தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

தமிழுக்கு செம்மொழி மாநாடு அங்கே - வறுமையில் சாகும் தமிழன் இங்கே .

முதலில் செய்திக்கு செல்வோம் :


பண்ருட்டி அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளித்து தற்கொலை  செய்து கொண்டனர். அதே போல சென்னையில் 2 குழந்தைகளை தூக்கிலிட்டுக் கொன்ற கணவனும், மனைவி-யும், தாங்களும் தற்கொலை செய்து கொண்டனர்.

பண்ருட்டி அருகே உள்ள திருவதிகை கிராமத்தைச் சேர்ந்த பெயிண்டரான ராஜாங்கத்தின் (49) மனைவி மல்லிகா, மகள்கள் திவ்யா (12), தீபிகா (9).
ராஜாங்கத்திற்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு வந்ததால் அவரால் சரியாக வேலைக்குச் செல்ல முடியவில்லை. இதனால் குடும்பம் வறுமை வாடி வந்தது.இதனால் விரக்தியடைந்த ராஜாங்கம் தனது மனைவி மற்றும் மகள்களுடன் உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீக்குளித்து உயிரிழந்தனர்.

2 குழந்தைகளை தூக்கிலிட்டு தம்பதி தற்கொலை:

இந் நிலையில் 2 குழந்தைகளை தூக்கிலிட்டுக் கொன்ற கணவனும், மனைவியும், தாங்களும் தற்கொலை செய்து கொண்டனர்.

சென்னை ஜாபர்கான்பேட்டை காமராஜர் காலனியில் அப்பாதுரை தெருவில் வசித்து வந்தவர் அன்வர் (32). ஆட்டோ டிரைவராக இருந்து வந்தார். தி.நகர் பகுதியில் ஆட்டோ சங்க துணைத் தலைவராகவும் செயல்பட்டு வந்தார்.இவருக்கு பரீதா (23) என்ற மனைவியும், ரைனா (4), ரிஸ்வானா (2) ஆகிய 2 குழந்தைகளும் இருந்தனர்.

வீட்டில் வறுமை தாண்டவமாடியதால் பெருமளவில் பணம் கடனாக வாங்கியிருந்தார். கிட்டத்தட்ட ரூ. 1 லட்சம் பணத்தை கந்து வட்டிக்கு வாங்கியிருந்தார் அன்வர். இதற்காக தினசரி ரூ.300 வட்டியாக செலுத்த வேண்டுமாம்.ஆனால் சமீப காலமாக அவரால் வட்டிப் பணத்தைக் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் கடன் கொடுத்தவர்கள் நெருக்க ஆரம்பித்தனர்.

இந் நிலையில் முதலில் தனது குழந்தைகள் ரைனாவையும், ரிஸ்வனாவையும் கயிற்றை கட்டி தூக்கில் தொங்கவிட்டார் அன்வர். பின்னர் அன்வரும், பரிதாவும் தூக்குப் போட்டு தாங்களும் தற்கொலை செய்து கொண்டனர்.இன்று காலை நான்கு பேரும் பிணமாக தூக்கில் தொங்கியதைப் பார்த்த அப்பகுதி மக்கள் கதறினர். போலீஸார் நான்கு பேரின் உடல்களையும் மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அன்வருக்கு கந்து வட்டிக்குப் பணம் கொடுத்தவர்கள் மிரட்டலே இந்த மரணத்திற்குக் காரணமாக கருதப்படுவதால், அன்வரை யார் யார் மிரட்டினார்கள் என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.


தலையங்கம் இதோ :

          செம்மொழி மாநாட்டு செய்திகளை அல்லது  முதல்வர் கருணாநிதிக்கு பாராட்டும் நிகழ்வுகளை  இப்போதுதான் நான் தொலைக்காட்சியில் பார்த்தேன்.

 நடப்பது  மிகபெரிய செலவில் - உலகமெல்லாம் பார்க்கும் செம்மொழி மாநாடு என்ற தர நினைப்பு கூட இல்லாமல்,  இன்று நடந்த பட்டிமன்றத்தில் (திரைதுறையா, சின்ன துறையா , அச்சுதுறையா) நக்கீரன் கோபால் அவர் வீட்டு கதைகளை சொல்லுகிறார்.  மெட்டி 'ஒழி' என்கிறார். நமீதா என்கிறார்.

 வாகை சந்திரசேகர் கருணாநிதி புராணம் பாடுகிறார்.  திருப்பூர் கிர்ஷணன் என்ன பேசினார் என்று எனக்கு இன்னும் விளங்கவில்லை.எஸ் வி சேகர்  இன்னும்- இரண்டு அர்த்தத்தில் 'அம்மா' வை திட்டுகிறார்.நேற்று இதைவிட கொடுமை ,  ஒரே முதல்வர் புராணம். முதல்வரின் புராணத்தில் தமிழ் எப்படி வளரும்.

தொலைக்காட்சியில்  பார்த்த எனக்கே இவ்வளவு கடுப்பென்றால் . செலவு செய்து நேரில் பார்த்தவர்க்களுக்கு கடுப்பு இருக்காதா ? அல்லது அதை எதிர்ப்பார்த்துதான் வந்தார்களா ?



நிற்க .


            தமிழ்நாட்டின் உணமையான பொருளாதார நிலவரத்தை மேலே  உள்ள செய்தி நமக்கு சொல்லுகிறது.சாதாரணமாய் குடும்பம் நடத்துவதே மிகபெரிய போராட்டமாய் உள்ளது.வெட்டி பெருமை பேசுவதில்- தான் இந்த அரசு மட்டுமல்ல மத்திய அரசும் உள்ளது.விலைவாசி சென்ற வருடத்திற்கும் இந்த வருடத்திற்கும் நாற்பது சதவீதம் உயர்ந்துள்ளது.  வருமானம் இருபது சதவீதம் குறைந்துள்ளது.
ஏதோ ஒரு சில துறைகளை தவிர, வெகு ஜனங்கள்  மிகபெரிய பாதிப்பில் உள்ளார்கள் எனபது தெளிவு.ஒரு ரூபாய்க்கு அரிசியும் தொலைக்காட்சியும் கொடுத்துவிட்டால் எல்லா வறுமையும் போய்விட்டது. என்று  'தேர்தல்' கணக்கில்  திமுக அரசு  உள்ளது.

உண்மை நிலவரம் அப்படியில்லை . கடந்த பத்து வருடங்களில் தமிழ் நாட்டில் குடிகாரர்களின் எண்ணிக்கை மிக அதிகம் ஆகிவிட்டது. குடிப்பழக்கம், குடும்பம் மொத்தத்தையும் பாதிக்கின்றது.குடும்பத்தலைவன் குடிப்பழக்கத்தில்  இருந்தால் அவனை நம்பி உள்ள  ஒட்டு மொத்த குடும்பம் அழிகிறது.  அல்லது கலாசார சீர்கேட்டில் விழுகிறது.மிகத்தவறான கொள்கைகளினால் நாட்டின் விவசாய உற்பத்தி மிக குறைந்து விட்டது.  விவசாயம் செய்ய ஆள் இல்லை . விவசாய விலை பொருட்கள் இல்லாமல்  விலைவாசியை எப்படியும் கட்டுபடுத்த முடியாது.


              அந்த விவசாயத்தை சீர்தூக்க எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.விவசாய விலை-நிலங்கள் எல்லாம் அழிக்கப்பட்டு வருகிறது. ஆற்றின் மணலை  'உடனடி' காசுக்காக அள்ளி  நீர் ஆதாரங்களை  கெடுத்துவிட்டார்கள்.  மணலை அள்ளுவது அனைத்து கட்சி களின்  ஆட்களும்தான். இதில் கூட்டணி வைத்துத்தான் எல்லாம் நடைபெறுகிறது.

எங்கே போகிறது தமிழகம் ? எப்போது விடியும் தமிழகத்திற்கு. எப்போது  ஆட்சியாளர்கள் உண்மையான மாநில அக்கறை கொன்று கொள்கைகளை வகுப்பார்கள் ?


கடைசியாய் சொல்கிறோம்.உங்களுக்கெல்லாம் நல்ல சாவே வராது.