தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

முதல்வருக்கு பிரதமர் பதில் - ஒப்புக்கு பதிலும் வந்து விட்டது.தமிழனின் உயிர் மயிரை விட கேவலமாய் போய்விட்டது.

தலையங்கம் :

இலங்கையில் ராஜபக்சேவை தமிழ் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்தபொழுது  அவர் சொன்னது 'இன்னும் 37  ஆயிரம் பேர்கள்தாம்  முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்கள் அவர்கள அனைவரும் விடுவிக்கப்படுவார்கள்'

இந்தியா வந்த ராஜபசே தமிழக பாராளுமன்ற உறுப்பினர்களிடம் சொன்னது ' 50  ஆயிரம் தமிழர்கள்தாம் முகாமில் உள்ளார்கள் அவர்கள் சீக்கிரம் விடுவிக்கபடுவார்கள்'

இதே ராஜபக்சே  நமது பிரதமரிடம்  அல்லது  பிரதமர் மூலம் நமது முதல்வருக்கு சொல்வது ' இன்னும் 47 ஆயிரம்  பேர்தான்  முகாமில் உள்ளார்கள் அவர்கள் விடுவிக்கபடுவார்கள்' என்று.

இது என்ன கணக்கு என்று தெரியவில்லை . ஆனால் ஒன்று மட்டும் உறுதியாகிறது.  தமிழர்களின் உயிர் மயிரை விட கேவலமாய் இந்த மூன்று பேருக்கும்  போய்விட்டது.

கையறு நிலையில் தமிழ்நாடும் தமிழர்களும். 

ஈழம் மட்டுமல்லாது தமிழர்கள் உலகெல்லாம் நலமுடன் வாழ  தமிழ்நாட்டில் தமிழர் நலன் சார்ந்த அரசியல் கட்டமைப்பு அதிகாரம் பெறுவது  மிக அவசியமாகிறது.


இன்று வந்துள்ள செய்தி இங்கே :


இலங்கையில் முகாம்களில் வசிக்கும் 47 ஆயிரம் தமிழர்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் தங்கள் சொந்த இடங்களில் குடியமர்த்தப்படுவர் என அந் நாட்டு அதிபர் ராஜபட்ச தன்னிடம் உறுதி அளித்துள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.  முதல்வர் கருணாநிதிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் இதைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்ச 3 நாள் பயணமாக கடந்த வாரம் இந்தியாவுக்கு வந்தார். அதற்கு முன்னதாக, இலங்கைத் தமிழர்களின் அவல நிலை குறித்தும், அவர்களது மறு குடியமர்வு குறித்தும் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் கருணாநிதி கடந்த 5-ம் தேதி கடிதம் எழுதி இருந்தார்.இதன் பின்னர், இந்தியாவுக்கு வந்த ராஜபட்சவை தி.மு.க. அணி எம்.பி.க்கள் சந்தித்து மனு அளித்தனர். அதில், முள்வேலி முகாம்களில் வாழும் தமிழர்களை மறு குடியமர்வு செய்வதில் ஏற்படும் தாமதம் கவலை அளிப்பதாகக் கூறியிருந்தனர்.

இந்த நிலையில், முதல்வர் எழுதிய கடிதத்துக்கு பதில் அளித்து பிரதமர் மன்மோகன் சிங் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:இலங்கையில் உள்ள முகாம்களில் வாழும் தமிழர்களை மறு குடியமர்வு செய்வது தொடர்பாக தாங்கள் எழுதிய கடிதத்துக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இலங்கை அதிபர் உடனான விவாதத்தின் போது இந்தப் பிரச்னையை எழுப்பினேன்.  முகாம்களில் வசிக்கும் 47 ஆயிரம் தமிழர்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் மறு குடியமர்வு செய்யப்படுவார்கள் என்று என்னிடம் ராஜபட்ச உறுதி அளித்தார்.மேலும், அந்த மக்களை மறு குடியமர்த்தும் வகையில் இந்தியா - இலங்கை கூட்டு முயற்சியாக வடக்கு - கிழக்கு மாகாணங்களில் 50 ஆயிரம் வீடுகள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மறு குடியமர்வு செய்யப்பட்ட குடும்பங்கள் தங்கள் சொந்தக் காலில் நிற்பதற்குரிய திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளை வகுத்துத் தருவதிலும் இந்திய அரசு பணியாற்றி வருகிறது.இலங்கையில் உள்ள பல்வேறு சமுதாயத்தினரிடையே வேறுபாடுகளை நீக்குவது அவசியம் என்பதை அந்த நாட்டு அதிபரிடம் வலியுறுத்தினேன்.மேலும், இலங்கையில் வாழும் அனைத்து சிறுபான்மையினருக்கும் குறிப்பாக தமிழர்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்து அளிக்க வேண்டும் என்பதை ராஜபட்சவுடனான சந்திப்பின் போது வலியுறுத்தியுள்ளேன் என்று தனது கடிதத்தில் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

போர் முடிந்து ஓராண்டாகியும், பல்லாயிரக்கணக்கான மக்கள் முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.அந்த முகாம்களில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.பாதிக்கப்பட்டுள்ள மக்களுடன் விடுதலைப் புலிகளும் இருக்கக் கூடும் எனக் கூறி மறு குடியமர்வை இலங்கை அரசு தாமதப்படுத்தி வருகிறது.

தமிழர் மறு குடியமர்வு தொடர்பாக இலங்கை அரசு முழு மனதுடன் செயல்படவில்லை.இதை இலங்கையிலுள்ள எதிர்க்கட்சிகள் கூட சுட்டிக் காட்டியுள்ளன.இலங்கை அரசின் இத்தகைய மனிதாபிமானமற்ற செயலுக்கு சர்வதேச அளவிலும் கண்டனங்கள் எழுந்தன.


அண்மையில் இந்தியாவுக்கு ராஜபட்ச வந்தபோது, பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் உயிரிழப்புக்கும், தற்போது அனுபவித்து வரும் துயரத்துக்கும் காரணமான அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுக்கக் கூடாது என தமிழகத்திலும் கண்டனக் குரல்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.