சென்னையில் தமிழக முதல்வர் கருணாநிதியை சனிக்கிழமை சந்தித்துவிட்டு வெளியே வந்தபிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசினார். இலங்கை அதிபர் ராஜபட்சவுடன் வந்திருந்த டக்ளஸ் தேவானந்தா மீது சென்னையில் வழக்குகள் நிலுவையில் உள்ள போது அவரை கைது செய்வதற்குப் பதிலாக அரசாங்க வரவேற்பு அளித்தது பற்றி அவரிடம் கேட்கப்பட்டது.
அதற்கு அவர் அளித்த பதில்:
``டக்ளஸ் தேவானந்தா மீது நிலுவையில் வழக்கு உள்ளது பற்றி எந்தவிதமான அதிகாரப்பூர்வ தகவலும் மத்திய அரசுக்கு வரவில்லை. செய்தித்தாள்கள் மூலம்தான் இதுபற்றி அறிந்து கொண்டேன். இதுகுறித்த நீதிமன்ற தீர்ப்புகள் வந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம்'' என்று அவர் கூறினார்.
விழுப்புரம் அருகே ரயில் தண்டவாளத்தில் நடந்த குண்டு வெடிப்பு தமக்கு அச்சுறுத்தலா என்ற கேள்விக்குப் பதில் அளித்த அவர், அப்படிக் கருதவில்லை என்றும், எல்லா உயிர்களும் சமம்தான் என்றும் குறிப்பிட்டார்.