தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

தேடப்படும் குற்றவாளி டக்லஸ் தேவானந்தாவை தப்பவிட்ட காங்கிரஸ் அரசு.

தேடப்படும் குற்றவாளி டக்லஸ் தேவானந்தாவை  தப்பவிட்ட  காங்கிரஸ் அரசு.

மூன்று கொடும் குற்ற வழக்கை எதிர்கொள்ளாமல்  இந்தியாவின் சட்டத்திலிருந்து , இந்தியாவை ஏமாற்றி , தமிழகத்தில் குற்றங்கள் செய்து விட்டு ஓடி ஒளிந்து கொண்ட  டக்லஸ் தேவானந்தாவை  கைது செய்ய எந்த தடையும் இல்லாத நேரத்தில் நேற்று அவன்  இலங்கை தப்பி சென்றுள்ளான்.

மீண்டும் இந்திய சட்டத்தை இந்தியாவை ஏமாற்றி உள்ளான். இதற்க்கு முழு உதவி செய்தது காங்கிரஸ் அரசுதான். 

அவர்களுக்கு ஏற்கனவே குற்றவாளிகளை தப்பவிட்ட அனுபவம் உள்ளது. ' union garbide'  ஆண்டர்சனை  இதே போன்றே இவர்கள் தப்ப விட்டார்கள். இப்போது டக்லஸ் தேவானந்தா.

காங்கிரசின் ஆட்சியாளர்கள் எப்போதும் மாறமாட்டார்கள் என்பதிற்கு இது ஒரு உதாரணம்.

இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவ ர். கொலை, ஆள் கடத்தல், கொள்ளை, மிரட்டல் போன்ற வழக்குகளில் அவர் சம்பந்தப்பட்டுள ்ளார். ஒரு நாட்டின் நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நபரை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ துணிச்சலாக அழைத்து வந்துள்ளார். இந்திய அரசால் எதுவும் செய்ய முடியாது என்ற தைரியம் தான் இதற்குக் காரணம். நான் அழைத்து வந்தால், உங்களால் எதுவும் செய்ய முடியாது என்ற ராஜபக்ஸயின் ஆணவ வெளிப்பாடாகத்தா ன் இதைப் பார்க்க வேண்டும்.



ராஜபக்ஸவின் இந்த துணிச்சலுக்கு பின்னணி இருக்கவும் வாய்ப்பு உண்டு. இவ்வளவு துணிச்சலாக டக்ளஸ் தேவனந்தாவை ராஜபக்ஸஅழைத்து வந்துள்ளார். கையாலாகாத இந்த மத்திய அரசால் எதுவும் செய்ய முடியாது என்ற திடமான நம்பிக்கையில் தான் தேடப்படும் குற்றவாளியான டக்ளஸ் தேவானந்தாவை உடன் அழைத்து வந்துள்ளார். நாட்டின் பிரதமரிடம் கைகுலுக்கி உங்களால் என்னை எதுவும் செய்ய முடியாது என்று நகையாடும் தோரணையில் டக்ளஸ் உள்ளார்