தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

சாய்வு நாற்காலியில் சாய்ந்து கொண்டு முதல்வராக இருக்கும் 87 வயது முதியவர் இனிவரும் காலங்களில் வீல் பொருத்திய கட்டிலில் படுத்து அரசியல் செய்வார்?

சாய்வு நாற்காலியில் சாய்ந்து கொண்டு முதல்வராக இருக்கும் 87 வயது முதியவர் இனிவரும் காலங்களில் வீல் பொருத்திய கட்டிலில் படுத்துக்கொண்டு அரசியல் செய்யும் காலம் தொலைவில் இல்லை..

ஏன் என்றால் படுத்துக்கொண்டு அரசியல் செய்வது ஒன்றும் தமிழகத்தில் புதிதில்லை..என்றாலும் எம்.ஜி.ஆர். படுத்துக்கொண்டு அரசியல் செய்யவில்லை..அவரை படுக்க வைத்து அரசியல் செய்தனர்..அதுபோல ஏன் நாங்களும் இந்த 87 வயது முதியவரை படுக்க வைத்து அரசியல் நடத்தக்கூடாது என்று கேட்டாலும் கேட்பார்கள் இந்தியாவின்..ஏன் உலகின் 250 – வது கார்ப்பரேட்களாக இருக்கும் சன் குழுமத்தினர்..! அடுத்து வளர்ந்து வரும் கலைஞர் தொலைகாட்சி குழுமத்தினர்..!

வரும் ஜூன் மாதம் கோவையில் உலக செம்மொழி தமிழ் மாநாடு நடக்க இருக்கிறது..இந்த விழாவே, தமிழ்..தமிழன்..தமிழின தலைவர் என்றாலே மேதகு வே.பிரபாகரன் அவர்களையே சாரும்..எப்போது தருணம் கிடைக்கும் இந்த தமிழின தலைவர் என்ற பட்டதை தட்டிப்பறித்த தேசியத் தலைவர் அவர்களை பழிவாங்குவதற்கு என்று காத்துக்கிடைக்கையில் வலியவந்து யோசனை கேட்ட காங்கிரஸ் பெருச்சாளிகளை இவரின் கடைசி வாரிசு கூட மறக்காது..! நன்றி விசுவாசத்துடன் காலை சுற்றி வருவார்கள்..! இந்த முதியவர் யுத்தம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில் கூறினார்..” ஈழத்தில் ஆட்சி அமைந்தால் அது எந்த மாதிரி ஆட்சியாக இருக்கும் என்று கேட்டாராம் மேதகு வே.பிரபாகரனிடம்..அவரும் அது சர்வாதிகார ஆட்சியாகத்தான் இருக்கும் என்று கூறினாராம்..அதை கேட்டதும் நான் கலங்கிப் போய்விட்டேன் என்று கூறியிருந்தார் இந்த முதியவர்..”

அவர் என்ன மாதிரியான ஆட்சி முறை என்று கூறினார்..அதற்கு இந்த முதியவர் சர்வாதிகார ஆட்சி என்று ஏன் புரிந்து கொண்டார்..? இவையெல்லாம் வெறும் வெங்காய விளக்கங்கள்..இந்த முதியவருக்கு தெரியாதா என்ன..? உண்மை என்னவென்று..! மக்கள் ஆட்சி என்றால் இந்த முதியவருக்கு சர்வாதிகார ஆட்சிதானே..! மேலும் எங்கே நம்மை தவிர ஒரு தமிழ் நாடு அதற்கு ஒரு தலைவர்..பிரதமர்..அதிபர் என்று ஒருவர் வந்து விட்டால் உலக தமிழ் இனம் தலையில் வைத்து கொண்டாடும்..அந்த கொண்டாட்டங்களை பார்த்து பார்த்து, வயிறு எறிந்து எறிந்து தினசரி சாக வேண்டுமே..! தான் ஒரு தமிழின தலைவர் என்று உலகத்தில் சொல்லாமால் விட்டால் என்ன..? ஏன் லட்சக்கணக்கான தொண்டர்களாவது சொல்லட்டும் என்று ஒருவழியாக மனதை தேற்றிக்கொண்டு, கடந்த மே மாத நிகழ்வுக்குப் பிறகு வாரம் ஒரு முறை விழா எடுத்து தன்னை தமிழ் தலைவர் என்று சொல்லப்பட்டு வருகிறார் இந்த முதியவர்..!

தமிழகத்தில் தனது போட்டி அரசியல்வாதியான எம்.ஜி.ஆர். கூட இவருக்கு வைரி கிடையாது, ஏனென்றால் அவர் ஒரு இலங்கையர் பிறகு மலையாளி என்று அடையாளப்படுத்தப்பட்டு இருந்தார் தமிழகத்தில் இந்த முதியவரால்..! தனக்கு எதிரியே கிடையாது என்று நினைக்கையில்..

அதாவது தனக்கு போட்டியே கிடையாது என்று நினைக்கையில்..இளம் வயது நிறைந்த ஒரு குழுவின் தலைவர் தோன்றுவார் என்று எப்படி யோசித்திருக்க முடியும்..? தலைவராக இருக்கையில்…பிற்காலத்தில் தனது அரசியல் வாழ்வையே ஒரு போலி என்று அடையாளப்படுத்தும் நிலையை இந்த இளம் குழுவின் தலைவர் எப்படி கொண்டு வரமுடியும் என்று யோசனை செய்யவில்லை..எல்லாம் கால வேகத்தில் நடந்து முடிந்தவை..!

தற்பொழுது வாரம் ஒருமுறை ஏன் விழா கொண்டாட வேண்டும்..தனது காலத்தில், தன்னை விட உலக தமிழர்களிடம் பெரும் புகழும் தமிழினத்தின் ஒரே தலைவர் என்று பெயர் பெற்று விட்ட ஒரு போட்டியாளன் எனது காலத்தில் வீழ்ந்து விட்டான் என்ற மன நிறைவில் எடுக்கும் விழாவாக புரிந்து கொள்வார்கள் தமிழக அரசியலை உன்னிப்பாக கவனித்து வரும் அரசியல் ஆய்வாளர்கள்..!

முன்பு சொல்வார்கள் இந்த முதியவரைப் பற்றி இப்படி..தனது சமகால அரசியல்வாதிகள் மறையும் பொழுதெல்லாம் மலர்வளையம் வைத்து பெயர் பெற்றவர்..இவர் ஒருவர்தான் அனைவருக்கும் மலர் வலையம் வைப்பவர் என்று கழக உடன் பிறப்புகளால்..! உண்மைதான்..

இனி இவருக்கு போட்டியாக இருந்தவர்கள்..மூத்தவர்கள் அனைவருக்கும் மலர் வளையம் வைத்து முடித்தாயிற்று.. இனிமேல் தன்னை சுற்றி இருப்பவர்களுக்கு மலர் வளையம் வைப்பார் என்று எதிர்ப்பார்க்கலாம் உடன்பிறப்புகள்..!

யுத்தம் நடந்து கொண்டிருக்கும் பொழுது தேசியத் தலைவரிடம் மற்ற அரசியல் நோக்கர்கள் மற்ற அரசியல் பிரிவைச் சேர்ந்தவர்கள் இந்த முதியவரைப் பற்றி குறை கூறும் பொழுதெல்லாம்..

” அவரைப் பற்றி யாரும் குறை கூறக்கூடாது குற்றம் சொல்லக்கூடாது என்று அன்புக் கட்டளை போட்டவர் தமிழின தலைவர் “ தேசியத் தலைவருக்கு தெரியும் யுத்தம் ஏன் நடக்கின்றது என்று..இந்த முதியவரின் மன நிறைவுக்கும் தேசியத் தலைவரின் நாடக மரணத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சொல்ல முடியாதுதான்..இருபது நாடுகளின் கூட்டு முயற்சியில் இந்த முதியவர் மன நிறைவு கொள்கிறார்.. இவை கூட தற்காலிகமானதுதான்..! நிரந்தரமானது இல்லை..!

இந்த முதியவரின் நூறாவது பிறந்த தினத்தில், தேசியத் தலைவரின் ‘பிறந்த நாள் வாழ்த்து செய்தி’ கிடைக்கும் என்று நம்பலாம்..!

- நன்றி: ஈழதேசம்