தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

நக்சலைட்டுகளின் தாக்குதல்கள்

நக்சலைட்டுகளின் தாக்குதல்கள் நாட்டின் பல பகுதிகளிலும் அதிகரித்து வருகின்றன; பாதுகாப்பு படையைச் சார்ந்தவர்களும் சாதாரண பொதுமக்களும் நூற்றுக்கணக்கில் கொல்லப்படுகின்றனர்;

சத்தீஸ்கரில் சமீபத்தில் நிகழ்ந்த தாக்குதல், மே.வங்கத்தில் நிகழ்ந்த பயணிகள் இரயில் கவிழ்ப்பு போன்ற சம்பவங்கள் காட்டுமிராண்டித்தனத்தின் உச்சகட்டமாகும். இதுபோன்ற கொடூர தாக்குதல் சம்பவங்கள் தொடர்கதையான பின்பும் கூட மத்திய அரசு இதற்கு காரணமானவர்கள் மீது எவ்வித கடும் ந்டவடிக்கையும் எடுக்க முயல்வது போல் தெரியவில்லை. அவ்வ்ப்போது வெறும் அறிக்கைகளைத்தான் வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. அந்த அறிக்கைகளை வெளியிடுவதில் கூட மத்திய அரசின் அமைச்சர்களுக்கிடையே ஆயிரம் கருத்து வேறுபாடுகள். வான்வெளித் தாக்குதல் நடத்துவது கூடாது என்று ஒரு அமைச்சர் கூறுகிறார்; நக்சலைட்டுகளை ஒழிக்க அனைத்து ந்டவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று இன்னொருவர் கூறுகிறார்; சொந்த நாட்டு மக்கள் மீது எப்படி இராணுவத் தாக்குதல் மேற்கொள்வது என்று இன்னொருவர் கேட்கிறார்; ஆளும் கூட்டணியிலிருக்கும் ஒரு சில தலைவர்கள் நக்சலைட்டுகளின் செயல்பாடுகளை மறைமுகமாக நியாயப்படுத்தவும் செய்கிறார்கள். இவர்களுக்கு பேசிக்கொண்டிருக்கத்தான் நேரம் சரியாக இருக்கிறது; இவர்களுக்கு ஓட்டளித்த மக்கள் செய்த பாவம்; கொத்து கொத்தாக பிணமாகிக் கொண்டிருக்கிறார்கள்.
அரசின் ஊழல்,முறைகேடுகள் மற்றும் பலவிதமான மக்கள் விரோத ந்டவடிக்கைகள், ஆளும் அரசியல்வாதிகளின் ஏழைகளைச் சுரண்டி தங்களை வளப்படுத்திக் கொள்ளும் போக்கு,60000 கோடி 1 இலட்சம் கோடி என கோடி கோடியாய் மக்கள் பணத்தைச் சுரண்டி தங்கள் குடும்பத்தை வளப்படுத்திக் கொள்ளும் கேடு கெட்ட தன்மை போன்றவைதான் நக்சலைட்டுகளின் தோற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் காரணமாயிருக்கின்றன என்பது நிச்சயமான உண்மை;

மாவோயிஸ்ட்கள் கொள்கை அளவில் மட்டுமில்லாது செயல்பாடுகளின் அளவிலும் கூட சீன ஆதரவாளர்கள். அவர்களது வளர்ச்சி தேசத்தின் பாதுகாப்பிற்கு ஆபத்தானது. நேபாளத்தை பார்த்தால் நமக்கு புரியும்; அங்கே அவர்கள் பெருமளவு வெற்றி பெற்ற பிறகு அவர்களது அனைத்து நடவடிக்கைகளும் இந்தியாவிற்கு எதிராகத்தானிருக்கின்றன;

இந்திய மாவோயிஸ்ட்களும் அதே ரகம்தான். முந்தைய ஆட்சியால் கொண்டுவரப்பட்ட பொடா சட்டம் நீக்கப்பட்டது மாவோயிஸ்ட்கள் உட்பட பல்வேறு பயங்கரவாத குழுக்களின் வெறியாட்டத்தற்கு மிகவும் உகந்த சூழ்நிலையை உண்டாக்கியிருக்கிறது.


அரசின் ஊழல்,முறைகேடுகள் மற்றும் பலவிதமான மக்கள் விரோத ந்டவடிக்கைகள், ஆளும் அரசியல்வாதிகளின் ஏழைகளைச் சுரண்டி தங்களை வளப்படுத்திக் கொள்ளும் போக்கு,60000 கோடி 1 இலட்சம் கோடி என கோடி கோடியாய் மக்கள் பணத்தைச் சுரண்டி தங்கள் குடும்பத்தை வளப்படுத்திக் கொள்ளும் கேடு கெட்ட தன்மை போன்றவைதான் நக்சலைட்டுகளின் தோற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் காரணமாயிருக்கின்றன என்பது நிச்சயமான உண்மை; மாவோயிஸ்ட்கள் கொள்கை அளவில் மட்டுமில்லாது செயல்பாடுகளின் அளவிலும் கூட சீன ஆதரவாளர்கள். அவர்களது வளர்ச்சி தேசத்தின் பாதுகாப்பிற்கு ஆபத்தானது. நேபாளத்தை பார்த்தால் நமக்கு புரியும்; அங்கே அவர்கள் பெருமளவு வெற்றி பெற்ற பிறகு அவர்களது அனைத்து நடவடிக்கைகளும் இந்தியாவிற்கு எதிராகத்தானிருக்கின்றன;

இந்திய மாவோயிஸ்ட்களும் அதே ரகம்தான். முந்தைய ஆட்சியால் கொண்டுவரப்பட்ட பொடா சட்டம் நீக்கப்பட்டது மாவோயிஸ்ட்கள் உட்பட பல்வேறு பயங்கரவாத குழுக்களின் வெறியாட்டத்தற்கு மிகவும் உகந்த சூழ்நிலையை உண்டாக்கியிருக்கிறது. நக்சலைட்டுகளின் செல்வாக்கை குறைக்க, அரசு ஒருபுறம் ஊழல் மற்றும் அப்பாவி மக்களை சுரண்டும் போக்கு போன்றவற்றை கைவிட்டு விட்டு, நாட்டின் அனைத்து பகுதிகளும் ஒருங்கிணைந்து வளர்ச்சி காணும் வகையில் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்; மறுபுறம் வெறியாட்டம் போடும் நக்சலைட்டுகளின் அரஜகத்தை ஒழிக்க அனைத்து வகையான கடும் ந்டவடிக்கைகளையும் தயங்காது மேற்கொள்ள வேண்டும். இல்லையேல், இப்படி வன்முறையின் மூலம் மக்களிடையே பீதியை உண்டாக்கியும், தாங்கள் ஏழைகளின் பக்கமிருப்பதாக நிலவும் தோற்றத்தை பயன்படுத்தி அதன் மூலம் மக்களை மூளைச் சலவை செய்தும் சிறிது சிறிதாக தங்கள் நடவடிக்கையின் எல்லைகளை விரிவுபடுத்தி, இந்தியாவை சீனாவின் காலனி நாடாக மாற்றும் திட்டத்தை செவ்வனே நிறைவேற்றி முடிப்பார்கள்.