அட வடிகட்டிய முட்டாள் பிரதமரே !
தலைப்பில் உள்ள வாசகங்களைத்தான் சொல்லத்தோன்றுகிறது, நமது மாண்புமிகு பிரதமர் சொல்லியருளியுள்ள கீழ்க்கண்ட செய்திகளை பார்க்கும் பொழுது.கனடாவில் இருந்தே இந்திய மக்களின் நாடித்துடிப்பை கண்டுபிடித்துவிட்டாராம் நமது பிரதமர்.?!எதிர்க்கட்சி என்றால் , அவர்கள் எங்கிருக்கிறார்கள் செவ்வாய் கிரகத்திலா ? அல்லது பக்கத்து நாட்டிலா ? அவர்களும் மக்களின் பிரதிநிதிகள்தானே ?நாளும் மக்களின் வாழ்வு போராட்டம் ஆகிவருகிறது. இந்தியாவில் மேல்தட்டில் உள்ள 10 % பேர் போக மீதியுள்ள அனைவரும் வாழ்வோடு போராடி வருகிறார்கள் வறுமையில் உழல்கிறார்கள் இதுதான் உண்மை.
சுதந்திரம் வாங்கிய நாளில் இருந்து பணக்கார அல்லது துரைதனமான அரசியல்வாதிகளை அல்லது ஊழல்- தொழில் அதிபர்களை அல்லது ஊரை ஏமாற்றும் பெரும் வியாபாரிகளை தலைவர்களாய் கொண்டுள்ள கட்சிதான் காங்கிரஸ்.காங்கிரஸ் கட்சியின் அரசியல் வாதிகளை ஆராயுங்கள் . அவர்கள் உழைத்து நேர்மையில் பணக்காரர்களாகி இருக்க மாட்டார்கள் .'அரசியல்' தொழில் செய்து பெரும் பணக்காரர் ஆகி இருப்பார்.
காங்கிரஸ் கட்சி எப்பொழுதும் வெகுஜன மக்களின் எண்ணங்களை புரிந்து கொண்டது இல்லை. அவர்களிற்கு தேவை பெரும் தொழில் அதிபர்கள் நன்றாய் இருக்க வேண்டும் .மேட்டுக்குடி பணக்காரர்களின் தொழிலை விமர்சனம் செய்யும் பத்திரிக்கைகள் பாராட்ட வேண்டும்.அப்படி பாராட்டி இருப்பபவர்கள் மட்டும்தான் பிரதமரது கண்களுக்கு மக்களாய் தெரிகிறார்கள் போலும்.
காங்கிரஸ் இந்தியாவின் 'தலைவிதி' -யான தலைவலி. காங்கிரஸ் ஒழிந்தால் மட்டுமே இந்தியா உருப்படும் . இதை எங்கு வேண்டுமானாலும் உரக்க கத்திசொல்லலாம்.
செய்தி இங்கே :
எதிர்கட்சிகள்தான் இந்த விலை உயர்வை எதிர்க்கின்றனவே தவிர மக்கள் பாராட்டுகிறார்கள் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
பெட்ரோலியப் பொருட்களின் விலையை நிறுவனங்கள் தங்களது விருப்பம் போல் நிர்ணயித்துக் கொள்ளும் வகையில், விலை நிர்ணயம் மீதான தனது கட்டுப்பாட்டை விலக்கிக்கொள்வது குறித்து மத்திய அமைச்சரவையின் அதிகாரம் மிக்க அமைச்சர்கள் குழு, கடந்த 25 ஆம் தேதியன்று கூடி ஆலோசித்தது.
இதில் பெட்ரோலுக்கான விலை நிர்ணயம் மீதான அரசு கட்டுப்பாட்டை விலக்கிக்கொள்வது என்றும், டீசல் மீதான விலையை ரூ. 2 க்கு மேல் உயர்த்தும்போது பெட்ரோலியத் துறை அமைச்சகத்தின் ஒப்புதலை கேட்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.
அதே சமயம் மண்ணெண்ணெய் மற்றும் சமையல் எரி வாயு சிலிண்டரின் விலை நிர்ணயம் மீதான தனது கட்டுப்பாட்டை அரசு தொடர்ந்து வைத்துக்கொள்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சர்வதேச சந்தையின் தற்போதைய நிலவரத்திற்கு ஏற்ப பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.73 ம், டீசல் லிட்டருக்கு 2 ம், சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ. 35 ம், மண்ணெண்ணெய் லிட்டருக்கு ரூ. 3 ம் அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த விலை உயர்வுக்கு நாடு முழுவதும் மக்களிடையே கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், மக்கள் எதுவும் அவ்வாறு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும், எதிர்கட்சிகள்தான் எதிர்ப்பு தெரிவிக்கின்றன என்றும் திருவாய்மலர்ந்துள்ளார் பிரதமர் மன்மோகன் சிங்.
தனது கனடா பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பும் வழியில் விமானத்தில் வைத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் மன்மோகன்.
அப்போது, "நமது மக்கள் புத்திசாலியானவர்கள். மக்கள் தொகை பெருக்கம், நமது நாட்டின் வளர்ச்சியை தடம்புரளச் செய்துவிடக்கூடாது என்பதை புரிந்துகொண்டுள்ளனர்.
பெட்ரோலிய பொருட்கள் மீதான விலை உயர்வு தொடர்பாக எதிர்கட்சிகள்தான் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். ஆனால் விலையை உயர்த்த வேண்டிய நெருக்கடி காரணமாகத்தான் அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டது என்பதை புரிந்துகொண்டு மக்கள் அதனை பாராட்டுகிறார்கள்.
தற்போது பெட்ரோல் மீதான விலை நிர்ணய கட்டுப்பாடு மட்டும்தான் விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது. டீசல் மீதான விலை நிர்ணய கட்டுப்பாடும் அரசிடமிருந்து விலக்கிக்கொள்ளப்பட வேண்டும்" என்று கூறினார் மன்மோகன்.