தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

ஒப்புக்கு எழுதப்பட்ட விடை எதிர்பார்க்காத கடிதம் - முதல்வர் கருணாநிதி பிரதமருக்கு எழுதியது.

                  இந்தியாவிற்கு வருகை தரும் இலங்கை அதிபர் ராஜபக்சவிடம் வலியுறுத்துமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ள கடிதத்தில், முகாம்களில் அடைபட்டிருக்கும் 80,000 தமிழர்களை அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்ப வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்

"இலங்கையில் இடம் பெயர்ந்த முகாம்களில் இருக்கும் தமிழர்கள் அனைவரும் 2009-ம் ஆண்டு டிசம்பருக்குள் மறு வாழ்வு அளிக்கப்பட்டு மறு குடியமர்த்தப்படுவார்கள் என்று இலங்கை அரசு உறுதி அளித்து இருந்ததை நீங்கள் நன்கு அறிவீர்கள்.

ஆனால் எனக்கு கிடைத்த தகவல்படி இப்போதும் 80 ஆயிரம் தமிழர்கள் இடம் பெயர்வு முகாம்களிலேயே தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இலங்கை அரசின் மறு வாழ்வு நடவடிக்கைகளை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 

மேலும் மறுவாழ்வு பணிகள் மூலம் மறு குடியமர்த்தப்பட்டவர்களுக்கும் மற்றவர்களுக்கும் பொருளாதார வளர்ச்சி திட்டங்கள், நீதியின் அடைப்படையிலான நிரந்தர அரசியல் தீர்வுகள் அவசிய மாகிறது.நீங்கள் இலங்கை அதிபரோடு நடத்த உள்ள சந்திப்பின் போது இந்த 2 பிரச்சினைகளையும் முக்கிய விஷயமாக எடுத்து வற்புறுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். முகாம்களில் இருக்கும் தமிழர்கள் விரைவில் மறு குடியமர்த்தப்பட வேண்டியதின் அவசியம் பற்றியும், உள்நாட்டிலேயே இடம் பெயர்ந்த மக்களுக்கு தேவையான மறு நிர்மான பணிகளை செய்வது குறித்தும் அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்." 


-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
                      தமிழக முதல்வரின் சங்கேத மொழியில் அவர் பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதினால் அதை பற்றி கண்டு கொள்ள வேண்டிய அவசியம் இல்லை எனபது இந்திய  பிரதமரின் அலுவலக  கடை நிலை ஊழியனுக்கு கூட தெரியும். ஏனென்றால் இப்போதுள்ள  அரசியல் சூழலில் கடிதம் எழுதுவது  ஊடகங்களுக்கு ' நானும் எழுதினேன்'  என்ன செய்வது முடியவில்லை. என்பதை காட்டத்தான். இந்த கடித விவரங்கள்  முகாமிலேயே  அடைத்து பின்னர் காணாமல் போன ஒரு லக்ஷம் தமிழர்களை பற்றி கவலை படவும் இல்லை அதை பற்றிய பதிவு குறிப்பும் இல்லாத மிக எச்சரிக்கையான கடிதம்.

தமிழர்களின் போராட்டமும் உரிமையும் அவர்கள் முகாமிலிருந்து வெளி வந்தால் போதும் என்பதை போலும் இந்த கடிதம் சொல்லுகிறது.
இப்போது உலகம் முழுமையும் , ராஜபக்சேயை கொடிய போர் குற்றவாளி என்று உரக்க சொல்லுகின்றன. சிங்கபூரை நிர்மாணித்த அதன் முதல் பிரதமர் , அவர் தமிழர் அல்ல ஆனால் மனிதாபிமானத்தில் சொல்லுகிறார் ' ராஜபக்சே சிங்கள வெறியன் ' என்று.

மூச்சுக்கு முன்னூறு தடவை தமிழன் என்று சொல்லி ஊரை ஏமாற்றும் முதல்வர்  கருணாநிதிக்கு ஏன் இது உரைக்க வில்லை. அவ்வளவு சொரணை இல்ல மனிதராகவா மாறிவிட்டார் நமது முதல்வர். ?இதற்க்கு மேலும் எழுத விரும்பவில்லை , ரத்த அழுத்தம்தான் வருகிறது.