலை என்ன ?

ஈழத்தில் தமிழர் அழிய காரணமான  மத்திய அரசோடு மற்றும் மாநில அரசோடு அவர்கள் காட்டும்  இணக்கத்திற்கு அர்த்தங்கள் என்ன?


இதையும் சேர்ந்து ஆராயுங்கள் . பல விடைகள் கிடைக்கும்.  நல்ல பதிலோடு மக்கள் பணிகளை உளப்பூர்வமான நேர்மையோடு  செய்ய வாழ்த்துகிறோம்.

ஆய்வுக்கான செய்தி இங்கே :

               ந
மது அடையாளம் தமிழரா? அல்லது திராவிடரா? என்ற தலைப்பில் சென்னையில் முதல் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கத்திற்கு மருத்துவர் க.கிருஷ்ணசாமி தலைமையில் நடைபெற்றது.இதில் புலவர் புலமைபித்தன், மா.இலெ.தங்கப்பா இயக்குனர். புகழேந்தி தங்கராஜ், இதழாளர் அய்யநாதன் உட்பட தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.இக்கருத்தரங்கை துவக்கி வைத்தும், இறுதியிலும் உரையாற்றிய புதிய தமிழகம் கட்சித் தலைவர் மருத்துவர் க.கிருஷ்ணசாமி, நாம் திராவிடரா அல்லது தமிழரா என்ற விவாதத்தை நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்பதற்காகவே இந்தக் கருத்தரங்கம் நடத்தப்படுவதாகத் தெரிவித்தார்.

               "தமிழர் என்கிற நமது அடையாளத்தை முற்றிலும் அழிக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது, அதனை தமிழக முதல்வரே செய்து வருகிறார். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று வரலாற்றில் செழித்திருந்த தமிழினம், அன்னிய இன ஊடுவல்களால் சாதிய நோய்வாய்ப்பட்டுள்ளது.இதனை திராவிட கோட்பாடுகள் மேலும் வலிமைபடுத்துவதாகவே உள்ளது. திராவிடம் என்பது தமிழரின் வரலாற்றில் இடையில் திணிக்கப்பட்டது, அது இடையிலேயே போய்விட வேண்டும்.தமிழன் என்கிற அடையாளம் மட்டுமே தமிழினத்தைத் சூழ்ந்துள்ள பிரச்சனைகளக்கு தீர்வு காண உதவும். உலகமெல்லாம் பிரிந்து போவதற்குச் சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றன, நாம் மட்டுமே இணைந்து வாழ்வதற்கு சண்டை போட்டுக் கொண்டிருக்கிறோம்.

              சாதியால் நாம் ஒருவரை ஒருவர் தாழ்த்திக்கொண்டிருக்கின்றோம். தமிழன் என்கிற உணர்வால் அதனை நாம் வென்றிட முடியும். கண்டதேவி கோயில் தேர் வடம் பிடித்தது, சாதியை ஒழித்து எல்லோரும் ஒன்றுபட வேண்டும் என்பதற்கே. ஈழத்தில் நம் இனத்தை அழித்த போரை நிறுத்த நாம் எப்படியெல்லாமோ போராடினோம்,ஆனால் போர் நிற்கவில்லை. நமது போராட்டங்களுக்கு எந்த அங்கீகாரமும் கிடைக்கவில்லை.

         6 கோடி பேர் தமிழ்நாட்டில் இருந்தும் நம்மால் ஈழத்தில் நம் இனத்தைக் காக்க முடியாமல் போனதற்கு நாம் தமிழர் என்ற ஒரே அடையாளத்துடன் ஒற்றுமையாக போராடததே காரணம் ஆகும்.ஒரு பக்கம் திராவிடம் என்ற அடையாளம், மறுபக்கம் சாதியம் என்கிற நம்மை பிரிக்கும் சமூக அடையாளம். ஈழ விடுதலைக்கு எதிராக நடந்த துரோகத்திற்கு திராவிடமும் ஒரு காரணம்.நாம் எப்படி திராவிடர் என்று அடையாளப்படுத்தப்படுகிறோம்? இந்த உலகில் உள்ள மனித இனங்கள் மூன்றாக வகைபடுத்தப்பட்டுள்ளன.ஒன்று காக்கசாய்ட் எனும் வெள்ளையினம், இரண்டாவதாக மங்கோலாயிட் எனும் மஞ்சள் இனம், மூன்றாவதாக நீக்ராய்ட் என்கிற கருப்பினம். நம்மை கருப்பினத்திற்கு கீழ் ஆஸ்ட்ராய்ட் என்று துணை இனமாக பிரித்துக் காட்டுகின்றனர். இதையே அடிப்படையாகக் கொண்டு நம்மை திராவிடர் என்றும், நாம் தொன்று தொட்டு வாழ்ந்த இடம் திராவிடம் என்றும் கூறுகின்றனர்.ஆனால் திராவிட இனம் என்ற ஒன்று இருந்ததாக சான்றுகள் ஏதுமில்லை. சிந்து வெளி நாகரிகத்தை திராவிட நாகரிகம் என்கின்றனர், அது அழிந்தததற்கு ஆரியப் படையெடுப்பு காரணமென்கி்ன்றனர். ஆனால் அவர்கள் கூறும் காரணங்களை ஆராய்ந்து பார்க்கையில் இவை எதற்கும் சான்றுகள் இல்லையென்பது தெரிகிறது.

           இங்கு வந்துள்ளவர்கள் ஆரியர்களும் இல்லை, அவ்வாறு கூறுவது ஒருவித மாயை. அதுபோலவே நம்மை திராவிடர் என்று கூறுவதும் மாயையே. நம்மை திராவிடர் என்று அடையாளப்படுத்திவரும் தமிழக முதல்வர் விவாதத்திற்கு அழைக்கட்டும் நான் தயாராகவே இருக்கிறேன்.எனவே திராவிடர் என்ற பொய் எப்படி நமது அடையாளமாக முடியும்? நம்மை திராவிடர் என்று அடையாளப்படுத்துவது, நமது பிரச்சனைகளுக்குத் தீர்வு காண அல்ல, தமிழினத்தை, அதன் அடையாளத்தை சிதைப்பதற்கே பயன்படுத்துகின்றனர்.

        நாம் நம்மை தமிழர் என்று அடையாளப்படுத்திக்கொண்டால் தான் தமிழினத்தின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியும். ஈழத்தில் தமிழினத்தை அழிக்க நடந்த போர், இப்போது தமிழினத்தின் அடையாளத்தை அழிப்பதில் தொடர்ந்து கொண்டிருக்கிறது.இதைத் தடுத்து நிறுத்த வேண்டுமானால், நமது அடையாளம் தமிழர் என்பதை உணர்ந்து நாம் ஒன்றிணைய வேண்டும். திராவிடம் பிரிக்கிறது. தமிழர் என்பது இணைக்கிறது" என்று மருத்துவர் கிருஷ்ணசாமி பேசினார்.இக்கருத்தரங்கில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:

"எங்கள் குருதியோடு இரண்டரக் கலந்துள்ள தமிழ் மொழியின் வழி - எங்கள் தாய் மொழியின் வழி - ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகத் தமிழர் என்றே எங்களை அடையாளம் காட்டுகிறது வரலாறு.,இந்த நீ்ண்ட நெடிய பெருமிதத்திற்குரிய வரலாற்றைத் திரித்து, தங்களது சுய இலாபங்களுக்காக 'திராவிடர்' என்று எங்களை அடையாளப்படுத்த நினைப்பவர்கள் எவ்வளவு உயர்ந்த பதவியில் இருந்தாலும், இந்தக் கருத்தரங்கம் அவர்களை வன்மையாகக் கண்டிக்கிறது.நாங்கள் பிறப்பால் தமிழர், இறப்பாலும் தமிழர். எங்களது அடையாளம். அது மட்டுமே எங்கள் அடையாளம் என்று தமிழ் அறிஞர்களும், தமிழ் ஆர்வலர்களும் பங்கேற்கும் இந்தக் கருத்தரங்கம் வலியுறுத்துகிறது.தமிழர் என்கிற எங்கள் அடையாளம் காக்க, தமிழராய் எழுவோம் என்று இக்கருத்தரங்கம் உறுதியேற்கிறது".

       தமிழரா? திராவிடரா? எது நமது அடையாளம் என்பதை ஐயத்திற்கிடமின்றி உறுதிபடுத்த தமிழ்நாடு முழுவதும் இப்படிப்பட்ட கருத்தரங்கத்தை புதிய தமிழகம் கட்சி நடத்தும் என்றும் மருத்துவர் கிருஷ்ணசாமி கூறினார்.


ஆணையிடுங்கள் காத்திருக்கிறேன் - முதல்வர் கருணாநிதி.

""தமிழுக்கு என்னென்ன செய்ய வேண்டுமென்று அரசுக்கு ஆணையிடுங்கள்,'' என்று செம்மொழி மாநாட்டு ஆய்வரங்கத்தில் பங்கேற்றுள்ள தமிழறிஞர்களிடம் முதல்வர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்தார்.


உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஆய்வரங்கங்களின் துவக்கவிழா, கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் உள்ள "டி' ஹாலில் அமைக்கப்பட்டுள்ள தொல்காப்பியர் அரங்கத்தில் நடந்தது. ஆய்வரங்கத்தைத் துவக்கி வைத்து, முதல்வர் கருணாநிதி பேசியதாவது: தமிழ்மொழியை மேலும் செழுமைப்படுத்திடவும், அது என்றும் உயிரோட்டமுள்ள மொழி என்பதை மெய்ப்பித்திடும் வகையில், அதனை வளர்த்து 21ம் நூற்றாண்டின் தேவைகளுக்கேற்ப முன்னெடுத்துச் செல்லவும், உரிய ஆலோசனைகளையும், உயர்ந்த கருத்துக்களையும் இந்த ஆய்வரங்கத்தின் மூலமாகப் பெற இருக்கின்றோம். தமிழ்மொழி-தமிழர் பண்பாடு-நாகரிகத்தைப் பொறுத்தவரை, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது எல்லா முனைகளிலும் புதிய எழுச்சியைக் காண முடிகிறது. ஏறத்தாழ 50க்கும் மேலான நாடுகளிலிருந்தும், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான ஆய்வறிஞர்கள் இங்கே வந்திருப்பது, புதிய தெம்பையும், நம்பிக்கையையும் தருகிறது.


ஆய்வரங்குகளில் வைக்கப்படும் கட்டுரைகளும், விளக்கப்படும் கருத்துக்களும் மக்களைப் புதிய கோணத்தில் சிந்திக்கத் தூண்டிடும் தன்மையுடையவையாக இருத்தல் வேண்டும். அந்த அளவுக்கு மிக உயர்ந்த தரத்தை உடையவையாகக் கட்டுரைகளும், கருத்துரைகளும் இருந்தன என்று கருதப்படக்கூடிய அளவுக்கு இந்த ஆய்வரங்கங்கள் அமைந்திட வேண்டுமென்று விரும்புகிறேன். இன்னும் என்னென்ன தமிழுக்கு வேண்டும் என ஆய்வரங்கத்திலும், இணைய மாநாட்டிலும் பங்கேற்கிற அறிஞர் பெருமக்கள் எடுத்துச் சொல்லி, இந்த அரசுக்கு ஆணையிட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். உயிருள்ளவரை தமிழுக்காகப் பாடுபட, நம்மைத்தமிழுக்கு முழுமையாக ஒப்படைத்திட, நமது தமிழ்த் தொண்டுப் பயணத்தை மேலும் வேகமாகத் தொடர்ந்திட, உரிய ஊக்கத்தையும், உறுதியையும் இந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நமக்கு அளித்துள்ளது.  இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார்.

செம்மொழி மாநாட்டில் செம்மை இல்லாத விடயங்கள்

செம்மொழி மாநாடுக்கான அறிவிப்பு வந்த நாளிலிருந்து, அந்த மாநாடு தொடர்பான ஏற்பாடுகள், ஆய்வுகள், வளர்ச்சிப்பணிகள் குறித்து தினமும் மக்களிடம் செய்திகளை பரப்பி, மாநாடு இவ்வளவு சிறப்பாக நடப்பதற்கு உழைத்தவர்கள் ஊடகத்துறையினர். ஆனால், அவர்கள் நேற்றைய மாநாட்டின் ஓரங்கட்டப்பட்டனர். மேடையிலிருந்து பல நூறு அடி தூரத்தில், கிட்டத்தட்ட பந்தலின் முடிவுப் பகுதியில் பத்திரிக்கை நிருபர்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. அங்கிருந்து மேடையின் எந்தப் பகுதியுமே தெரியவில்லை. இதனால், தொலைக்காட்சியில் பார்த்தவாறே செய்திகளைச் சேகரிக்க வேண்டியிருந்தது. பல கோடி ரூபாயில் அமைக்கப்பட்ட மாநாட்டு அரங்கின் முன் பகுதியில் இருப்பவர்களுக்கு மட்டுமே மின் விசிறிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதனால், மற்றவர்கள் அனைவரும் வியர்வையில் குளித்தனர். தேவையே இல்லாமல் ஏராளமான விளக்குகளை எரிய விட்டதால் மேலும் எரிந்தது உடல்.

மேடையில் 10.20க்கு வந்த முதல்வர் கருணாநிதி, இடையில் சிவத்தம்பி பேசும் போது 11.10க்கு எழுந்து வெளியே சென்றார். ஐந்து நிமிடத்தில் திரும்ப வந்தார்.

ஜனாதிபதி பேசத் துவங்கும்போதே, இரும ஆரம்பித்தார். இரு முறை தண்ணீர் குடித்தும், இறுதி வரை கரகரப்பான குரலில், அவ்வப்போது இருமியபடியே பேசிக் கொண்டிருந்தார்.

கருப்புச் சட்டை அணிந்திருந்த பலர், மாநாட்டு வளாகத்துக்குள் அனுமதிக்கப்படாமல் திரும்பி அனுப்பி விட்டனர் காவல்துறையினர்.

பந்தலுக்குள் வந்த சிலரை காவல்துறையினர் சோதனையிட்டபோது, அவர்களிடம் மது பாட்டில்கள் இருந்தன. அவற்றையும், சிகரெட் பாக்கெட், தீப்பெட்டி போன்றவற்றையும் காவல்துறையினர் வாங்கி வைத்துக்கொண்டனர். ஒரு சிலர் கொடுக்க மனமில்லாமல், மண்ணைத் தோண்டி புதைத்துச் சென்றனர்.

பல ஆயிரம் பேருக்கு மதிய உணவு கிடைக்கவில்லை. மானிய விலையில் உணவு கொடுத்த இடத்தில் மக்கள் கூட்டம் குறைவாக இருந்தது. குறைவான எடையிலும், அதிக விலையிலும் இருந்ததாகக் கூறி, தனியார் உணவு நிறுவனங்கள் அமைத்திருந்த உணவுக்கூடம்-2க்குச்சென்று தேவையானதை வாங்கிச் சாப்பிட்டனர்.

அங்கேயும் போதிய அளவுக்கு உணவு கிடைக்காமல் வெளியே சென்றனர். கண்ணுக்கு எட்டிய தூரம் வரையிலும் ஓட்டல் இல்லாததால் பல ஆயிரம் பேர், மதிய சாப்பாடு கிடைக்காமல் பல மைல் தூரம் பசியோடு நடந்து சென்றனர்.

தமிழ் இனத்தை பற்றி கவலை படாமல் மொழியை பற்றி ஆராய்வது துரோகத்தனம்

கோவையில் நடக்க இருக்கும் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு தமிழ்நாட்டின் இப்போதைய முக்கியமான செய்திகளில் ஒன்று. துணை முதல்வரும் ஏனைய அமைச்சர்களும் தொடர்ந்து கோவையை பார்வையிட்டு வருகிறார்கள். இது கருணாநிதியின் வாழ்நாள் கனவு என்பது போன்ற ஒரு கருத்து எல்லா அச்சு ஊடகங்களாலும் உமிழப்படுகிறது. கோவை மக்கள் அகலமாக்கப்படும் சாலைகளைப் பற்றியும் புதைந்துபோன வீடுகளைப் பற்றியும் பேசுகிறார்கள். அமைச்சர்கள் கோவைக்கு வரப்போகும் உள்கட்டமைப்பு வசதிகளைப்பற்றி பெருமை பேசுகிறார்கள். பொதுவாக கவனிக்கவேண்டிய செய்தி யாதெனில் ஒருவரும் தமிழைப் பற்றி மறந்தும்கூட பேசுவதில்லை.


தொன்னூற்று மூன்றாம் வருடம் தஞ்சாவூரில் நடந்த எட்டாவது உலகத்தமிழ் மாநாட்டின்போது நான் எட்டாம் வகுப்பு மாணவன். அப்போது எனக்கிருந்த அறிவுக்கு மாநாடு என்றால் அதில் என்ன செய்வார்கள் என்பது பற்றி எந்த ஆர்வமும் எழவில்லை. ஊரைச் சுற்றி போடப்பட்ட சாலைகளும் ஒரு மிதவைப்பாலமும் ஒரு ரூபாய்க்கு போடப்பட்ட பொன்னி அரிசி சாதமும் மட்டுமே நான் விவாதிக்கப் போதுமானதாக இருந்தது. இப்போது ஒட்டுமொத்த தமிழ்நாடும் அதே மனோநிலையில் இருப்பதாகத் தோன்றுகிறது. அன்றைய தமிழ் மாநாட்டின்போது ஜெயலலிதாவின் கட் அவுட்டுக்கள் தஞ்சை நகரெங்கும் பயமுறுத்தின இப்போது அதே நிலைதான் நீடிக்கிறது. கருணாநிதி ஸ்டாலினின் மண்டைகளைப் பார்க்காமல் நீங்கள் இங்கு கால் கிலோமீட்டர்கூட பிரயாணம் செய்ய முடியாது, அத்தனை பேனர்கள் வீதிகளை ஆக்கிரமித்திருக்கின்றன.



ஈழத்துப் பேரழிவுக்குப் பிறகு மக்கள் அந்த சோகத்திலிருந்து மீளாத தருணத்தில் கருணாநிதியால் இந்த மாநாட்டின் அறிவிப்பு வெளியிடப்பட்டது. உலகத் தமிழ் ஆய்வு மன்றம் ஒப்புதலில்லாமலே உலகத்தமிழ் மாநாடு என்ற அறிவிப்பு வெளியானது.அந்த நிறுவனத்தின் தலைவர் நெபுரு கராஷிமா ஒரு மானம் மரியாதை உள்ள ஒரு ஆள் போலிருக்கிறது அதனால் கருணாநிதியின் 'தேவையை' அவரால் ஏற்க இயலவில்லை. நீண்டகாலமாக தி.மு.க வின் தலைவராக இருப்பதால் உலகில் சில மானஸ்தர்களும் இருப்பார்கள் என்ற தகவல் அவருக்கு நினைவுக்கு வராமல் போய்விட்டது. நெபுரு கராஷிமாவால் அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட பிறகு உலகத்தமிழ் செம்மொழி மாநாடாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இம்மாநாடு கருணாவின் தனிப்பட்ட நோக்கங்களுக்காக திட்டமிடப்பட்டது என்பதற்கான ஆதாரங்கள் இந்த புள்ளியிலிருந்தே கிடைக்கத் துவங்குகின்றன.



அதன் பிறகு சட்டமன்றத்தில் பேராசிரியர் அன்பழகன் உலகத் தமிழ் ஆய்வு மன்றம் செத்துவிட்டது என்று அறிவித்தார். ஈழத்து படுகொலைகளின் சோகம் அகலாத சூழலில் இந்த மாநாடு தேவையா என்று கேள்வி எழுப்பப்பட்டபோது கனிமொழி சொன்னார் ' மாநாட்டில் நமது ஒற்றுமையை உலகுக்கு காட்டுவதன் மூலம் நாம் ஈழத்தமிழருக்காக இன்னும் அழுத்தமாக குரல் கொடுக்கலாம்'. ஒன்று மட்டும் உறுதி, இன்றைய ஊடக ஆதரவுச் சூழலில் கருணாநிதி முகச்சவரம் செய்துகொள்வதுகூட ஈழத்தமிழர் நலனுக்காகத்தான் என்று கனிமொழியால் கூசாமல் சொல்லிவிட முடியும். சட்டமன்றத் தேர்தலை விரைவாக நடத்தும் எண்ணத்திலிருந்த கருணா இரண்டாயிரத்துப் பத்தாம் ஆண்டின் துவக்கத்தில் இம்மாநாட்டை நடத்தத் திட்டமிட்டார். ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிக்க இவ்வளவு குறுகிய காலம் போதாது என்று அறிஞர்கள் கோரியதன் பிறகு மாநாடு ஜுன் மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டது. முத்தமிழ் செக்யூரிட்டிக்கு ( காவலருங்க) ஆய்வுக்கட்டுரை என்பது ஜெகத்திரட்சகனுடைய சொறிந்துவிடும் வாழ்த்துரையையைப் போல எளிமையானதான தோன்றியதை என்னவென்று சொல்வது?



தமிழை ஒழித்துக்கட்டும் முயற்சி ஏதோ ஜெயலலிதா காலத்தில் துவங்கி கருணாநிதி காலத்தில் நிலை பெற்றதாக பலர் கருதுகிறார்கள், சில தமிழறிஞர்கள் உட்பட. தமிழ் மொழி காமராஜர் அண்ணாதுரை காலம்தொட்டே அரசினால் கைவிடப்பட்ட ஒன்றாகவே இருக்கிறது. இந்தி எதிர்ப்புப் போராட்டம்தான் அண்ணாதுரையை அரியாசனத்தில் அமர்த்தியது. தமிழின் வளர்ச்சிக்கு அவர் செய்தது என்ன ? இன்னும் சொல்லப்போனால் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் அவர் மாணவர்ளை காட்டிக்கொடுக்கும் வேலையைத்தான் செய்தார். லட்சக்கணக்கிலான தமிழ் மக்களை மட்டுமே கொண்டிருக்கிற இலங்கையில் பொறியியலும் மருத்துவமும் தமிழில் கற்றுத்தரப்படும்போது இதற்கான முதல் முயற்சிகூட அண்ணா காலத்தில் செய்யப்படாதது ஏன்? 1968ல் அண்ணதுரையால் நடத்தப்பட்ட இரண்டாவது உலகத்தமிழ் மாநாட்டில் ஏராளமான சிலைகள் சென்னையில் திறக்கப்பட்டன அலங்கார ஊர்திகள் மாநாட்டில் ஊர்வலம் சென்றன, வேறென்ன நடந்ததென்றால் யாருக்கும் தெரியாது. நாடகத்துறையில் இருந்தவர் என்பதால் அரங்கம் அமைபதைத் தவிர வேறெதையும் அவரும் செய்யவில்லை.



அதன் நீட்சியாக கருணாநிதியும் மொழிக்கு அவர் செய்யப்போகும் சிறப்பு பற்றி ஒரு எழவும் பேசியதாகக் காணோம் எப்போதும் மாநாட்டுப் பூங்காவில் தொடங்கி அரசுக் கழிப்பிடம் கட்டுவது வரையிலான கட்டுமான விவகாரங்களைப் பற்றித்தான் ஆய்வுக்கூட்டம் நடத்துகிறார். மாநாட்டுப் பாடலை கருணாநிதி எழுத ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க கவுதம் மேனன் இயக்கியிருக்கிறார். நல்லவேளையாக நமீதா நடனமாடாத காரணத்தால் தமிழினம் தப்பிப்பிழைத்தது. அண்ணாதுரை காலத்தில் துவங்கிய ஜனரஞ்சகமான மாநாடு எனும் பழக்கம் இப்போது கருணாநிதியின் கதை வசனம் எழுதப்பட்ட படங்களைப் போல சகிக்க முடியாததாக வளர்ந்திருக்கிறது. மொழியைக் காப்பதற்கு ஏதாவது செய்பவர்தானே அதை வளர்ப்பதற்கும் தகுதியுடையவராவார் ? கருணா தமிழைக் காப்பதற்கு என்ன முயற்சியை இதுவரை எடுத்திருக்கிறார்? தமிழில் கலைச்சொற்களை உருவாக்குவது, மற்ற மொழி அறிவியல் புத்தகங்களை தமிழாக்கம் செய்வது ( இவை இப்போதும் சீனா ஜப்பான் நாடுகளில் மின்னல் வேகத்தில் செய்யப்படுகின்றன ) ஆகியவற்றுக்கான முன்முயற்சிகள் மயிரளவுகூட தமிழக அரசுகளால் மேற்கொள்ளப்படவில்லை. தமிழின் தொன்மையில் நான்கில் ஒரு பங்குகூட இல்லாத கன்னட மொழியின் இலக்கியங்கள் மலிவுப்பதிப்பாக கர்நாடக அரசால் மக்களுக்குத் தரப்பட்டன. இங்கு அதுபோன்ற முயற்சிகள் ஏதேனும் மேற்கொள்ளப்பட்டதா?



தாய்மொழிக் கல்வியை அரசுப் பள்ளிகள் மட்டுமே நடத்த முடியும். பொதுவாகப் பார்க்கையில் அரசுப்பள்ளிகளது தரம் குறைவது என்பது எதேச்சையானது அல்ல. இது பல ஆண்டுகளாக திட்டமிட்ட வகையில் செயல்படுத்தப்பட்டிருக்கிறது. ஒரு வகையில் அரசின் கல்விச் செலவினத்தை குறைக்கவும் இன்னொருபுறம் தனியார் வசம் கல்வியை ஒப்படைக்கவுமே அரசு விரும்புகிறது. இப்போது அரசு நிர்ணயம் செய்த கல்விக்கட்டணத்தை ஏற்க மறுத்து பள்ளிகளை திறக்க மாட்டோம் என்று அரசை மிரட்டும் தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு சொல்வது என்ன ? நாங்கள் இல்லாவிட்டால் பின்னாளில் தரமான கல்வி பெற்றவர்களே தமிழ்நாட்டில் இருக்க மாட்டார்கள் என்கிறது. ஆயிரக்கணக்கான பள்ளிகளை நடத்தும் அரசுக்கு இதைவிட பெரிய அவமானம் இருக்க முடியுமா ? ஓராண்டுக்கு முன்பு கல்வியாளர் வசந்திதேவியால் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு, அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வித்தரம் மிக மோசமானதாக இருக்கிறது என்று முடிவு வந்திருக்கிறது. ஐந்தாம் வகுப்பு பூர்த்தி செய்த அரசுப் பள்ளி மாணாக்கர்கள் எளிமையான வாக்கியங்களை அமைக்கவே அல்லது புரிந்துகொள்ளவோ தெரியாதிருக்கிறார்கள் என்கிறது அவ்வறிக்கை.



பெரும்பாலான கிராமப்புற பள்ளிகள் ஓராசிரியர் பள்ளிகள். நிர்வாகப்பணியையே செய்யத் திணறும் ஆசிரியரால் எப்படி ஐந்து வெவ்வேறு வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்த முடியும் ? இப்படியான சூழலில் நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளிக்கு வரும் மாணவர்கள் அந்தப் பாடச்சுமையை எப்படி எதிர்கொள்வார்கள்? பெரும் சதவிகிதமான மாணவர்கள் பனிரெண்டாம் வகுப்பு முடிவதற்குள் படிப்பிலிருந்து விலகுகிறார்கள். அரசும் அதையே விரும்புகிறது. ஏழைகள் எல்லோரும் படிக்கத்துவங்கினால் பிற்பாடு அவர்கள் உயர்கல்வி கேட்கமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? ஆகவே அரசுப்பள்ளிகளை தரமில்லாமல் வைத்திருப்பது அரசுக்கு மிக அவசியம். இந்த ஆண்டு +2 தேர்வில் மிக அதிக தேர்ச்சி விழுக்காடு காட்டிய விருதுநகர் மாவட்டத்தில் ஒரு அரசுக் கல்லூரிகூடக் கிடையாது. கேட்டால் சிறிய மாவட்டம் அதனால் அரசுக் கல்லூரி அமைக்க முடியாது என்கிறார் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி. ஆனால் அங்கு ஏறத்தாழ இருபது தனியார் கல்லூரிகள் இருக்கின்றன. இப்படி வறிய மக்கள் போகக்கூடிய ஒரே இடமான அரசுக் கல்லூரிகள் இல்லாத பட்சத்தில் ஏழைப் பெற்றோர்கள் எந்த நம்பிக்கையில் பள்ளிக்கு தம் பிள்ளைகளை அனுப்புவார்கள் ?



மற்றொரு வாதம் தமிழ்வழிக் கல்வியை மக்கள் விரும்புவதில்லை என்பது. இது ஏறத்தாழ உண்மையே. ஆயினும் மக்களை அந்த சூழலுக்கு தள்ளியவர்கள்தான் தமிழ்நாட்டை நாற்பதாண்டுகளாக ஆள்கிறார்கள். இவர்கள்தான் ஆளுக்கொருமுறை தமிழ் மாநாட்டை நடத்தினார்கள் மற்றும் நடத்துகிறார்கள். மருத்துவம் மற்றும் பொறியியல் உட்பட எந்த ஒரு உயர்கல்வியும் தமிழில் இல்லாததால் மக்கள் எல்லோரும் இயல்பாகவே ஆங்கிலவழிக் கல்விதான் சிறந்தது என்று முடிவெடுக்கவே செய்வார்கள். ஒருவேளை தமிழ் வழியிலேயே தமது பிள்ளைகளை படிக்கவைக்க விரும்புபவர்களுக்கு இங்கு போதுமான பள்ளிகளும் கிடையாது. ஆக ஏழை மக்களாக இருந்தாலும் சரி தமிழ்வழியில் தம் பிள்ளைகளை படிக்கவைக்க விரும்பும் நடுத்தரவர்க மக்களாக இருந்தாலும் சரி அவர்கள் ஏமாற்றத்துக்கு ஆளாவது உறுதி. இப்படி சிறுகச்சிறுக மக்கள் தமிழ் வழிக் கல்வி மீது அலட்சியத்தை உருவாக்கிய அரசுதான் இப்போது செம்மொழி மாநாட்டை நடத்துகிறது.



இப்போதும் ஆயிரக்கணக்கிலான ஆசிரியர் பணியிடங்கள் தமிழ்நாட்டில் காலியாக இருக்கின்றன. அதில் மற்ற பாடங்களுக்கு நிரப்பப்படும் அளவுக்கு தமிழாசிரியர்கள் நிரப்பப்படுவதில்லை அல்லது நிரப்பப்படுவதே இல்லை. தமிழை முதன்மைப்பாடமாக இல்லாமல் ஒரு பாடமாக படித்தவர்கள் மட்டுமே தமிழாசிரியர்களாக தற்போது பணியாற்றுகிறார்கள். தமிழ் மொழியை உயர்கல்வியாக படித்த மாணவர்கள் மாநாட்டு அறிவிப்பின்போது மேற்கூறிய காரணத்தைச் சொல்லி தமிழ் மாநாட்டின்போது தற்கொலை செய்துகொள்ளப்போவதாக!! ஒரு போராட்டத்தை அறிவித்தார்கள். அரசும் இதை கண்டுகொள்ளவில்லை, கருணாவின் தமிழுக்கான வாரிசு கனிமொழியும் இதைக் கண்டுகொள்ளவில்லை. அப்போது ஃபேஷியல் செய்துகொள்ளப் போய்விட்டாரா என்று தெரியவில்லை ஆக தமிழ் வழியில் படிக்கவும் வாய்ப்பு கிடையாது படித்தவனுக்கும் வாய்ப்பு கிடையாது.



இந்தப் பின்புலத்திலிருந்துதான் நாம் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டு ஏற்பாடுகளை அணுகவேண்டும். தமிழ் மொழியை இந்தத் தலைமுறையோடு தலைமுழுக வைக்கும் காரியங்கள் முழுவீச்சில் நடக்கின்றன. பிரந்தியமொழியில் ஒரு வார்த்தைகூட கற்காமல் பட்ட மேற்படிப்புவரை கற்க முடியும் ஒரே மாநிலம் தமிழ்நாடுதான். பள்ளிகளில் தமிழ் கட்டாயம் எனும் முந்தைய திமுக அரசின் சட்டம் என்னவானது என்றே தெரியவில்லை. மருத்துவப் பட்ட மேற்படிப்புத் தேர்வை தமிழில் எழுதி படாதபாடுபட்டார் மருத்துவர் ஜெயசேகர், அது எப்படி முடியும் என எள்ளி நகையாடியவர் திமுகவின் அப்போதைய தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் தமிழ்க்குடிமகன். இப்போதும் தமிழ் மாநாட்டுப் பணிகள் தொடர்பாக பத்திரிக்கையாளர்களுக்கு அனுப்பப்படும் அறிவிப்புக்களில் பல ஆங்கிலத்தில் இருப்பதாக தினமலரே சொல்கிறது. மாநாடுக்காக துவங்கப்பட்ட வலைதளம் பல மாதங்களாக முன்னேற்றமில்லாமல் இருக்கிறது. இம்மாநாடு ஒரு சதவிகிதம்கூட தமிழுக்காக நடத்தப்படவில்லை என்பதற்கு இதைவிட வேறு சான்றுகள் தேவையில்லை.



எத்தனை சான்றுகளை கொட்டினாலும் இக்கட்டுரை முடியாது. இது கருணாநிதி தனது ஓய்வுக்கு முன்பு சர்வதேச அளவில் நடத்திக்கொள்ள விரும்பும் ஒரு பாராட்டுவிழா முயற்சி. தான் விரும்பியது யாவையும் உடனே கிடைக்கவேண்டும் என்று விரும்பும் பணக்கார இளைஞர்களைப் போல கருணாவும் தன் வாழ்நாள் கனவுகளை தனது ஆட்சிக்குள் அல்லது ஆயுளுக்குள் செய்துகொள்ள விரும்புகிறார். கட்சிக்கு கிடைக்கும் கட்டுமான கமிஷனையும் கோவை வட்டாரத்தில் திமுகவை வலுப்படுத்தும் நோக்கத்தையும் இதில் இணைத்ததில்தான் கருணாநிதியின் சாணக்கியத்தனம் இருக்கிறது. மற்றபடி இது தமிழுக்காக செய்யப்படும் முயற்சி என்றால் அதை திமுககாரன்கூட நம்பமாட்டன். ஆறு மாதத்தில் வீணாகப்போகிற சாலைகளும் ஜுலை மாதத்திலிருந்து கவனிப்பாரில்லாதுபோகும் பூங்காக்களுமே கோவை மக்களுக்கு மிச்சமாகப் போகிறது.



சரி நம் மொழியைக் காக்க என்னதான் செய்வது என்று கேட்கிறீர்களா ? அது ஒன்றும் அவ்வளவு சிரமமானதில்லை. மொழி எப்போதும் பாமர மக்களால்தான் காப்பாற்றப்படுகிறது. இன்று உலகை ஆள்வதாக சொல்லப்படும் ஆங்கிலம் பேசுவது ஒரு காலத்தில் இங்கிலாந்திலேயே கவுரவக்குறைவாக கருதப்பட்டது. இங்கிலாந்தின் அன்றைய பிரபுக்கள் குடும்பங்களிலும் ஏன் பாராளுமன்றத்திலும்கூட பிரென்சு மொழிதான் பயன்படுத்தப்பட்டது (தேவாலயங்களில் லத்தீன்). நிலப்பிரபுத்துவம் வீழ்த்தப்பட்ட பிறகுதான் ஆங்கிலமே அங்கு தலையெடுத்தது. கோடிக்கணக்கிலான மக்களுக்கு அன்றாட உணவையே நிச்சயமற்றதாகிவிட்ட சூழ்நிலையில் நாம் நம் மொழி குறித்துமட்டும் கவலைப்பட்டால் அது ஒரு சதவிகிதம்கூட பலன்தராது. இனத்தைப் பற்றி கவலைப்படாமல் மொழியை மட்டும் நேசிப்பது அயோக்கியத்தனம். மொழியை கண்டுகொள்ளாமல் இனத்தைப் பற்றி கவலைப்படுவதாகச் சொல்வது அவ்வாறானதே.



ஏழ்மை, சுரண்டல், சாதிவெறி மற்றும் மொழிப்புறக்கணிப்பு யாவும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. இதில் ஒன்றை விடுத்து மற்றொன்றை நம்மால் சரி செய்யவே முடியாது. தமிழ் சினிமாவுக்கு தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு தரும் இழிநிலைக்கு நாட்டை தள்ளிய கருணாநிதியால்தான் மொழியைக் காப்பாற்ற முடியும் என்று இனியும் சுப.வீரபாண்டியன் வகையறாக்கள் சொன்னால், அழுத்தமாக பதில் சொல்லுங்கள் ' என் மொழி கருணாநிதியால் காப்பாற்றப்படுவதைவிட அழிந்துபோவதே மேல், ஏனெனில் என் மொழியின் கவுரவம் அது பிழைத்திருப்பதைக் காட்டிலும் முக்கியமானது'.


வாசிக்கப்பட்ட இடம் : வினவு

முள்ளிவாய்க்கால் சம்பவத்தை மறக்கக் கூடாது-தற்கொலை செய்த மாணவரின் பரபரப்புக் கடிதம்

சென்னை நுண் கலைக் கல்லூரியில் நேற்று தற்கொலைசெய்து கொண்ட மாணவர் சசிக்குமார் எழுதியுள்ள கடிதத்தில், முள்ளிவாய்க்கால் சம்பவத்தை உலகம் மறந்தாலும், தமிழர்கள் மறக்கக் கூடாது என்று எழுதியுள்ளதால் இந்தத் தற்கொலைக்கான காரணம் குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.

சென்னை எழும்பூரில் உள்ள நுண்கலைக் கல்லூரியில் படித்து வந்த மதுரை விளாங்குடியைச் சேர்ந்த மாணவர் சசிக்குமார், கல்லூரி வளாகத்தில் உள்ள மரத்தில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

அவர் எழுதி வைத்திருந்த கடிதம் போலீஸ் கையில் சிக்கியுள்ளது. அதில் அவர் எழுதியிருப்பதாவது...

உலக இனத்தில் தமிழ் இனம் தலை சிறந்த இனமாகும் உழைப்பதற்காக வாழ்ந்த உயர் தமிழன் அடிமைப்பட்டு கிடப்பதா? பாலைவனத்தை சோலைவனமாக மாற்றும் மந்திரவாதிகள் தமிழர்கள்.

முள்ளிவாய்க்கால் சம்பவத்தை உலகம் மறந்தாலும் நாம் மறக்க கூடாது. வீடு தோறும் மரம் வளர்ப்போம். இல்லையென்றால் குடிநீர் விற்பனையாவது போல, காற்றும் வியாபாரமாகி விடும்.

மரம் எழுப்பும் கொள்கைக்காக என்னையே சமர்ப்பிக்கிறேன். எனக்காக கண்ணீர் சிந்தாதீர்கள். வாழ்த்தி வழியனுப்புங்கள்.

தயவு செய்து எனது உடல் உறுப்புகளை தானம் கொடுத்துவிடுங்கள். பிறந்த பூமியில் என்னை தவழ விடுங்கள். அசையாத புகைப்படமாக இருப்பதைவிட அசைந்தாடும் மரமாக நான் எழுவேன்.

நிகழ்காலமே எதிர்காலத்திற்கு நீ நிழல் கொடு. தமிழே உனக்கு தெரியாமல் உன்னை நான் நேசிக்கிறேன் என்று எழுதியுள்ளார் சசிக்குமார்.

தமிழகத்தில் கைதான சிரஞ்சீவி பற்றி தமிழ் வார பத்திரிகை செய்தி.

தமிழகத்தில் கைதான சிரஞ்சீவி பற்றி  தமிழ் வார பத்திரிகை செய்தி.


விடுதலைப்புலிகளின் புலனாய்வு பொறுப்பாளர்களில் முக்கிய நபரான சிரஞ்சீவி மாஸ்டர் தமிழக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் விசாரிக்கப்பட்டு வருவதாக அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்த விடயங்கள் தொடர்பாக ஜுனியர் விகடன் இதழ்   அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளது


விழுப்புரம் தண்டவாள அதிர்வுகளே இன்னும் அடங்காத நிலையில் சந்திரகுமார், அருள் செல்வம், பாலா, செல்வம் என்கிற புனைப் பெயர்களைக்கொண்ட 'சிரஞ்சீவி மாஸ்டரை' வளைத் திருக்கிறது தமிழக உளவுத் துறை பொலிஸ்!


சிரஞ்சீவி மாஸ்டர், புலிகளின் உளவுத் துறையில் பொட்டு அம்மானின் அடுத்த கட்டத் தலைவர்களில் ஒருவர் என்று கூறப்படுகிறது. 12 வருடங்களுக்கும் மேலாக மத்திய, மாநில உளவுத் துறைகளால் தேடப்பட்டு வந்த சிரஞ்சீவி மாஸ்டர், ஈழப் போரின் இறுதிக் காலத்தில் களத்தில் நின்றவர். கடைசிக்கட்ட நேரத்தில் கை, கால்களில் பலத்த காயமடைந்தவர், அதன் பிறகு என்ன ஆனார் என்பது தமிழீழ ஆர்வலர்களாலேயே நேற்று வரை யூகிக்க முடியாத விஷயம்.


தமிழீழ ஆர்வலர்கள் சிலரிடம் பேச்சுக் கொடுத்த போது, நம் தகவலையே முதல் செய்தியாகக் கேட்டு அதிர்ச்சியின் விளிம்புக்கே போனவர்கள், "சிரஞ்சீவி மாஸ்டர், பொட்டு அம்மானின் பேரபிமானத்தைப் பெற்றவர். புலிகளின் தமிழகப் புலனாய்வுத் தலைவராக இருந்தார். இலங்கைக்கும் தமிழகத்துக்கும் அடிக்கடி விசிட் அடிப்பார். ஈழப் போர் தீவிரம் எடுத்த கால கட்டத்தில் புலனாய்வுப் பிரிவிடம் இருந்து அழைப்பு வர… உடனடியாகக் கிளம்பிப் போனார். போரின் உக்கிரம் மிகக் கடுமையானபோது, தமிழகத்துக்கு வந்து அதன் பாதிப்புகளை பட்டவர்த்தனமாக எடுத்துச் சொல்லி, தமிழக அரசியல் தலைவர்களின் ஆதரவைத் திரட்டும் பொறுப்பு அவருக்குக் கொடுக்கப்பட்டது.


ஆனால், இந்திய - இலங்கை அரசுகளின் தீவிரக் கண்காணிப்புகளைத் தாண்டி, அவரால் இங்கே வந்து சேர முடியவில்லை. அதன் பிறகு அவர் என்ன ஆனார் என்பதே தெரியாத நிலையில்… அவர் தமிழகத்தில் பிடிபட்டிருப்பதாகச் சொல்வது பெரிய விந்தைதான்!" என்கிறார்கள்.


இன்னும் சிலரோ, "திருகோணமலையில் உள்ள பனகுளம் பகுதியில் பிறந்த சிரஞ்சீவி, 91-ம் ஆண்டு இயக்கத்தின் நம்பகத்தைப் பெற்று யாழ்ப்பாணம் பகுதியில் தீவிர ஆயுதப் பயிற்சி எடுத்தார். அதன் பிறகு புலிகளின் உளவுப் பிரிவுக்கு வந்தார். 98-ம் வருடம் கண்ணன் என்கிற கண்ணப்பனும், சிரஞ்சீவியும் தமிழகத்துக்கு அனுப்பப்பட்டார்கள். அசம்பாவிதச் சம்பவங்களிலோ, ஆயுதக் கடத்தலிலோ ஈடுபடும் 'அசைன்மென்ட்' இவர்களுக்குக் கிடையாது. தமிழகத்தின் அரசியல் நிலைமைகளைக் கணித்துக் கொடுக்கும் பணி மட்டும்தான். அதைச் செவ்வனே செய்யக்கூடியவர் சிரஞ்சீவி. அதனாலேயே அவரை 'தமிழ்நாட்டு பொட்டு அம்மான்' என்பார்கள்.


ராஜீவ் படுகொலைக்குப் பிறகு தமிழகம் வந்த சீரஞ்சீவி, இங்கு உள்ள அரசியல் நிலவரங்களை ஊன்றி ஸ்டடி செய்த பிறகு, இங்கு இருந்தே ஆயுதப் பரிவர்த்தனைக்கான பொறுப்பையும் ஏற்றார். அப்போதுதான் தமிழக பொலிஸ் அவர் மீது கண் வைத்தது. அவரை மடக்கினால், புலிகளின் உளவு நெட்வொர்க்குகளைத் துல்லியமாகத் தெரிந்து கொண்டுவிடலாம் எனத் திட்டமிட்டு அவரை வளைக்க எவ்வளவோ முயன்றார்கள். ஆனால், சாதுர்யமாகத் தப்பிச் சென்றுவிட்டார்.


இலங்கைத் தமிழர் என சந்தேகிக்க முடியாத அளவுக்கு சென்னைத் தமிழிலும் சரளமாகப் பேசுவார். 2004-ல் அவர் மறுபடி சென்னைக்கு வந்து சென்றபோது, பல திசைகளிலும் ரூட் போட்டு அவரை வளைக்கத் துடித்தது போலீஸ். அவர் மீது எந்த வழக்குகளும் அப்போது இல்லை என்பதால் ஒன்றும் செய்ய முடியவில்லை. 2007-ல் சிவகரன் என்கிற போராளி வெடிமருந்து கடத்தியதாகப் பதிவான வழக்கில் சிரஞ்சீவி மாஸ்டர் பெயரும் சேர்க்கப்பட்டது. அப்போது போட்ட வழக்கு ஒன்றை வைத்தே அதன் பிறகு அவரை வெளிப்படையாக பொலிஸ் தேடத் தொடங்கியது.


தொண்டி வழியாக அவர் மீண்டும் சென்னைக்கு வரும் தகவலை அறிந்துகொண்ட உளவு பொலிஸ், புலிகளின் அபிமானம் பெற்ற புதுக்கோட்டை மாவட்ட அரசியல் புள்ளியை வளைத்து, அவர் மூலமாக சிரஞ்சீவியை வளைக்கத் திட்டமிட்டது. ஆனால், கண்ணப்பன் என்ற போராளி மட்டும் சிக்க, பொலிஸின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு எஸ்கேப் ஆனார் சிரஞ்சீவி.


தமிழகத்தின் முக்கிய அரசியல் புள்ளிகளை ஈழத்துக்கே அழைத்துச் சென்று… பிரபாகரன், பொட்டு அம்மான், தமிழ்ச்செல்வன் ஆகியோரிடம் அறிமுகம் செய்து வைத்தவர் சிரஞ்சீவிதான். போர் உக்கிரமான காலத்திலேயே தமிழகத்து அரசியல் புள்ளி ஒருவரை ஈழத்துக்கு அழைத்துப்போய், குண்டு மழைகளுக்கு நடுவே வீடியோ காட்சிகளைப் பதிவுசெய்து கொண்டுவந்தார். கடைசிக் கட்ட ஈழப் போரில் பல்வேறு படை அணிகளாகப் பிரிந்து ஊடறுப்புத் தாக்குதல் நடத்தி வெளியேறியவர்களில் சிரஞ்சீவியும் ஒருவர் என எங்களுக்குத் தகவல் வந்ததே தவிர, தப்பித்த அவர் எங்கே இருக்கிறார் என்கிற விவரங்கள் எங்களுக்குத் தெரியவில்லை!" என்றார்கள்.


மேற்கொண்டு நாம் விசாரித்தபோது, "ஒரு வாரத்துக்கு முன்னரே உளவுத் துறை போலீஸார் அவரை வளைத்து விட்டதாகவும், புலிகளின் உளவுப் பிரிவுத் தலைவரான பொட்டு அம்மான் குறித்து அவரிடம் துருவிக்கொண்டு இருப்பதாகவும் தெரிகிறது. கூடவே, தமிழக அரசியல் தலைவர்களின் புலித் தொடர்புகள் குறித்தும், அவர்களைச் சிக்கவைக்கும் விதமான தகவல்கள் குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறதாம். விழுப்புரம் தண்டவாளத் தகர்ப்பு விவகாரத்தில் ஆரம்பகட்ட விசாரணையின்போதே 'புலிகளின் ஆதரவாளர்கள் செய்திருக்கலாம்' எனச் சொன்ன பொலிஸார், தற்போது சிரஞ்சீவியைச் சிக்கவைக்கவும் வாய்ப்பு இருக்கிறது!" என்று கூறுகிறார்கள் காவல் வட்டாரத்தின் அசைவுகளை அறிந்தவர்கள்.


இன்னும் சில பொலிஸார், "இலங்கையில் போர் தொடங்கியபோது புலிகள் பலரும் தமிழகத்துக்குள் ஊடுருவினார்கள். சென்னை மடிப்பாக்கம் அருகே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து பரமேஸ்வரன் என்பவரும் போராளிகளும் தங்கி இருந்தது தெரிந்து அவர்களை வளைத்தோம். அப்போது சிரஞ்சீவி மாஸ்டர் குறித்து பரமேஸ்வரன் சொன்ன தகவல்கள் படுபயங்கரமானவை. அப்போதே,சிரஞ்சீவி குறித்துத் தீவிர விசாரணையைத் தொடங்கிவிட்டது எங்கள் துறை. போர்க் காலத்தில் அவர் ஈழத்தில் இருந்தார் என்ற தகவல் உறுதியானதாகத் தெரிகிறது. தற்போது சிக்கி இருக்கும் அவரிடம் பொட்டு அம்மான் குறித்து எங்கள் துறை அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு லேசான புன்னகையை மட்டுமே சிரஞ்சீவி மாஸ்டர் பதிலாக்கியதாகவும் தெரிகிறது. ஈழத்தின் கடைசிக்கட்டப் போர்க் கொடூரங்களை மட்டும் மனம்விட்டுச் சொன்னவர், புலித் தலைவர்களின் நிலை குறித்த கேள்விக்கு எந்த பதிலையும் சொல்லவில்லை!" என்றார்கள்.


தமிழக உளவுத் துறை ஐ.ஜி-யான ஜாஃபர் சேட்டிடம், சிரஞ்சீவி கைது குறித்துக் கேட்டோம். "விடுதலைப் புலிகளின் உளவுப் பிரிவில் சிரஞ்சீவி மிக முக்கியமான ஆள். தீவிரமாகத் தேடப்பட்ட இவர், இலங்கைப் போருக்குப் பிறகு சந்திரகுமார் என்ற பெயரில் தமிழகத்துக்கு வந்திருக்கிறார். 2007-ம் ஆண்டு வெடிமருந்து கடத்தல் விவகாரத்தில் சிவா என்கிற சிவகரனுடன் சிரஞ்சீவி சம்பந்தப்பட்டிருப்பதாக வழக்கு இருக்கிறது. மற்றபடி இலங்கைப் போருக்குப் பிறகு தமிழகம் வந்த சிரஞ்சீவி தவறான நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. அவர் மீது புதிதாக வழக்குகள் ஏதும் இல்லை. மற்றபடி மேற்கொண்டும் அவரிடம் விசாரித்து வருகிறோம்!" என்றவரிடம்,


"விழுப்புரம் தண்டவாளத் தகர்ப்பில் சிரஞ்சீவியைச் சிக்க வைக்க முயற்சிகள் நடப்ப தாகச் சொல்லப்படுகிறதே?" எனக் கேட்டோம். "கிடையவே கிடையாது. விழுப்புரம் தண்டவாளத் தகர்ப்பு விவகாரத்தில் சிரஞ்சீவிக்கு எவ்விதச் சம்பந்தமும் கிடையாது. தண்டவாளத் தகர்ப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைப் பிடிக்கத் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறோம்!" என்றார்.


கை மற்றும் கால்களில் காயங்களோடு பொலிஸ் விசாரணையில் இருக்கும் சிரஞ்சீவி புலிகள் குறித்தும்… குறிப்பாக பொட்டு அம்மான் குறித்தும் என்ன சொல்லப் போகிறார் என்பது மில்லியன் டாலர் கேள்வி!


'பிரபாகரன் இருக்கிறாரா?' என்ற உலகளாவிய கேள்விக்கும் அவரிடம்… உறுதியான பதில் இருக்கலாம்!


'பார்வதி அம்மாளின் உடல்நலம் மோசமாகிறது. கடந்த ஒரு வாரமாக அவரால் திட உணவு சாப்பிட முடியவில்லை' என்று அவசர தகவல் வரவும்… அந்த நேரத்தில், கண் அறுவை சிகிச்சைக்காக கண்டி சென்றிருந்த டாக்டர் மயிலேறும் பெருமாள், அடித்துப்பிடித்து வல்வெட்டித்துறை மருத்துவமனைக்குப் போய்ச் சேர்ந்தார். பார்வதி அம்மாளைப் பரிசோதித்தபோது, அவருக்கு இரண்டு சிறுநீரகங்களும் வீங்கியிருந்ததுடன், வயிற்றில் புண்களும் உண்டாகியிருப்பது தெரிந்ததாம். மேலும் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைக்காக யாழ்ப்பாண மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரபாகரனின் தாயாரை அனுப்பியுள்ளனர்.

பார்வதி அம்மாள் கடிதம் கருணாநிதி குடும்பத்தின் அப்பட்டமான நாடகம் - பார்வதி அம்மாள் எந்த கடித்ததையும் எழுதவில்லை.

தலையங்கம் :


ஒரு சிலர் நினைக்கலாம் ஏன் மீண்டும் மீண்டும் இலங்கை  அரசியலையே தலையங்கமாக எழுதுகிறது என்று.


ஈழத்தில் தமிழன் துரோகத்தால் வீழ்ந்தான் . வாழ்வதருக்கு உரிமை கேட்டவனை ' அரசியல்' வியாபாரியான நயவஞ்சகர்கள்  , உள்ளிருந்து நாடகம் ஆடி வீழ செய்தார்கள்.



செத்தது தமிழ் இனம் இல்லாது வேறு ஒரு இனமாய் இருந்திருந்தால், செத்த இனத்தை சேர்ந்தவர்களின்   'தாயகமான' தமிழ் நாடு இப்போது இருக்கிறமாதிரி 'அமைதி பூங்கா' வாக , மற்ற இனத்தின் மாநிலம் இருந்திருக்காது. அதற்க்கு உதாரணம் பஞ்சாப்.



தமிழனுக்காகத்தான்  தமிழ் மொழி , தமிழனையே கொன்று  விட்டு. மொழி என்ன மயிற்றை  பிடுங்க ஆக போகிறது.


தமிழனின் உயிரே மயிரை விட கேவலமாய் ஈழத்தில் ஆகிவிட்ட பொழுது , மொழி என்ன மயிற்றிக்கு .


செத்தது சக தமிழன் என்ற எழுச்சி தமிழகத்தில் வரவேண்டும்.


நமது தலைமுறையில் நம் கண் முன்னே நமது தமிழன் ஒருவனை, நாம் வாழும் நமது இந்திய  நாடே , நம்மை ஆட்சி செய்யும் நமது தமிழக மாநிலமே  கொல்வதற்கு  உடந்தை என்றால் ?  இதை விட மிகபெரிய கொடுமை எங்கே நடக்கும்?


எழுச்சி எங்கே இருக்க வேண்டும் எனபது இப்போது தெளிவாக தெரியும் .


கீழே உள்ள செய்திய பற்றி நான் பெரிதாய் பேசபோவதில்லை  அது தெரிந்த கதைதான்.


செய்தி இங்கே :


செம்மொழி மாநாடு நடத்துவதில் தனது தள்ளாதவயதிலும் தீவிரமாகச் செயற்படும் கலைஞர் கருணாநிதி மாநாட்டிற்குச் சற்று முன்பதாக

தமிழுக்கான உரிமை கோரிய வழக்குரைஞர்களைக் கைது செய்து சிறைகளில் அடைத்து சித்திரவதைக்கு உட்படுத்தியுள்ள அதிர்ச்சியான சம்பவம் வெளியானது. முன்பதாக இலங்கையில் இனப்படுகொலையை தடையின்றி நடத்தி முடிப்பதற்காக ராஜபக்ச குடும்ப அரசுடன் இணைந்து நடத்திய சதி நாடகம் வெளிச்சத்திற்கு வந்தது. விழுப்புரம் தண்டவாளத் தகர்ப்பு நடவடிக்கை மற்றொரு நாடகம் என்பது சந்தேகத்திற்கிடமானதாக உள்ளது.

 

இந்த நிலையில் கருணாநிதிக்கு பார்வதியம்மாள் எழுதியதாகக் கூறப்படும் மடலும் கருணாநிதி குடும்பம் சார்ந்த கும்பலின் நாடகமே எனத் தெரியவருகிறது.

 

இந்த நாடகம் எவ்வாறு நடத்தப்பட்டது என சிவாஜிலிங்கம் இனியொருவிற்குத் தெரிவித்தார். இன்று 21.06.2010 இலங்கையிலிருந்து இனியொருவிற்கு தொலைபேசியில் தொடர்புகொண்ட சிவாஜிலிங்கம், பார்வதியம்மாள் கருணாநிதிக்கு அப்படியொரு கடித்ததையும் எழுதவில்லை எனக் குறிப்பிட்டார்.

மலேசியாவிலிருந்து தமிழ்நாட்டில் திருச்சியிலுள்ள மருத்துவர் ஒருவரிடம் பக்கவாதத்திற்கான சிக்கைச்சை பெறுவதற்காக அங்கிருந்த பிரயாண முகவரூடாகவே மருத்துவ விசாவிற்கு விண்னப்பித்திருந்தார். விண்ணப்பம் அனுப்பப்பட்ட சில நாட்களில், முழு நினைவாற்றலும் அற்றிருந்த நிலையில், ஒரு வெள்ளைப் பேப்பரில் அவரிடம் அவரது பெருவிரல் அடையாளம் வாங்கப்பட்டது. இவ்வாறான கைவிரல் அடையாளத்தைக் கோரி பிரயாண முகவரே பார்வதியம்மாளிடம் வந்தார். அப்போது விசா பெறுவதற்கான ஏற்பாடுகளுக்காகவே பெருவிரல் அடையாளத்தைக் கோருகிறோம் எனக் குறிப்பிட்டனர்.

எந்த சந்தர்ப்பத்திலும் இது கருணாநிதிக்கு எழுதப்படும் கடிதம் என்றோ அல்லது கடிதத்தின் உள்ளடக்கம் குறித்தோ அவரிடம் கூறப்படவில்லை.


இந்தியாவிலிருந்த சிலரும், கனேடியத் தமிழர் பேரவையைச் சேர்ந்த சிலரும் கருணாநிதியின் நலன் கருதி கடிதத்தைத் தாமே தயார்செய்து அனுப்பியுள்ளனர். கடிதம் அனுப்பப்பட்ட மறுநாளே அது ஊடகங்களில் பிரபலப்படுத்தப்பட்டது. இவ்வாறு சிவாஜிலிங்கம் இனியொருவிற்குத் தெரிவித்தார். இந்த நாடகத்தில் பங்காற்றிய ஏனைய "நடிகர்களின்" பெயர்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.

 

இந்த நாடகங்களை எல்லாம் கருணாநிதி தனது கடந்த காலத்தைப் போல சாவகாசமாக நடத்தி முடிக்க முடியாத அளவிற்கு இன்று தமிழ் நாட்டில் ஒரு புதிய இளைஞர் கூட்டம் விழிப்படைந்து வருகிறது.

 

ஜெயலலிதா கருணாநிதி போன்ற பிழைப்புவாத அரசியல் வியாபாரிகளை இனம் கண்டுகொள்ள இன்னொரு கூட்டம் எழுச்சிபெறுகிறது.

 

ஐம்பதாயிரம் தமிழர்களை துடிக்கத் துடிக்க இரசாயன ஆயுதங்களால் கொன்று குவித்த போது அண்ணாந்து பார்த்து ரசித்துக்கொண்டிருந்த கருணாநிதிக்கு பார்வதியம்மாள் எந்த மூலைக்கு?

பக்கவாததால் பாதிக்கப்பட்ட ஒரு முதியவரை முன்வைத்து நடத்திய கேவலமான அரசியல் நாடகம் சீரழிந்து போன திராவிட இயக்கத்தின் கோர முகத்தைக் காட்டுகிறது.

 

பட்டினிச் சாவை எதிர் நோக்கியிருக்கும் ஈழத் தமிழர்கள் மரண ஓலத்திற்கு மத்தியில், ரகுமானின் பொப்பிசைப் பாடலுடன் கருணாநிதி குடும்பத்திற்காகக் குதூகலமாக நடத்தப்படும் செம்மொழி நாடகத்தில் கலந்துகொள்ளும் பேராசிரியர் "ஈழத்துச்" சிவத்தம்பிக்குமா இந்த மரண ஓலங்கள் கேட்கவில்லை?

இப்பொழுது சொல்லுங்கள்..! எப்படி நேசிப்பேன்..நான் இந்தியாவை..?

              இந்தியன் என்ற உணர்வும்,தாய்நாட்டு பற்றும் எனக்கு சற்று அதிகம்தான்.சாராசரியை விட கூடுதல் தேசப்பற்று எனக்கு.ஆனால் கடந்த சில வருடங்களாக இரண்டும்கெட்டான் நிலையில் குழம்பி வருகிறேன். காரணங்களை சொல்லுகிறேன். தொடர்ச்சியாக மத்தியில் ஆளும் அரசு தமிழனுக்கும் தமிழ் இனத்திற்கும் பாரபட்சம் காட்டி தீங்கு இழைத்து வருவதாக ஆழமாக நம்புகிறேன்.இந்தியன் என்ற உணர்வு நீர்த்து போய் தமிழன் என்ற நிலைக்கு கொஞ்ச கொஞ்சமாக தள்ளபடுவதாக உணர்கிறேன். காரணங்கள்..!
 
நதிநீர் பிரச்சனைகள் :

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்தும் தமிழகத்துக்கு வழங்கபடாத நியாயங்கள். இந்திய மத்திய அரசின் பாராமுகம்;  தமிழர்கள் எனும்  இளக்காரம், பாரபட்சம்....!

கச்சதீவு :

ஒட்டுமொத்த தமிழ் மக்களின் எதிர்ப்பையும் மீறி இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்ட கச்சதீவு. கச்சத்தீவு பகுதியில் மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை ராணுவத்தினர் பிடித்து சென்று செய்யும் சித்ரவதைகள், இதனை பெரிதாக கண்டுகொள்ளாத டெல்லி அரசு. இந்தியா என்னவோ துக்கடா நாடு போலவும், இலங்கை ஒரு பெரிய சர்வாதிகார நாடு போலவும் தமிழக மீனவர் பிரச்னையில் தோன்றுகிறது. தமிழன் என்ற ஒரு காரணத்தாலேயே தமிழக மீனவர்கள் புறக்கணிக்க படுவதாகவும் நினைக்க தோன்றுகிறது .

இலங்கை தமிழர் பிரச்சனையில் இந்திய அணுகுமுறை :

இந்திய அமைதி படையினர் இலங்கையில் தமிழ் மக்களின் மீது நடத்திய அத்து மீறல்கள்தான் நான் இந்தியனா..? தமிழனா..? என்ற குழப்ப விதையை என்னுள் விதைத்திருக்க கூடும்.

என் தாய் நாட்டு ராணுவத்தினர் என் இன பெண்களை மானபங்க படுத்தினர் -- இப்படி சொன்னால் அது அருவெறுப்பு.
 
என் தாய் நாட்டு ராணுவம் இலங்கையில் உள்ள பெண்களை மான பங்க படுத்தினர். --  இப்படி சொன்னால்..? என் மொழி பேசும் மக்களை மூன்றாம் மனிதர்கள் போல சொல்ல முடியாது.
வேறு எப்படி சொல்லுவது..?
 
இந்திய ராணுவத்தினர் என் தமிழ் பெண்களை மானபங்க படுத்தினர். --- இப்படித்தான் சொல்ல முடிகிறது. இப்படி சொல்லும்போதே நான் இந்தியாவில் இருந்து விலகுகிறேன்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கு என்ற புத்தகத்தில் இருந்து கீழ்க்கண்ட வரிகள் :

கடைத் தெருவுக்குச் சென்ற சமயம் தி நகரில் சுபாவின் கண்ணில் ஒரு சர்தார்ஜி பட்டார்.
அதுவரை சகஜமாக சிரித்து பேசிக்கொண்டிருந்தவர் திடீரென்று முகம் மாறினார் .அவரது உடம்பு உதற தொடங்கியது . நளினியின் கையை பிடித்து கொண்டிருந்தவர் , மேலும் அழுத்தமாக பற்றிகொண்டார் . வியர்த்துவிட்டது.
 
நளினிக்கு ஒன்றும் புரியவில்லை .என்ன.. என்ன . என்று பதற எனக்குஅவனை ஓங்கி அறைய வேண்டும் போலிருக்கிறது சர்தார்ஜியை பார்த்தாலே வயிறு எரிகிறது .என்று சுபா சொன்னார்.

இலங்கை சென்ற இந்திய அமைதி படையில் பெரும்பாலானவர்கள் சீக்கியர்கள் என்பதை தணு விளக்கினார்.இந்திய ராணுவத்தினரால் இலங்கையில் தமிழ் பெண்கள் எந்த அளவுக்கு பாதிப்பு அடைந்து இருக்கிறார்கள் என்பதை மேற்கண்ட வரிகள் விளக்கும். இப்படி அயோக்கியத்தனம் செய்த ஒரு சீக்கிய நாயை எப்படி என் இந்தியன் என சொல்ல முடியும்...?
 
தாய் மொழியா...? தாய் நாடா ..?

இந்த கேள்விக்கே இடமில்லை, தாய்மொழியே முதலிடம் வகிக்கிறது. நான் இந்தியன் என சொல்லிக்கொண்டு ஒரு மலையாளியையோ, ஒரு கன்னடனையோ, ஒரு மராட்டியனையோ , நேசிப்பதை விட, உலகில் எந்த மூலையில் இருந்தாலும் எந்த நாட்டு குடிமகனாக இருந்தாலும் அவன் தமிழை தாய்மொழியாக கொண்டவனெனில் அவனைத்தான் முதலில் நேசிப்பேன்.
இதுதான் இயற்கை.
 
நம்பிக்கை இழக்க வைத்த சில தமிழக அரசியல்வாதிகள் :

ராமதாஸ் - திருமா ஒரு கால கட்டத்தில் இவர்களில் யாரேனும் கைது செய்யபட்டுவிட்டாலே போதும் விழுப்புரத்தை தாண்டி பஸ் ,ரயில் ஏதும் ஓடாது..! மரம் வெட்டப்படும் பஸ் கொளுத்தப்படும். ஆனால் இலங்கை தமிழர் பிரச்னையில் இவர்கள் சில விளம்பர போராட்டங்கள் மட்டுமே நடத்தினர்.மரம்வெட்டும் இவர்கள் இந்த விசயத்தில் ஒரு செடியை கூட புடுங்கவில்லை.
 
கலைஞர் உண்ணாவிரதம் இருக்கிறார். உடனே போர்நிறுத்த அறிவிப்பு வந்ததாக அவர்கள் தொலைகாட்சியில் செய்தி ..! உண்ணாவிரதம் முடிகிறது.அதன் பின்னர், பூவும் பிஞ்சுமாக ஆயிர கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள் .நம்பி நொந்து ஏமாந்ததுதான் மிச்சம் .இலங்கை தமிழர் பிரச்சனையில் இந்திய நிலைப்பாடும்,அதன் நடவடிக்கைகளுமே என்னை மிகவும் காயப்படுத்தி, இந்திய உணர்வை நீர்த்துபோக செய்தது.

இலங்கையில் இருந்து அகதிகளாக வெளியேறிய பலர், பல நாடுகளில் அந்த நாட்டு குடியுரிமை பெற்று வசித்து வருகின்றனர் ஆனால் தொப்புள் கொடி உறவு என சொல்லப்படும் இந்திய நாட்டில் மட்டும் இலங்கை தமிழ் மக்கள் இன்னும் அகதி முகாமில் வசிக்கின்றனர். இதை கேட்க நாதியில்லை..!
 
நடந்து முடிந்த போரில் இந்திய ராணுவ ஆயுதங்கள் இலங்கை தமிழ் மக்களை மட்டும் கொல்ல வில்லை, இந்தியாவில் இருக்கும் தமிழர்களின் இந்திய உணர்வையும் கொலை செய்து விட்டது.

ஈழத்தில் போர்நிறுத்தம் வேண்டி அறவழியில் அமைதி வழியில் போராடிய தமிழ் நாட்டு மக்களின் போராட்டத்திற்கு இந்திய அரசு கொடுத்த மதிப்பு என்ன..மரியாதை தான் என்ன...?

18 தமிழர்கள் முக்கியமாக இளைஞர்கள் போரை நிறுத்தச் சொல்லி பிறரை துன்புறுத்தாது, தங்கள் இன்னுயிரை தீயில் கருக்கிக் கொண்டார்கள்..... நூற்றுக்கணக்கான பெண்கள், வழக்கறிஞர்கள், பல்லாயிரக்கணக்கான மாணவ மாணவிகள் உண்ணாவிரதம் பேரணி என்று தங்களையே வருத்திப் போராடிப் பார்த்தார்கள்.... கொட்டும் மழையிலும் லட்சக்கணக்கான மக்கள் பல மைல் நீளத்திற்கு தொடர் மனித சங்கிலி கோர்த்தார்கள்,அதற்க்கு கொடுக்கப்பட்ட மரியாதை என்ன..... தமிழர்களின் அழுகை அசைக்கவில்லையே இந்திய அரசை....
 
சக இந்தியர்கள் வேடிக்கை பார்த்தார்களே அன்றி எமக்காக குரல் கொடுக்கவில்லையே..... இதைதான் இவ்வளவு காலமும் எந்நாடு அதற்காக என்னுயிரையும் கொடுப்பேன் என்று சொல்லித் திரிந்தேனா....? சிறுவயது முதல் நான் பள்ளியில் ஒவ்வொரு நாளும் காலை வழிபாட்டில்  ஒன்று கூடும் பொழுது, இந்தியா ஒரு சமய சார்பற்ற நாடு; இந்தியா என் தாய் நாடு; நாம் எல்லோரும் இந்தியர்கள்; இந்தியாவின் ஒற்றுமைக்காக நாம் எல்லோரும் பாடுபடுவோம் என்று உறுதிமொழி எடுத்துக் கொள்வேனே! இதற்காகத் தானா....?
 
சரி ஒரு நாராயணனும் முகேர்ஜியும் முன்னின்று எம் தமிழினத்தை அழித்தார்கள் என்றாலும், நாம் அனைவரும் இந்தியர்கள் என்று பெருமைப் பட்டுக்கொள்ள கூடிய அளவுக்கு வேற்று மொழி பேசும் மக்கள் எங்கள் போராட்டத்துடன் கலந்து கொள்ளவில்லையே, எங்கள் துயரில் பங்கு கொள்ளவில்லையே.... என் பாடப் புத்தகத்தின் முதல் பக்கத்தில் இதே உறுதி மொழியை காணும் போதெல்லாம் பெருமை கொள்வேனே.....? அதற்காக இப்பொழுது மனம் வெம்பி வேதனைப்படுகிறேன்.....உறுதியாகச் சொல்கிறேன்.. இனிமேலும் என்னால் என்னை ஒரு இந்தியனாக எண்ண முடியாது.... எம்மனதில் வேற்றுமையை பிரிவினையை தோற்றுவித்த இந்திய ஜனநாயகம் வாழ்க....!
 
காலம் தாழ்த்தி உணர்கிறேன்.. இந்தியம் என்பது எம் எல்லோர் மனதிலும் திணிக்கப்பட்டுள்ளது என்பதை....!

இப்பொழுது சொல்லுங்கள்..! எப்படி நேசிப்பேன்..நான் இந்தியாவை..?





நன்றி
தொகுப்பு
பிரதிபலிப்பு இணையம்.

நக்கலு கொஞ்சம் ஓவருதான்..

நக்கலு கொஞ்சம் ஓவருதான்..

செம்மொழி மாநாட்டையொட்டி சென்னை பெரு நகரத்தில் கடைகளில் விளம்பர பலகைகள், தமிழில் எழுதப்பட வேண்டுமென சென்னை பெருநகர மேயர் எடுத்துவரும் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியன. ஆனால் இந்த அறிவிப்புக்கு மதிப்பளித்து விளம்பரப் பலகைகள் முழுவதுமாக இன்னும் தமிழில் எழுதப்படவில்லை என்பது வேதனையளிக்கிறது.எனவே எழுத்து மாற்றமாக அமையாமல் சொற்கள் மாற்றமாக அமையும் வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

- திருமாவளவன்


குசும்பு குருவையா :

... சன் டிவி க்கு தமிழில் பெயர் மாற்றம் செய்வதற்கு யாரும் ஏன் வாய் திறக்க வில்லை.. கருணாநிதியின் பேரன் உதயநிதி ஸ்டாலின், வேளச்சேரி யில் திறந்திருக்கும்  பள்ளியின் பெயர் 'சன் ஷைன் சீனியர் செகண்டரி ஸ்கூல்' பெயர் ஏன் தமிழில் எழுதப்படவில்லை மற்றும் தமிழில் ஏன் பெயர் மாற்றம் செய்யப்படவில்லை... ஒருவேளை "ஊருக்கு தான் உபதேசம் தனது குடும்ப உர்ப்பினர்களுக்கு அல்ல " என்ற பழமொழியை பின்பற்றுகிரரா.

ஐயனின் ஆட்சியில் எல்லாமும் நடக்கும். விடுதலைபுலிகள் ஆதரவு என்ற போலியான 'கடிதத்தை' கையில் வைத்து கொண்டு மீண்டும் அறிக்கை.

இரங்கற்பா எழுதியதும் நிஜம்.

முள்ளிவாய்க்கால் ஐயன் காலத்தில் நடந்தது நிஜம்.

மழை விட்டும் தூவானம் விடவில்லை என்றதும் நிஜம்.

அரசியல் ஞானம் இல்லை என்றதும் நிஜம்.

பார்வதி அம்மாளை விமானம் விட்டு கீழே இறக்காமல் அப்படியே அனுப்பியதும் நிஜம்.

பிறகு பத்துக் கட்டளைகளில் ஒன்றாக, தடை செய்யப்பட்ட இயக்கத்தினருடன் தொடர்பு வைத்துக் கொண்டுள்ளவர்கள், பார்வதி அம்மாள் ஒரு வேளை சென்னை வந்தால்,சந்திக்கக் கூடாது என்று சொன்னதும் நிஜம்.

மலேசியா அமைச்சர் ராமசாமியை , புலிகள் ஆதரவாளராக இருப்பதால், மாநாட்டிற்கு வரத் தடை செய்ய வேண்டும் என்று சொன்னதும் நிஜம்.

இன்று சிரஞ்சீவி மாஸ்டரைப் பிடித்து புழலில் விசாரிப்பதும் நிஜம்.அவர் பொட்டு அம்மான் உயிரோடு இருக்கிறார் என்று சொல்லியிருப்பதும் நிஜம்.

டெல்லி எடுத்த எல்லா முக்கிய முடிவுகளுக்கும் ஒப்புதல் அளித்ததும் நிஜம்.அவர்கள் , இவர் முன்னிலையிலேயே, அதுவும் சென்னையிலேயே அதைச் சொன்னதும் நிஜம்.

இவை எல்லாம் இவரது ஆட்சியில் தான் என்பதும் நிஜம்.

அப்படியே மீதமிருக்கும் , சிதறிக்கிடக்கும் புலிகள் இந்த மாநாட்டை வரவேற்று வாழ்த்துத் தெரிவித்திருந்தாலும், அது தமிழுக்காகத் தான்; ஐயனை நம்பியதாக அர்த்தம் ஆகாது என்பதும் நிஜம்.

இனியும் ஜெ..அதைச் சொன்னார் , இதைச் சொன்னார் என்பதெல்லாம் டுபாக்கூர் சமாச்சாரம்.

இவர் அதிகாரத்தில் இருக்கும் போது என்ன செய்வார், இல்லையென்றால் என்ன சொல்வார் என்பதை ஆராய்பவர்களும் இருக்கிறார்கள் என்பதும் நிஜம்

இனி, காந்தாரி, கூனி என ஒப்பாரி வைப்பது, காலத்துக்கு ஒவ்வாத வசனம்.

ஐயனுக்கு எப்போதுமே ராமாயண, மகாபாரத சிந்தனை தான்.அதற்கு சொரணை மிக்க ஹிந்து என்கிற முறையில் நன்றிகள் பல.

உயர்நீதிமன்றத்தில் தமிழ் - சமூக நீதிக்கான போராட்டமே

குடிமகனின் மொழியில் உயர்நீதி வழங்குவதே சிறந்ததொரு மக்களாட்சி ஆகும். இந்தியாவின் மிகப் பழம்பெருமை வாய்ந்த நீதிமன்றங்களில் ஒன்றான சென்னை உயர்நீதிமன்றத்தில், தமிழன்னை அரியணை ஏறிட இன்றளவும் தடை நீடித்தே வருகிறது. தாய்மொழி மறுப்பின் காரணமாக “சட்டம் பற்றிய அறியாமையை மன்னிக்க இயலாது” எனும் சட்டக் கோட்பாட்டின் அடிப்படையே இன்று கேள்விக்குள்ளாகியுள்ளது.
ஆங்கிலம் ஒரு மொழியாக உருவாக்கம் பெறுவதற்கு முன்னரே தமிழில் திருக்குறள், நாலடியார் போன்ற அனேக நீதி, அறநூல்கள் உருவாகியதோடு மட்டுமின்றி பழந்தமிழகத்தில் நீதிமுறையானது சிறப்பாகவும், எளிய முறையிலும் வழங்கப்பட்டு வந்திருக்கிறது.
இந்திய அரசியல் சாசனத்தின் 348 (2) பிரிவானது “குடியரசுத் தலைவரின் அனுமதியை முன்னராகப் பெற்று அந்த மாநிலத்தின் ஆட்சி மொழியாக இருக்கும் ஒரு மொழியை அல்லது இந்தியை - அந்த மாநிலத்தில் தனது தலைமைப் பீடத்தை வைத்துக் கொண்டுள்ள உயர்நீதிமன்றத்தின் நடவடிக்கைகள் பயன்படுத்துவதற்கான அதிகாரத்தை அந்த மாநிலத்தின் ஆளுநர் வழங்கலாம்” என்று தெளிவாகக் கூறுகிறது.
ஆட்சி மொழிச் சட்டம் 1963 பிரிவு 7 ஆனது “ஒரு மாநிலத்தின் உயர்நீதிமன்றம் வெளியிடும் தீர்ப்பு, ஆணை அல்லது உத்தரவு ஆகியவற்றிற்காக ஆங்கில மொழியுடன், மாநிலத்தின் அதிகாரப்பூர்வ மொழி அல்லது இந்தி ஆகியவற்றிற்கு மாநில ஆளுநர் அங்கீகாரம் வழங்கலாம்” என்று கூறுகிறது. இந்திய அரசியலமைப்பு சாசனத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ள 22 தேசிய மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்றாகும்.
இந்த சூழலில் கடந்த 06.12.2006 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் “தமிழ்மொழியை சென்னை உயர்நீதிமன்றத்தின் அலுவல்மொழியாக அறிவிக்க வேண்டும்” என்று ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலோடு, குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற வேண்டி பாராளுமன்றத்திற்கு அனுப்பப்பட்டது.
ஆனால் மத்திய அரசின் சட்டம் மற்றும் நீதியமைச்சகம், உச்ச நீதிமன்றத்துடன் கலந்தாலோசித்து இந்த பிரச்சனை பரிசீலிக்கப்பட்டதாகவும், உயர்நீதிமன்றத்தின் உத்தரவுகள், ஆணைகள் மற்றும் இதர நடவடிக்கைகளில் பிராந்திய மொழியை தற்போது அறிமுகப்படுத்துவது உகந்ததாக இருக்காது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருதுவதாகவும் கூறி தமிழ் மொழியை சென்னை உயர்நீதிமன்றத்தில் அலுவல் மொழியாக்குவது குறித்த தீர்மானத்தை குடியரசுத் தலைவரின் பார்வைக்கு அனுப்பாமல் திருப்பி அனுப்பிவிட்டது.
கடந்த 05.06.1969 அன்று உத்திரபிரதேச மாநிலம் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் இந்தி மொழி அலுவல் மொழியாக அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பீகார், மத்தியபிரதேசம், ராஜஸ்தான் உயர்நீதிமன்றங்களிலும், கடந்த ஏப்ரல் மாதம் முதல் புதுடெல்லி உயர்நீதிமன்றத்திலும், இந்தி மொழி வழக்கு மொழியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதே விதிகளின்படியே தமிழ்மொழிக்கும் அலுவலக மொழியாக அனுமதி கோரப்பட்டும் தொடர்ந்து இன்றுவரை அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. மொழிப்போர் தியாகிகளாய்த் தற்பெருமை பேசும் தமிழக அரசியலாளர்களோ இந்நற்காரியத்தைச் செய்ய இன்றுவரை தவறிவிட்டனர் என்பதே உண்மை.
கி.பி. 10ம் நூற்றாண்டில் உருவாகிய ஆயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்ட இந்தி மொழியை ஐந்து மாநில உயர்நீதிமன்றங்களில் அலுவல் மொழியாக ஏற்றுக் கொண்ட மத்திய அரசு, சிந்து சமவெளியில் கிடைத்துள்ள சான்றுகளின்படி கி.மு. 16ம் நூற்றாண்டுகளிலேயே “தொல்காப்பியம்” என்ற இலக்கண நூல் உருவாக்கிய நாலாயிரம் ஆண்டுகள் பழமையான தமிழ்மொழி பிராந்திய மொழி என்றும், அதற்கு உயர்நீதிமன்ற மொழியாகும் தகுதியில்லை என்றும் இழிவுபடுத்தி வருகிறது. அதற்குப் பிறகும் கடிதம் மட்டுமே அனுப்பிக் கொண்டு, மத்திய அமைச்சரவையில் “பெருமையுடன்” அங்கம் வகித்துக் கொண்டிருக்கிறது தமிழக அரசு.
தமிழ்நாட்டில் 93 விழுக்காடு மாணவர்கள் தமிழ் வழியிலேயே பள்ளிக் கல்வி பயில்கின்றனர் என்று மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சரும், 90 விழுக்காடு மாணவர்கள் தமிழ் வழியிலேயே சட்டக்கல்வி பயில்கின்றனர் என்று டாக்டர்.அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக துணைவேந்தரும் கூறுகின்றனர். இந்நிலையில் தமிழை அலுவல் மொழியாக்கிட போதிய அடிப்படை கட்டமைப்புகள் இன்னும் செய்யப்படவில்லை என்று கூறப்பட்டு வரும் சூழலில், 1970 ஆம் ஆண்டிலேயே மருத்துவமும், பொறியியலும் இலங்கை சிங்கள அரசால் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழியில் கற்றுக் கொடுக்கப்பட்டது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
மக்களுக்குப் புரியாத மொழியில் வாதிடும் போது அந்த வழக்கில் சம்பந்தப்பட்டவரைப் பொருத்த மட்டில் அது ஒருவகையான மனித உரிமை மீறல் ஆகும். இயற்கை நீதியையும் சமூக நீதியையும், மனித உரிமைகளையும் நிலைப்படுத்துவதில், தனித்து இயங்கும் சர்வ வல்லமை படைத்த நீதிமன்றங்களுக்கு பெரும்பங்கு உண்டு. ஆனால் அந்தந்த மாநிலத்தின் ஆட்சி மொழியாக இருக்கும் தாய்மொழிக்கு, நீதிமன்றங்களில் தொடரும் அனுமதி மறுப்பின் காரணமாக மேற்கூறப்பட்டவைகள் கேள்விக்குறியாகி உள்ளன.
துவக்க காலங்களில் உலகின் பல்வேறு நாடுகளின் லத்தீன், பிரெஞ்சு மொழிகள் மட்டுமே சட்ட மொழிகளாக இருந்தன. ஒரு சொல்லுக்கு ஒரு பொருள் மட்டுமே இருப்பதால் இந்த மொழிகள் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டன. இன்றளவும் சட்டமுதுமொழிகள் லத்தீன் மொழியிலேயே பெருமளவில் இருக்கின்றனர். ஆங்கிலத்தின் தாயகமான இங்கிலாந்தில் கி.பி. 16ம் நூற்றாண்டு வரையிலும் லத்தீனும், பிரெஞ்சும் வழக்கு மொழியாக நீடித்து வந்த சூழலில் 1632ம் ஆண்டில், ஆங்கிலம் மட்டுமே இனி சட்ட மொழி என சட்டம் இயற்றப்பட்ட பிறகே ஆங்கிலம் அமலுக்கு கொண்டுவரப்பட்டது. சொந்த மண்ணிலேயே பல நூற்றாண்டுகளாக நீதிமன்ற மொழியாக அங்கீகரிக்கப்படாத ஆங்கிலம் இன்று இந்திய மண்ணில் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் உயர்நீதிமன்றங்களில் கோலோச்சுகிறது என்றால் நமது அடிமைத்தனத்தையும், அறியாமையையுமே அது உணர்த்துகிறது. வரலாறு தரும் படிப்பினையை நாம் மனதில் கொள்ள வேண்டிய தருணம் இது.
கருத்து பரிமாற்றத்திற்கு பயன்படும் கருவியே மொழி. உணர்வுப் பூர்வமான கருத்துக்களை மட்டுமின்றி, இதர செய்திகளையும் தன் தாய்மொழியில் மட்டுமே தெளிவாக எடுத்துரைக்க முடியும். இதற்கு சான்றாக அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் செயல்பாடுகள் உள்ளன. இந்நீதிமன்றத்தில் தான் பல சிறப்புமிக்க தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 40 ஆண்டுகளுக்கு முன்னரே அங்கு இந்தி அலுவல் மொழியாகிவிட்ட காரணத்தினால் தான் முன் உதாரணமிக்க தீர்ப்புகள் பல வருகின்றன. நீதிமன்றத்தில் வழக்காடுவதற்கும், தீர்ப்புகள் எழுதப்படுவதற்கும் தாய்மொழி பயன்படுத்தப்படும் போது அதன் தரம் தானாகவே மேன்மையுறும் என்பதற்கு அலகாபாத் நீதிமன்ற வரலாறே சான்றாக விளங்குகிறது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதாட அனுமதி கோரி எம்.ஜி.ஆர். அவர்கள் முதலமைச்சராக இருந்தபோதே மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியிருக்கிறார். இயலாத அல்லது இல்லாத ஒன்றையோ நடைமுறைப்படுத்திடக் கோரி போராடிக் கொண்டிக்கவில்லை. மாறாக, அரசியலமைப்புச் சாசனத்தின் வாயிலாக உத்தரவாதப்படுத்தப்பட்டு, ஏற்கனவே வெளி மாநிலங்களில் அமலில் உள்ள சட்ட உரிமை தான் இங்கேயும் கோரப்படுகிறது.
ஆனால், ஈழப்போரினையொட்டி சரிந்த தனது தமிழினத் தலைவர் பட்டத்தை மீண்டும் தக்கவைக்க, இன்று 'உலகத் தமிழ் செம்மொழி மாநாடு' நடத்த முனைந்திருக்கும் கருணாநிதி தலைமையிலான அரசு, உயர்நீதிமன்றத்தில் தமிழில் வழக்காட என்ன செய்தது? இவர்கள் தமிழக சட்டப்பேரவையில் சட்டமேலவை கொண்டு வருவதற்கான அனுமதியை மத்திய அரசிடம் மூன்றே நாளில் பெற்றார்கள் என்பதையும், மிகக் குறுகிய காலத்தில் சட்டமன்றத்திற்கான புதிய கட்டடத்தை பிரம்மாண்டமாகக் கட்டினார்கள் என்பதையும் பார்த்தால், தமிழ் வளர்ச்சியில் இவர்கள் காட்டும் அக்கறையும் வேகமும் புரியும்.
‘உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் சில நீதிபதிகள் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனவே, அவர்களுக்குத் தமிழ் தெரியாது. இப்படிப்பட்ட சூழலில் தமிழ் அலுவல் மொழியாக்கப்பட்டால் அவர்களுடைய நிலை என்னாவது’ என சிலர் ‘அறிவுப்பூர்வ’மாக கேள்வி எழுப்புகின்றனர். பாராளுமன்றத்தில் உள்ள 543 மக்களவை உறுப்பினர்களுக்கும், அவர்களது தாய்மொழியில் உடனுக்குடன் அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளிலும் மொழி பெயர்ப்பு செய்யப்படுவது சாத்தியமாகியிருக்கும்போது உயர்நீதிமன்றத்தில் தமிழில் பேச அனுமதிப்பது என்பது பெரிய பிரச்சனையாக இருக்காது என்கிற அடிப்படை உண்மை மூடி மறைக்கப்படுகிறது.
1956ம் ஆண்டில் மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டதே மக்கள் மொழியில் ஆட்சி நடத்துதலே மக்களாட்சியின் உயரிய தத்துவம் என்ற அடிப்படையில்தான். மேலும் தொன்மை, வளமை, பண்பு, பாரம்பரியம் ஆகிய கூறுகளைக் கொண்டுள்ளதால் இன்று “செம்மொழி” என தமிழ்மொழி அங்கீகரிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்து அனுமதி மறுக்கப்படுவது என்பது “தமிழ்மொழிக்கு இழைக்கப்படும் சமூக அநீதியும், அவமரியாதையுமாகும்”.
நீதிமன்றங்களானது, நீதிபதிகளுக்கோ, வழக்கறிஞர்களுக்கோ மாத்திரம் உரிமையானதல்ல. மாறாக இந்த மண்ணின் மக்களுக்கானது. அம்மக்களுக்குத் தெரிந்த தாய்மொழியில் நீதிமன்றம் நடத்தாமல் அவர்களுக்குப் புரியாத அந்நிய மொழியில் நடத்துவதில் எந்தவித அடிப்படை நியாயமுமில்லை.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற மற்றும் மதுரை கிளை உயர்நீதிமன்ற நடவடிக்கைகள் தாய்மொழியாம் தமிழ்மொழியில் இருக்க வேண்டும் என்ற கோரிக்கையானது காலத்தின் கட்டாயமாகும். அதோடு மட்டுமின்றி, உயர்நீதிமன்றத்தில் தமிழில் பேச அனுமதிப்பது சமூகநீதியை கொண்டு வருவதற்கானதொரு போராட்டமே.
- இ.இ.இராபர்ட் சந்திரகுமார், வழக்கறிஞர், உயர்நீதிமன்றம், மதுரை

நன்றி: கீற்று இணையதளம்