தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

தமிழ் இன துரோகி கருணாநிதி - மீள் பதிவு

 

தமிழர்களின் சாபக்கேடாக, ஈழத்தின் துரதிஸ்ட்டமாக, விரும்பியோ விரும்பாமலோ அப்புறப்படுத்த முடியாத பெரும் சமூகச்சுமையாக. ஊழல், பணபட்டுவாடா மூலம் தழிழ்நாட்டை குட்டிச்சுவராக்கி. கற்காலத்தை நோக்கிய பாதையில் தமிழ்நாட்டை இட்டுச்செல்லும் துரோக சக்தியாக, முத்துவேலுநாயக்கர், தெட்சணாமூர்த்தி, என்கின்ற "கருணா நிதி" தழிழர்களை மையங்கொண்டு, சூரிய கிரகணமாக ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார்.

 

மாற்றுத்தெரிவான ஜெயலலிதா ஒன்றும் முன்னவருக்கு சற்றும் குறைந்தவரல்ல.   இருந்தும் குடும்பங்களின் பங்கீடு இல்லாத சிறிய இடைவெளி மட்டும் அங்கு உண்டு.

கருணா நிதி தனது சுய விளம்பரத்திற்காகவும். தன் குடும்ப வளர்ச்சிக்காகவும், திட்டமிட்டு  தான் பிறந்த மாதமான ஜூன் மாதத்தில் 23 ம் திகதியிலிருந்து 27 ம் திகதி வரையிலான ஐந்து தினங்கள். 

தமிழகத்தின் பாமரர்களின் பலகோடி வரிப்பணத்தின் பொருட்செலவில் தான்தோன்றித்தனமாக கோவைமாநகரில்  பிரமாண்டமாக கூட்டும் களியாட்டக்கேளிகை நிகழ்ச்சிதான் "செம்மொழி மாநாடு".

ஈழத்துயரத்தை ஈடேற்றிய கருணாநிதியால், ஈழ அழிப்பின் ஓராண்டு வெற்றி விழாபோல கொண்டாடப்படும். இந்நிகழ்வில் பங்குபற்ற பல தமிழ் அறிஞர்கள் மறுத்து புறக்கணித்தபோதும். "அழுங்கு" என்ற விலங்கின் மூர்க்கத்தோடு, செம்மொழி மாநாடு நடத்தியே தீருவேன், எதுபற்றியும் எனக்கு கவலையில்லை, என்னுடைய வளர்ச்சிதான் எனக்கு முக்கியம், என்று தமிழர்களின் மனங்களில் சேறடித்திருக்கிறார்.

செம்மொழி மாநாடு, என்று ஒன்று இதுவரை உலகில் நடந்ததாக தரவுகளில்லை.,"உலகத்தமிழாராய்ச்சி மாநாடு" என்பதுதான் பல ஆண்டுகாலமாக பல நாடுகளிலும் . தமிழ், இலக்கிய, கலை, பண்பாடு, மொழி, பற்றிய ஆழமான தொலைநோக்குடன் நடாத்தப்பட்டு வருகிறது, தமிழ் நாட்டில் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, நடாத்துவதற்கு உகந்த சூழல் உள்ள காலமல்ல இது, ஈழத்தமிழர்களின் நெஞ்சில் நிறைந்த வேதனையை பகிர்ந்து கொள்ளவேண்டிய காலம், எனக்கூறி  தமிழ் அறிஞர்களின் ஒத்துளையாமையால். ஏற்பட்ட தொல்வியை ஈடுகட்ட, தெட்சணாமூர்த்தி போட்ட மாற்றுத்திட்டந்தான் "செம்மொழி"மாநாடு என்ற பெயரில் களியாட்டமாக உருப்பெற இருக்கிறது,.     தனது தலைமையில் இனி வருங்காலங்களில் தமிழாரய்ச்சி மாநாடு நடாத்த சந்தர்ப்பம் கிடைக்கபோவதில்லை, என்ற ஈகோ  இந்த வேடிக்கை வினோத நிகழ்ச்சியை தோற்றுவிக்க அவரை தூண்டிநிற்கிறது.

தந்திரசாலியான கருணா நிதி  தன் முயற்சியில் சற்றும் மனந்தளராமல் இறந்து கிடந்த உடலை மீண்டும் தூக்கிக்கொண்டு முருங்கை மரத்தில் ஏறும் முயற்சிதான் செம்மொழி மாநாடு,       தமிழுக்கு அலங்காரமாக செம்மொழி மாநாடு நடாத்துவது பெருமைக்குரிய ஒன்றுதான்.  அந்தமாநாட்டுக்கு தலைமை தாங்கும் தகுதி இருப்பவர்கள் தலைமை தாங்கலாம்,.  

அந்தத்தகுதி கருணாநிதிக்கு இருக்கின்றதா என்பது ஆராயப்படவேண்டியது,  தாந்தோன்றித்தனமாக அவரவர் தமிழுக்கு ஆராய்ச்சி மாநாடு நடாத்த முற்பட்டால், அது கட்சிக்கூட்டங்கள் போல் இருக்குமே தவிர இலக்கிய தமிழ் வளர்ச்சி மாநாடாக இருக்காது., தமிழுக்காக தன்னலமின்றி உழைத்தவர்களும், தமிழுக்காக புரட்சி செய்தவர்களும், தமிழை சீர்திருத்தக்கூடிய திறமை பெற்றவர்களும் தான் தலைமைவகிக்க முடியும், முத்துவேலுநாயக்கர் தெட்சணாமூர்த்திக்கு இதில் எந்தத்தகுதி இருக்கின்றதென்று தெரியவில்லை. குறைந்தது தமிழனாகவாவது பிறந்திருக்க வேண்டும்.

 
சில திரைப்படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதிய தகுதியை கொண்டு தலைமை தாங்க முடியாது.    

அம்புலிமாமா என்ற புத்தகம் குழந்தைகளுக்காக பல ஆண்டுகளாக பழைமையுடன் வெளிவந்துகொண்டிருக்கிறது. அந்த புத்தகத்தில் வரும் கதைகள் எல்லாம் சரித்திர அரசர் காலத்து கதைகளாகவே இருந்துகொண்டிருக்கிறது. அதேபொன்ற ஆலாபணை சோடிப்புக்களுடன் சரித்திர நாவல்கள் எழுதக்கூடிய ஆற்றல் கருணாநிதியிடம் தொழில் முறைபயிற்சியாக நிறைய அனுபவமுண்டு. அவரது சில கவிதைகளை நானும் படித்திருக்கிறேன்  அவைகள் சாடல்களாக இருக்குமே தவிர ரசனையான கவிதையாக நான் ரசித்ததில்லை.       மற்றும், இருக்குமிடத்தில் இருந்துகொண்டால் எல்லம் செளக்கியமே.    கருணாநிதி கக்கூசுக்கு போனாலும் அதையே செய்தியாக்கி வெளியிடுவதற்கு அவருக்கென்றே  பத்திரிகை, ஊடக வசதிகளும் அடிப்பொடிகளும் நிறையவே உண்டு. இவற்றைப்பயன்படுத்தி  அவர் எது வேண்டுமானாலும் செய்யலாம் அவர் கொட்டாவி விட்டல் சங்கு, குசு விட்டால் நாதஸ்வரம் என்று உரை விளக்கம் எழுத ஆயிரம் பேர் உண்டு.

புகழ் விரும்பியான அவர். இவைகளைப்பயன்படுத்தி  தனது பதவிக்காலத்தில்  தன்னை புகழ்ந்து தனது பெயரால், தமிழுக்கு ஒரு மாநாட்டை மக்கள் பணத்தில் நடத்தி விட்டால். தனது அஸ்தமனத்தின் பின் வரலாற்றில் தனது "பாசிசம்" மறைக்கப்பட்டு நற்பெயர் நின்று நிலைக்குமென கடைசி காலத்தில் பேரசை படுகிறார்.

http://www.savukku.net/2010/03/blog-post_16.html

ஈழத்தில் வடக்கே வல்லிவெட்டித்துறை கடற்கரையில், எந்த ஒரு அரசியல் பின்னணியுமில்லாமல் பிறந்த ஒரு சிறுவன்,  கூத்து, நாடகம்,. திரைக்கதை, வசனம், மேலாக. விளம்பரமேதுமில்லாமல்,  அறிக்கை விளையாட்டு இல்லாமல், (உலகதமிழரிடம் மட்டுமில்லை) உலகாரங்கில் தமிழர் தலைவன், என்று பெயரெடுத்து வேகமாக வளர்ந்து தன்னை எட்டி உதைத்து விட்டானே, என்ற குரூர காழ்ப்புணர்ச்சி ,   செம்மொழியின் பெயரால் மாநாட்டை நிறுவ வேண்டிய கட்டாயத்திற்கு அவரை தள்ளிவிட்டுள்ளது, புகழ் தானாக வந்து சேரவேண்டியது, ஆனால் கருணாநிதி  தன்னை புகழவேண்டி, (இளைஞர்கள்) மக்கள் அதிகமாக சரிந்திருக்கும் சினிமாவுக்குள் தானாக நுழைந்து வெட்கம் துறந்து  நடு நாயமாக பிச்சை ஏற்பது போல புகழேந்தி நிற்பது என்னவோபோல் இருக்கிறது. மக்களுக்கு முன்மாதிரியாக இருக்கவேண்டிய ஒரு முதியவர், கேளிக்கை கொண்டாட்டங்களையும் சோம்பேறித்தனத்தை இளைஞர்களிடம் ஊட்டக்கூடிய சீரழிவுகளையும், ஏற்படுத்தி  தன்னை நிலைநிறுத்திக்கொள்ளுவதற்காக, சினிமாவுக்குள் சாய்ந்து மக்கள் தன்னை விட்டு விலகாத சூழலை விரித்து வேறு ஒரு உலகத்திலுமில்லாத கலாசாரத்தை ஊட்டி மக்களின் அழிவுப்பாதைக்கு வழிதிறந்திருக்கிறார்.

நடக்கப்போகும் செம்மொழி மாநாட்டில் உலகதமிழ் அறிஞர்கள் வருகிறார்களோ இல்லையோ, (கூத்தாடிகள்) சினிமாக்கலைஞர்கள் நிச்சியம் உண்டு,  நித்திரையிலும் தன்னை புகழக்கூடிய சினிமாக்கலைஞர் வாலி, வஞ்சகமில்லாமல் அள்ளிவிடும் வைரமுத்து, கருணாநிதியை கனவிலும் கரையும் பா.விஜய், எல்லாம் நீங்களே என்று சமீபகாலமாக வழிந்து கொண்டிருக்கும், ஆரிய வம்ஷ பார்ப்பன்ன காமகீர்த்தி கமலகாசன், கருணாநிதியின்  உளியின் ஓசை நாடகப்படத்தில் ஆடிய திருன அழகிய வினித், இவர்கள் போக தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு வேறு மொழி சினிமா ஆடிகளும் நிச்சியம் அலங்கரிப்பார்கள், கருணாநிதியின்  இன்னுமொரு குறி, தனது மூன்றாம் தாரத்து ராஜாத்தி அம்மாவின் மகள், திருநங்கை கனிமொழி, யை செம்மொழி மாநாட்டின் மூலம் நிச்சியம் முன்னிலைப்படுத்துவார். கனிமொழியின் கவிதைகள்,கட்டுரைகள், வேறு எந்த ஆக்கங்களும் இன்னும் என் கண்களுக்கு படவில்லை, இருந்தும் அடைமொழியுடன் "கவிஞர் கனிமொழி" என்று அழைப்பதால் அவர் சிறந்த கவிஞராகவே இருக்கக்கூடும்,       கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும், கருணாநிதியின் வீட்டு கழுதை கூட குதிரையாகலாம். 

தொல்காப்பியர்  எழுதிய தமிழ் இலக்கிய கிரந்தமான தொல்காப்பியத்தை, தனது விளம்பரத்திற்காக, 2002 2003ல் சென்னையில் இடப்பற்றாக்குறை காரணமாக பெங்களூரிலும்,கோவாவிலும் ,ஒய்வெடுத்து  விளக்கவுரை ஆலாபணை எழுதிய கருணாநிதி, அதற்கு "தொல்காப்பியப்பூங்கா" என பெயரிட்டு கட்சிக்காரர்களிடம் விற்று பணம்பண்ணினார், கொடுமை என்னவென்றால் கருணாநிதி எழுதிய தொல்காப்பிய விளக்கவுரையில் 500 க்கு மேற்ப்பட்ட பிழைகள் இருப்பதாக , புலவர், அ.நக்கீரனார், ஆதாரத்துடன் 11,01,2003 ல் குற்றச்சாட்டுக்களுடன் திருத்தஞ்செய்து சுட்டிக்காட்டியிருந்தார், ஆதாரம் பாற்க (நனவுகள்) http://nanavuhal.wordpress.com/2010/02/02/ellai-karunanidhi/
 
தன்னை விஞ்சிய தகுதியுடையவர்களை மாநாட்டில் உள்ளீர்க்க கருணாநிதி விரும்பாவிட்டாலும், பார்வையாளர்களுக்காகவும் விமர்சனங்களை தவிர்ப்பதற்காகவும் ஒருசிலரையாவது உள்ளீர்த்து விடவேண்டுமென்ற கட்டாயம் இருக்கிறது , இலங்கையின் தமிழறிஞர் பேராசிரியர் திரு கா.சிவத்தம்பி, கம்பன் கழகம் ஜெயராஜ், மலேசிய தமிழறிஞர் பேராசிரியர் பழனியப்பன் இராமசாமி, ஆகியோர்  மாநாட்டை புறக்கணித்தது உறுதியாகியிருக்கிறது,  தமிழ்நாட்டில் சினிமா உலகம் தவிர்ந்த தமிழறிஞர்களும் மாநாட்டை ரசிக்கவில்லை,  தமிழருவி மணியன் நெடுமாறன் பொன்றோர் மாநாட்டில் பங்கு பற்றப்போவதில்லை. 

கருணாநிதிக்கு இருக்கும் ஒரு ஆறுதல், நேரம் ஒரு பந்தலில் குடியிருக்கும் சுப வீர பாண்டி ஒருவர் மட்டுமே, 29 மே 2010 இணயத்தள செய்தி ஒன்றில், தென் இந்திய திரைப்பட வர்த்தகசபை, மற்றும் தென் இந்திய திரைப்படத்துறையினர் ஒரு கூட்டறிக்கை மூலம் தங்கள் எதிற்பை வெட்டை வெளிச்சமாக காட்டியிருக்கின்றனர், அவர்களுக்கு நன்றியை தெரிவித்து பணிந்து கேட்பது என்னவென்றால், தமிழரான நாங்கள் கம்பிவேலிகளுக்குள்ளும் கட்டந்தரையிலும் மரங்களின் கீழும் உறவுகளை இழந்து குழந்தைகளை இழந்து சிங்களவனிடம் அடிமைப்பட்டுக்கிடக்கும் தருணத்தில், எங்களை மீட்டெடுக்கக்கூட தமிழ்நாடு அரசு முயலாவிட்டாலும், எங்களுக்காக திரைப்படத்துறையினரும் இன்னும் பல அமைப்புக்களும், தமிழ்நாட்டு உறவுகளும், காட்டும் ஈடுபாட்டுக்கு மதிப்பளித்து செம்மொழிமாநாட்டின் முதல் நாள் அமர்வை ஈழ அழிப்பு நாளாக பிரகடனப்படுத்தி நினைவு கூர்ந்து கொண்டால் உலகம் செம்மொழி மாநாட்டை ஏற்றுக்கொள்ளக்கூடும்,

ஈழத்தை எரித்த வெப்பம் என் தமிழால் கழுவுப்படுமாக இருந்தால்! முயற்சி பாதகமில்லை,
செய்ய மணிமா முடிவீழ
சென்ற மன்னர் எண்ணிலராம்-ஐய
இதனை உள்ளத்தில்
ஆழ்ந்து காணல் அறிவாமே,
அறுகு அம்பு, ……….