தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

நாளை மறுநாள் செம்மொழி மாநாடு - இன்று இல்லாத(?)புலிகளின் நண்பர்கள் என தமிழர்கள் கைது.

நாளை மறுநாள் செம்மொழி மாநாடு - இன்று இல்லாத(?)புலிகளின்  நண்பர்கள் என தமிழர்கள்  கைது.

தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் தமிழகத்தில் மூன்று பேர் இன்று காவல்துறையினரால்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிவா, தமிழ் மற்றும் செல்வம் ஆகிய மூன்று பேருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

திருச்சிராப்பள்ளி, சென்னை மற்றும் ஈரோடு ஆகிய பகுதிகளில் சட்ட விரோதமாக தங்கி இருந்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக தமிழக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர்களிடம் இருந்து சுமார் 4900 சாதாரண டெட்டனேட்டர்களும், 500 வரையிலான இலத்திரனியல் டெட்டனேட்டர்களும் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அவர்கள் மூவரும், தம்மை இலங்கையில் இருந்து வந்த அகதிகள் என பதிவு செய்து கொண்டு, தமிழகத்தில் தங்கி இருந்துள்ளனர்.

அத்துடன் கடல் மார்மக்கமாக பல கடத்தல் நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நம்பும்படியாகவா உள்ளது ?

நடக்கட்டும் கருணாநிதியின் தமிழ் பணி !