தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

இப்பொழுது சொல்லுங்கள்..! எப்படி நேசிப்பேன்..நான் இந்தியாவை..?

              இந்தியன் என்ற உணர்வும்,தாய்நாட்டு பற்றும் எனக்கு சற்று அதிகம்தான்.சாராசரியை விட கூடுதல் தேசப்பற்று எனக்கு.ஆனால் கடந்த சில வருடங்களாக இரண்டும்கெட்டான் நிலையில் குழம்பி வருகிறேன். காரணங்களை சொல்லுகிறேன். தொடர்ச்சியாக மத்தியில் ஆளும் அரசு தமிழனுக்கும் தமிழ் இனத்திற்கும் பாரபட்சம் காட்டி தீங்கு இழைத்து வருவதாக ஆழமாக நம்புகிறேன்.இந்தியன் என்ற உணர்வு நீர்த்து போய் தமிழன் என்ற நிலைக்கு கொஞ்ச கொஞ்சமாக தள்ளபடுவதாக உணர்கிறேன். காரணங்கள்..!
 
நதிநீர் பிரச்சனைகள் :

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்தும் தமிழகத்துக்கு வழங்கபடாத நியாயங்கள். இந்திய மத்திய அரசின் பாராமுகம்;  தமிழர்கள் எனும்  இளக்காரம், பாரபட்சம்....!

கச்சதீவு :

ஒட்டுமொத்த தமிழ் மக்களின் எதிர்ப்பையும் மீறி இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்ட கச்சதீவு. கச்சத்தீவு பகுதியில் மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை ராணுவத்தினர் பிடித்து சென்று செய்யும் சித்ரவதைகள், இதனை பெரிதாக கண்டுகொள்ளாத டெல்லி அரசு. இந்தியா என்னவோ துக்கடா நாடு போலவும், இலங்கை ஒரு பெரிய சர்வாதிகார நாடு போலவும் தமிழக மீனவர் பிரச்னையில் தோன்றுகிறது. தமிழன் என்ற ஒரு காரணத்தாலேயே தமிழக மீனவர்கள் புறக்கணிக்க படுவதாகவும் நினைக்க தோன்றுகிறது .

இலங்கை தமிழர் பிரச்சனையில் இந்திய அணுகுமுறை :

இந்திய அமைதி படையினர் இலங்கையில் தமிழ் மக்களின் மீது நடத்திய அத்து மீறல்கள்தான் நான் இந்தியனா..? தமிழனா..? என்ற குழப்ப விதையை என்னுள் விதைத்திருக்க கூடும்.

என் தாய் நாட்டு ராணுவத்தினர் என் இன பெண்களை மானபங்க படுத்தினர் -- இப்படி சொன்னால் அது அருவெறுப்பு.
 
என் தாய் நாட்டு ராணுவம் இலங்கையில் உள்ள பெண்களை மான பங்க படுத்தினர். --  இப்படி சொன்னால்..? என் மொழி பேசும் மக்களை மூன்றாம் மனிதர்கள் போல சொல்ல முடியாது.
வேறு எப்படி சொல்லுவது..?
 
இந்திய ராணுவத்தினர் என் தமிழ் பெண்களை மானபங்க படுத்தினர். --- இப்படித்தான் சொல்ல முடிகிறது. இப்படி சொல்லும்போதே நான் இந்தியாவில் இருந்து விலகுகிறேன்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கு என்ற புத்தகத்தில் இருந்து கீழ்க்கண்ட வரிகள் :

கடைத் தெருவுக்குச் சென்ற சமயம் தி நகரில் சுபாவின் கண்ணில் ஒரு சர்தார்ஜி பட்டார்.
அதுவரை சகஜமாக சிரித்து பேசிக்கொண்டிருந்தவர் திடீரென்று முகம் மாறினார் .அவரது உடம்பு உதற தொடங்கியது . நளினியின் கையை பிடித்து கொண்டிருந்தவர் , மேலும் அழுத்தமாக பற்றிகொண்டார் . வியர்த்துவிட்டது.
 
நளினிக்கு ஒன்றும் புரியவில்லை .என்ன.. என்ன . என்று பதற எனக்குஅவனை ஓங்கி அறைய வேண்டும் போலிருக்கிறது சர்தார்ஜியை பார்த்தாலே வயிறு எரிகிறது .என்று சுபா சொன்னார்.

இலங்கை சென்ற இந்திய அமைதி படையில் பெரும்பாலானவர்கள் சீக்கியர்கள் என்பதை தணு விளக்கினார்.இந்திய ராணுவத்தினரால் இலங்கையில் தமிழ் பெண்கள் எந்த அளவுக்கு பாதிப்பு அடைந்து இருக்கிறார்கள் என்பதை மேற்கண்ட வரிகள் விளக்கும். இப்படி அயோக்கியத்தனம் செய்த ஒரு சீக்கிய நாயை எப்படி என் இந்தியன் என சொல்ல முடியும்...?
 
தாய் மொழியா...? தாய் நாடா ..?

இந்த கேள்விக்கே இடமில்லை, தாய்மொழியே முதலிடம் வகிக்கிறது. நான் இந்தியன் என சொல்லிக்கொண்டு ஒரு மலையாளியையோ, ஒரு கன்னடனையோ, ஒரு மராட்டியனையோ , நேசிப்பதை விட, உலகில் எந்த மூலையில் இருந்தாலும் எந்த நாட்டு குடிமகனாக இருந்தாலும் அவன் தமிழை தாய்மொழியாக கொண்டவனெனில் அவனைத்தான் முதலில் நேசிப்பேன்.
இதுதான் இயற்கை.
 
நம்பிக்கை இழக்க வைத்த சில தமிழக அரசியல்வாதிகள் :

ராமதாஸ் - திருமா ஒரு கால கட்டத்தில் இவர்களில் யாரேனும் கைது செய்யபட்டுவிட்டாலே போதும் விழுப்புரத்தை தாண்டி பஸ் ,ரயில் ஏதும் ஓடாது..! மரம் வெட்டப்படும் பஸ் கொளுத்தப்படும். ஆனால் இலங்கை தமிழர் பிரச்னையில் இவர்கள் சில விளம்பர போராட்டங்கள் மட்டுமே நடத்தினர்.மரம்வெட்டும் இவர்கள் இந்த விசயத்தில் ஒரு செடியை கூட புடுங்கவில்லை.
 
கலைஞர் உண்ணாவிரதம் இருக்கிறார். உடனே போர்நிறுத்த அறிவிப்பு வந்ததாக அவர்கள் தொலைகாட்சியில் செய்தி ..! உண்ணாவிரதம் முடிகிறது.அதன் பின்னர், பூவும் பிஞ்சுமாக ஆயிர கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள் .நம்பி நொந்து ஏமாந்ததுதான் மிச்சம் .இலங்கை தமிழர் பிரச்சனையில் இந்திய நிலைப்பாடும்,அதன் நடவடிக்கைகளுமே என்னை மிகவும் காயப்படுத்தி, இந்திய உணர்வை நீர்த்துபோக செய்தது.

இலங்கையில் இருந்து அகதிகளாக வெளியேறிய பலர், பல நாடுகளில் அந்த நாட்டு குடியுரிமை பெற்று வசித்து வருகின்றனர் ஆனால் தொப்புள் கொடி உறவு என சொல்லப்படும் இந்திய நாட்டில் மட்டும் இலங்கை தமிழ் மக்கள் இன்னும் அகதி முகாமில் வசிக்கின்றனர். இதை கேட்க நாதியில்லை..!
 
நடந்து முடிந்த போரில் இந்திய ராணுவ ஆயுதங்கள் இலங்கை தமிழ் மக்களை மட்டும் கொல்ல வில்லை, இந்தியாவில் இருக்கும் தமிழர்களின் இந்திய உணர்வையும் கொலை செய்து விட்டது.

ஈழத்தில் போர்நிறுத்தம் வேண்டி அறவழியில் அமைதி வழியில் போராடிய தமிழ் நாட்டு மக்களின் போராட்டத்திற்கு இந்திய அரசு கொடுத்த மதிப்பு என்ன..மரியாதை தான் என்ன...?

18 தமிழர்கள் முக்கியமாக இளைஞர்கள் போரை நிறுத்தச் சொல்லி பிறரை துன்புறுத்தாது, தங்கள் இன்னுயிரை தீயில் கருக்கிக் கொண்டார்கள்..... நூற்றுக்கணக்கான பெண்கள், வழக்கறிஞர்கள், பல்லாயிரக்கணக்கான மாணவ மாணவிகள் உண்ணாவிரதம் பேரணி என்று தங்களையே வருத்திப் போராடிப் பார்த்தார்கள்.... கொட்டும் மழையிலும் லட்சக்கணக்கான மக்கள் பல மைல் நீளத்திற்கு தொடர் மனித சங்கிலி கோர்த்தார்கள்,அதற்க்கு கொடுக்கப்பட்ட மரியாதை என்ன..... தமிழர்களின் அழுகை அசைக்கவில்லையே இந்திய அரசை....
 
சக இந்தியர்கள் வேடிக்கை பார்த்தார்களே அன்றி எமக்காக குரல் கொடுக்கவில்லையே..... இதைதான் இவ்வளவு காலமும் எந்நாடு அதற்காக என்னுயிரையும் கொடுப்பேன் என்று சொல்லித் திரிந்தேனா....? சிறுவயது முதல் நான் பள்ளியில் ஒவ்வொரு நாளும் காலை வழிபாட்டில்  ஒன்று கூடும் பொழுது, இந்தியா ஒரு சமய சார்பற்ற நாடு; இந்தியா என் தாய் நாடு; நாம் எல்லோரும் இந்தியர்கள்; இந்தியாவின் ஒற்றுமைக்காக நாம் எல்லோரும் பாடுபடுவோம் என்று உறுதிமொழி எடுத்துக் கொள்வேனே! இதற்காகத் தானா....?
 
சரி ஒரு நாராயணனும் முகேர்ஜியும் முன்னின்று எம் தமிழினத்தை அழித்தார்கள் என்றாலும், நாம் அனைவரும் இந்தியர்கள் என்று பெருமைப் பட்டுக்கொள்ள கூடிய அளவுக்கு வேற்று மொழி பேசும் மக்கள் எங்கள் போராட்டத்துடன் கலந்து கொள்ளவில்லையே, எங்கள் துயரில் பங்கு கொள்ளவில்லையே.... என் பாடப் புத்தகத்தின் முதல் பக்கத்தில் இதே உறுதி மொழியை காணும் போதெல்லாம் பெருமை கொள்வேனே.....? அதற்காக இப்பொழுது மனம் வெம்பி வேதனைப்படுகிறேன்.....உறுதியாகச் சொல்கிறேன்.. இனிமேலும் என்னால் என்னை ஒரு இந்தியனாக எண்ண முடியாது.... எம்மனதில் வேற்றுமையை பிரிவினையை தோற்றுவித்த இந்திய ஜனநாயகம் வாழ்க....!
 
காலம் தாழ்த்தி உணர்கிறேன்.. இந்தியம் என்பது எம் எல்லோர் மனதிலும் திணிக்கப்பட்டுள்ளது என்பதை....!

இப்பொழுது சொல்லுங்கள்..! எப்படி நேசிப்பேன்..நான் இந்தியாவை..?





நன்றி
தொகுப்பு
பிரதிபலிப்பு இணையம்.