தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

இனி தமிழனுக்கு என்று தனி அரசு அமையுமா ?

தலையங்கம் :

இலகையை பொறுத்த அளவில்  அந்த அரசிற்கு வரும் கண்டனங்கள் எல்லாமே ஒப்புக்கு வருகிறது எனபது தெளிவாகிறது. ஒரு சுண்டைக்காய் நாடு  எல்லவற்றையும் உதாசீனபடுதுகிறது என்றால் , சிங்களவனுக்கு  உலகம் அங்கீகாரம்  அளித்து விட்டது , இலங்கை அரசின் மூலம். தமிழனுக்கு அங்கீகாரம் இல்லை  என்றால் , தமிழனுக்கு  என்று தனி அரசாங்கம் இல்லை என்பதினால்தானே.



இந்தியாவில் உள்ளது தமிழ் இன எதிரி அரசாங்கம்.


தமிழகத்தில் உள்ளது , மாநில அல்லது  'பிள்ளையான்' போலுள்ள அரசாங்கம்.  அங்கே சிங்களம் மேலே பிள்ளையான் கீழே . இங்கே  கொலைவெறி சோனியா மேலே 'தமிழ் இன துரோகி' கீழே .


அவசர அவசரமாய் தமிழர்களும் தமிழ் சார்ந்த அறிவாளிகளும் சிந்திக்க வேண்டியது.

இந்த விடயங்களைத்தான். தமிழனுக்கு ஏன் வீழ்ச்சி ஏற்பட்டது. உலகம் தமிழனை  மற்றொரு அரசாங்கத்தின் கீழ் உள்ள குடிகளாகத்தான் பார்த்தது.


அந்த அரசாங்கம் நல்ல அரசாங்கமாக இருந்திருந்தாலும் கூட நாம் கவலை கொள்ள தேவையில்லை.  அந்த அரசு இனவெறி கொண்ட சிங்கள வெறிகொண்ட அரசாய் இருப்பதுதான் பிரச்சினையே.


சுண்டைக்காய் நாடு  உலக அங்கீகாரம் பெற்றுவிட்டது. பூசணிக்காய் போல உள்ள தமிழர்கள் சுண்டைக்காயை நக்கி வாழ  விடபட்டுள்ளான் என்றால் தவறு எங்கே ? அவன் அரசாங்கமாய் இருக்கிறான் . சிங்களவன் அரசாய் இருக்கிறான் , உலகத்தோடு பேசுகிறான், நாம்  தனி அரசு அமைப்பில் இல்லை.  பெருந்தவறு இங்கே தான்.


இனி தமிழனுக்கு என்று தனி அரசு அமையுமா ? இலங்கையில் அமையாவிட்டாலும் இந்த உண்மைகளை தமிழன் உணரும் பொழுது இந்தியாவில் இருந்து பிரிந்து அமைய சாத்தியகூறுகள் மிக அதிகம் தெரிகின்றன . ஏனென்றால்  மாநில மக்களின் மன ஓட்டத்தை மத்திய அரசு அங்கீகரித்த மாதிரியோ அல்லது அவர்களது  கோரிக்கைகளை ஏற்ற மாதிரியோ  இல்லாமல் , தேர்தல் , அரசு அமைத்தல் , கூட்டுகொள்ளை அடித்தல், சப்பு கட்டு வாதம் செய்தல்  இவைகளில் மட்டுமே இப்போதுள்ள மத்திய அரசு செய்கிறது.


இப்படியே கதையை ஒட்டி விடலாமா தெரியவில்லை ?

இனி செய்தியை படியுங்கள் :

இலங்கையில் இனப்படுகொலைகள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன என்று ஐ.நா சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் கொபி அனான் கவலை தெரிவித்துள்ளார்.

அவர் இனப்படுகொலைகள் தொடர்பான விழிப்பூட்டல் நடவடிக்கைகள் பாடசாலை மட்டத்தில் இருந்தே மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு பேட்டி வழங்கினார்.

அவர் அதில் இனப்படுகொலைகள் இலங்கை, சூடான், கம்போடியா, கொங்கோ, பொஸ்னியா, ருவாண்டா ஆகிய நாடுகளில் பல்கிப் பெருகிக் கொண்டே செல்கின்றன என்று தனது வருத்தத்தை குறிப்பிட்டுள்ளார்.