தமிழர்களின் எதிரியாக இயங்கும் மத்திய காங்கிரஸ் ஆட்சி. சட்டப்படி மன்மோகன் சிங்கையும் கைது செய்யவேண்டும்.
தமிழகத்தில் நுழைந்து சிகிச்சை பெற்றுக்கொள்ள வந்த முதியவர் பார்வதி அம்மாளை சென்னையில் இருந்து விமானத்தில் இறங்காமலேயே அனுப்பி வைத்த தமிழக மற்றும் மத்திய அரசுகள் இதற்க்கு என்ன பதில் சொல்ல போகின்றன ?
இலங்கையை சேர்ந்த ஒருவனுக்கு (டக்லஸ்) இந்திய சட்டம் மன்னித்தி விட்டதென்றால் , இலங்கை பெண்ணல்ல , தமிழ் நாட்டு பெண் நளினி இன்னும் ஏன் சட்ட ரீதியில் கூட நேர்மையில்லாமல் சிறையில் இருக்க வேண்டும். ?
இந்திய சட்டப்படி , குற்றவாளியை வரவேற்ற ஒருவருக்கு தண்டனை கொடுக்கலாம் என்பதன் பொருட்டு பிரதமர் மன்மோகன் சிங்கையும் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். அப்படி நடக்குமா என்ன? அவ்வளவு நேர்மையாகவா இந்திய சட்டமும் அதை அமல்படுத்தும் அமைப்புகளும் உள்ளன ?
இன்றைய செய்தி :
குற்றவாளிக்கு ரத்தினக் கம்பளமா?
தமிழகத்தில் நுழைந்து சிகிச்சை பெற்றுக்கொள்ள வந்த முதியவர் பார்வதி அம்மாளை சென்னையில் இருந்து விமானத்தில் இறங்காமலேயே அனுப்பி வைத்த தமிழக மற்றும் மத்திய அரசுகள் இதற்க்கு என்ன பதில் சொல்ல போகின்றன ?
இலங்கையை சேர்ந்த ஒருவனுக்கு (டக்லஸ்) இந்திய சட்டம் மன்னித்தி விட்டதென்றால் , இலங்கை பெண்ணல்ல , தமிழ் நாட்டு பெண் நளினி இன்னும் ஏன் சட்ட ரீதியில் கூட நேர்மையில்லாமல் சிறையில் இருக்க வேண்டும். ?
இந்திய சட்டப்படி , குற்றவாளியை வரவேற்ற ஒருவருக்கு தண்டனை கொடுக்கலாம் என்பதன் பொருட்டு பிரதமர் மன்மோகன் சிங்கையும் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். அப்படி நடக்குமா என்ன? அவ்வளவு நேர்மையாகவா இந்திய சட்டமும் அதை அமல்படுத்தும் அமைப்புகளும் உள்ளன ?
இன்றைய செய்தி :
குற்றவாளிக்கு ரத்தினக் கம்பளமா?
தில்லி வந்துள்ள இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பிரதமர் மன்மோகன் சிங்குடன் கைகுலுக்குகிறார். உடன் அதிபர் ராஜபட்ச.
அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்திருக்கும் இலங்கை அதிபர் ராஜபட்ச, குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்களைச் சந்தித்துப் பேசினார். அதிபர் ராஜபட்சவின் இந்திய விஜயத்தை ஒட்டி இலங்கையும் இந்தியாவும் பல ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.குற்றவாளிகளைப் பரிமாறிக் கொள்வது, கிரிமினல் விஷயங்களில் சட்டரீதியான உதவிகளை ஒருவருக்கொருவர் செய்து கொள்வது போன்ற ஒப்பந்தங்களும் கையெழுத்திடப்பட்டுள்ளன. இந்த ஒப்பந்தங்களை ஏற்படுத்துவதற்காக இலங்கை அதிபருடன் வந்த குழுவில் அவரது அமைச்சரவை சகாவும் இந்திய நீதிமன்றங்களால் தேடப்பட்டு வரும் குற்றவாளியுமான டக்ளஸ் தேவானந்தாவும் இடம்பெற்றிருப்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தி இருக்கிறது.
அரசுமுறைப் பயணமாக இலங்கை அதிபர் ராஜபட்சவுடன் தில்லி வந்துள்ள அமைச்சர்கள் குழுவில் இடம்பெற்றிருக்கும் இலங்கையின் கலாசாரம் மற்றும் சிறுதொழில் வளர்ச்சித் துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது கொலை, கொலை முயற்சி போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு இந்திய நீதிமன்றத்தில் வழக்குகள் உள்ளன.
9 பேர் கொண்ட கூட்டத்துடன் தேவானந்தா 1986-ல் சென்னை சூளைமேட்டில் சாலையில் போவோர் வருவோர் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில் 5 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களில் ஒருவர் பின்னர் உயிரிழந்தார். இந்த வழக்கில் ஜாமீன் பெற்ற தேவானந்தா 1994-ல் தலைமறைவானார். இதையடுத்து அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இது தவிர, 1989 மார்ச் மாதம் பணத்துக்காக சிறுவனைக் கடத்திய வழக்கும் தேவானந்தா மீது நிலுவையில் உள்ளது. 1990-ல் கலவரத்தில் ஈடுபட்டதாகவும் வளவன் என்பரை மிரட்டி அச்சுறுத்தியதாகவும் தேவானந்தா மீது மற்றொரு வழக்கு உள்ளது.
தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஒருவரை மாஜிஸ்திரேட் உத்தரவில்லாமல், வாரண்ட் இல்லாமல் பார்த்த உடனேயே கைது செய்யவும் போலீஸôருக்கு அதிகாரம் உள்ளது. இவ்வளவு இருந்தும், துணிந்து தன்னுடைய குழுவில் அதிபர் ராஜபட்ச, டக்ளஸ் தேவானந்தாவை எப்படி, எதற்காக அழைத்து வந்தார் என்பது புதிராக இருக்கிறது. முன்கூட்டியே இந்திய அரசின் அனுமதி பெற்று டக்ளஸ் தேவானந்தா அழைத்துவரப்பட்டாரா, இல்லை இலங்கை அதிபரின் குழுவில் இடம்பெற்ற ஒருவரை இந்திய அரசால் ஒன்றும் செய்ய முடியாது என்கிற தைரியத்தில், குழுவில் சேர்த்துக் கொள்ளப்பட்டாரா என்று தலைநகர் வட்டாரத்தில் கேள்விக்கணைகள் எழுப்பப்படுகின்றன.
விடுதலைப்புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாய் என்கிற ஒரே காரணத்துக்காக, அவர் சிகிச்சைக்கு வருவதற்கு "விசா' தரப்படுவதில் தயக்கம் காட்டிய இந்திய அரசு, இந்திய நீதிமன்றங்களில் குற்றம் சாட்டப்பட்டு தேடப்பட்டுவரும் குற்றவாளியான ஒருவருக்கு, அவர் இலங்கை அமைச்சராகவே இருந்தாலும், எப்படி நுழைவு அனுமதி வழங்கலாம் என்கிற கேள்வி எழுப்பப்படுகிறது. டக்ளஸ் தேவானந்தா தேடப்பட்டுவரும் குற்றவாளி என்று தெரிந்தும் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அதிபர் ராஜபட்சவால் அவர் அறிமுகப்படுத்தப்படுவது இருக்கட்டும். இந்தத் தகவல் பிரதமருக்கு முன்பே தெரிவிக்கப்படாமல் இப்படி ஒரு சந்தர்ப்பம் நேர்ந்ததா? தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஒருவரை உபசரித்து ஆதரிக்கும் நபருக்கு (?) 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அளிக்க இந்திய தண்டனை சட்டத்தில் இடம் உள்ளது என்பது பிரதமர் மன்மோகன் சிங்குக்குத் தெரியாதா? பிரதமர் எல்லா பின்னணியும் தெரிந்து "மறப்போம் மன்னிப்போம்' என்று நீதிமன்றத் தீர்ப்புகளை ஒதுக்கித் தள்ள, யார் அவருக்கு அதிகாரம் தந்தது? பிரதமரின் செயல்பாடு நீதிமன்ற அவமதிப்பாகாதா? "இந்திய - இலங்கை ஒப்பந்தம் எல்லா அரசியல் தலைவர்களுக்கும் மன்னிப்பு வழங்கி விட்டது'' என்று விளக்கம் அளித்திருக்கும் இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கூற்றுப்படி, "ராஜீவ்காந்தியின் கொலையாளிகளும் மன்னிப்புப் பெற்றவர்களாகிவிட்டார்களோ'' என்று கேள்வி எழுப்புகிறார்கள் விமர்சகர்கள்.
புதுதில்லி அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இந்திய விஜயம், மத்திய அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறது.