தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

தினமலரில் படித்தது .. இது நல்ல நக்கலு..

தி.மு.க., எம்.பி., டி.ஆர்.பாலு: ஏழு, எட்டு மாதம் முன்பு, நாங்கள் இலங்கை சென்ற போது, நிலக்கண்ணி வெடிகளை அப்புறப்படுத்துவதால், மீள் குடியேற்றத்தில், தாமதம் ஏற்படுவதாக தெரிவித்தனர். இப்போதும் அதையே தெரிவிக்கின்றனர். இதை ஏற்க முடியாது. ராஜபக்ஷேவின் நடவடிக்கைகளில் திருப்தி இல்லை.


டவுட் தனபாலு: இந்த விவகாரத்தை முதல்வரிடம் செய்தியாளர்கள் முன்பு கேட்டபோது, "இங்கே இவ்வளவு செய்தியாளர்கள் இருக்கிறீர்கள். பேட்டி முடிந்ததும், அவ்வளவு பேரும் ஒரே நேரத்தில் இந்த வாசற்படி வழியே வெளியே செல்ல முடியுமா' என்றாரே... இந்த பதில் திருப்தியா இருக்கா!