இந்த நிலையில், இலங்கைத் தமிழர் பிரச்னை குறித்து ராஜபட்சவுடன் திமுக அணியைச் சேர்ந்த எம்.பி.க்கள் புதன்கிழமை சந்தித்துப் பேச உள்ளனர். இதுகுறித்து, அந்தக் கட்சி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி:
நாடாளுமன்ற திமுக எம்.பி.க்கள் குழுவின் தலைவர் டி.ஆர்.பாலு, பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்தார். அப்போது, ராஜபட்சவைச் சந்தித்து பேசுவதற்கான நேரத்தினை ஒதுக்கிடுமாறு வலியுறுத்தினார்.
இதற்கான அனுமதி பெறப்பட்டு, திமுக எம்.பி.க்கள் குழுவினர் புதன்கிழமை சந்தித்துப் பேசுகின்றனர்.
ராஜபட்சவை சந்திக்கும் எம்.பி.க்களின் விவரம்:
திமுக: டி.ஆர்.பாலு, கனிமொழி, டி.கே.எஸ்.இளங்கோவன், ஏ.கே.எஸ்.விஜயன், இ.ஜி.சுகவனம், ஆதிசங்கர், அப்துல்ரகுமான், ஆர்.தாமரைச் செல்வன், ஜே.கே.ரித்தீஷ், எஸ்.ஆர்.ஜெயதுரை, ஜின்னா, வசந்தி ஸ்டான்லி.
காங்கிரஸ்: மணி சங்கர் ஐயர், எம்.கிருஷ்ணசாமி, கே.எஸ்.அழகிரி, பி.விஸ்வநாதன், மாணிக் தாகூர், ஜெயந்தி நடராஜன், ஈ.எம்.சுதர்சன நாச்சியப்பன், பி.எஸ்.ஞானதேசிகன்.
விடுதலைச் சிறுத்தைகள்: தொல்.திருமாவளவன்.