சென்னை காரப்பாக்கத்தில் உள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவுக்கு சொந்தமான தங்கவேலு இன்ஜினியரிங் கல்லூரியில் தமிழக இளைஞர் காங்கிரஸ் களப்பணியாளர் களின் பயிற்சி முகாம் கடந்த 1ம் தேதி நடந்தது. 2ம் தேதி அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் ரகசியமாக கலந்துக் கொண் டார்.
அவர் வருகை குறித்து எந்த கோஷ்டி தலைவர்களுக்கும் தெரிவிக்கவில்லை. அவர் சென்னையில் "விசிட்' அடித்து விட்டு சென்ற மறுநாள் தி.மு.க., தலைவர் கருணாநிதியின் 87 வது பிறந்த நாள் விழா நடந்தது.மரியாதை நிமித்தமாக கூட, கருணாநிதியை ராகுல் சந்திக்க வில்லை. பிறந்த நாள் வாழ்த்து கூற விரும்பாமல் ராகுல், டில்லிக்கு புறப்பட்டு சென்றார். ராகுலின் இந்த ரகசிய நடவடிக்கை அனைத்தும் வரும் சட்டசபை தேர்தலை மையப்படுத்தி தான் நடக்கிறது என்றும், கூட்டணிக் கட்சியிடம் ஆட்சியில் பங்கு, கூடுதல் தொகுதி பங்கீடு பெறும் முயற்சியில் ராகுல் ஈடுபட்டுள்ளார்.அதற்கு உ.பி., பார்முலாவை கையில் எடுக்க ராகுல் திட்டமிட்டுள்ளார்.பாபர் மசூதி இடிப்பு சம்பவத்திற்கு பின், உ.பி., மாநில முஸ்லிம்கள் காங்கிரசுக்கு எதிராக இருந்தனர். தலித் மக்களும் மாயாவதி கட்சி பின்னால் அணி திரண்டனர். இதனால் தேர்தல் கூட்டணியின் போது முலாயம்சிங், மாயவாதி காங்கிரஸ் கட்சிக்கு குறைந்த தொகுதிகளை ஒதுக்கினர். இந்நிலை மாறி முஸ்லிம்களும், தலித்களும் காங்கிரஸ் மீது பற்று வைக்க வேண்டும் என ராகுல் விரும்பினார். தலித் வீடுகளில் ராகுல் தங்கி, அவர்களுடன் உணவு சாப்பிட்டு கலந்துரையாடினார்.கடந்த லோக்சபா தேர்தலில் 20 தொகுதிகளை உ.பி., யில் காங்கிரஸ் கைப்பற்றியது. இந்த முன்மாதிரியை பயன்படுத்தி, தமிழகத்தில் 1967ம் ஆண்டு இழந்த காங்கிரஸ் ஆட்சியை தமிழகத்தில் மீட்டெடுக்க ராகுல் விரும்பினார்.
இந்தியாவில் உள்ள மாநிலங்களில் அதிக ஆண்டுகளாக காங்கிரஸ் ஆளாத மாநிலமாக தமிழகம் இருந்து வருவதும் ராகுலுக்கு வருத்தத்தை அளித்தது.அந்த அடிப்படையில் திராவிடக் கட்சிகளுடன் மாறி, மாறி கூட்டணி அமைப்பதை ராகுல் விரும்பவில்லை. ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் பதவி மற்றும் அதிகார ஆசை இல்லாத 40 வயதுக்குட்பட்ட களப் பணியாளர்களை வட மாவட்டங்களில் தனியாகவும், தென் மாவட்டங்களில் தனியாகவும் தேர்வு செய்தார்.சென்னையில் நடந்த ரகசிய பயிற்சி முகாமில் கலந்து கொண்ட களப்பணியாளர்களுக்கு காங்கிரஸ் கொள்கைகளையும், மத்திய அரசின் சாதனைகளும் எடுத்துக் கூறப்பட்டது. களப்பணியாளர்கள் தினசரி தங்கள் பகுதி மக்களோடு இணைந்து, அவர்களின் பிரச்னைகளை தீர்த்து வைக்கிற சேவை செய்ய வேண்டும் என ராகுல் அறிவுரை செய்தார்.ராகுல் வருகை குறித்து காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதில் ராகுல் தீவிரமாக இருக்கிறார். சட்டசபை தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் 100 தொகுதிகளை பெற வேண்டும், ஆட்சியில் பங்கு கேட்க வேண்டும் என அவர் விரும்புகிறார். தங்களது பேரத்தை தி.மு.க., ஏற்றுக் கொள்ளாமல் காங்கிரஸ் கட்சியை கழட்டி விட நினைத்தால், தனித்து போட்டியிடவும் காங்கிரஸ் தயாராக இருக்க வேண்டும் என ராகுல் தீவிரமாக உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.காங்கிரஸ் கட்சி தமிழனின் எதிரி கட்சி எனபது ஈழ விடயத்தில் தெளிவாய் தெரிந்தது . எந்த கணக்கில் காங்கிரஸ் தனித்து நிற்பது நல்லது என்று ராகுல் முடிவெடுக்கிராரோ தெரியவில்லை.
எப்படி இருந்தாலும் காங்கிரஸ் தனித்து நின்று அதன் பலத்தை தெரிந்து கொள்ளட்டுமே. இப்போது தி மு க வுடன் காங்கிரஸ் எப்படி இணக்கமாய் உள்ளதோ அதே மாதிர்தான் தொன்னூறுகளில் காங்கிரஸ் அதிமுக வுடன் இணக்கமாய் இருந்த போதும் ராஜீவ் பல முறை தமிழகம் வந்துள்ளார் அப்போதும் இது மாதிரிதான் தனித்து நிற்கும் பேச்சு அடிபடும். பின்பு காணாமல் போய்விடும்.
கூட்டணியில் நின்றே ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தே தோற்ற தங்கபாலு, இளங்கோவன் மற்றும் சிதம்பரம் (இவர் எப்படி வெற்றி பெற்றதாய் அறிவிக்கபட்டார் எனபது இன்னமும் சர்ச்சையில் உள்ளது) தனித்து நின்றா வெற்றி பெறப் போகிறார்கள் ?
காங்கிரசின் நோக்கம் தி மு கவை மிரட்டி அதிக இடங்களை வாங்குவதுதான். இது அனைவருக்கும் நன்றாய் தெரியும். என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.