ஒரு சிலர் நினைக்கலாம் ஏன் மீண்டும் மீண்டும் இலங்கை அரசியலையே தலையங்கமாக எழுதுகிறது என்று.
ஈழத்தில் தமிழன் துரோகத்தால் வீழ்ந்தான் . வாழ்வதருக்கு உரிமை கேட்டவனை ' அரசியல்' வியாபாரியான நயவஞ்சகர்கள் , உள்ளிருந்து நாடகம் ஆடி வீழ செய்தார்கள்.
செத்தது தமிழ் இனம் இல்லாது வேறு ஒரு இனமாய் இருந்திருந்தால், செத்த இனத்தை சேர்ந்தவர்களின் 'தாயகமான' தமிழ் நாடு இப்போது இருக்கிறமாதிரி 'அமைதி பூங்கா' வாக , மற்ற இனத்தின் மாநிலம் இருந்திருக்காது. அதற்க்கு உதாரணம் பஞ்சாப்.
தமிழனுக்காகத்தான் தமிழ் மொழி , தமிழனையே கொன்று விட்டு. மொழி என்ன மயிற்றை பிடுங்க ஆக போகிறது.
தமிழனின் உயிரே மயிரை விட கேவலமாய் ஈழத்தில் ஆகிவிட்ட பொழுது , மொழி என்ன மயிற்றிக்கு .
செத்தது சக தமிழன் என்ற எழுச்சி தமிழகத்தில் வரவேண்டும்.
நமது தலைமுறையில் நம் கண் முன்னே நமது தமிழன் ஒருவனை, நாம் வாழும் நமது இந்திய நாடே , நம்மை ஆட்சி செய்யும் நமது தமிழக மாநிலமே கொல்வதற்கு உடந்தை என்றால் ? இதை விட மிகபெரிய கொடுமை எங்கே நடக்கும்?
எழுச்சி எங்கே இருக்க வேண்டும் எனபது இப்போது தெளிவாக தெரியும் .
கீழே உள்ள செய்திய பற்றி நான் பெரிதாய் பேசபோவதில்லை அது தெரிந்த கதைதான்.
செய்தி இங்கே :
செம்மொழி மாநாடு நடத்துவதில் தனது தள்ளாதவயதிலும் தீவிரமாகச் செயற்படும் கலைஞர் கருணாநிதி மாநாட்டிற்குச் சற்று முன்பதாக
தமிழுக்கான உரிமை கோரிய வழக்குரைஞர்களைக் கைது செய்து சிறைகளில் அடைத்து சித்திரவதைக்கு உட்படுத்தியுள்ள அதிர்ச்சியான சம்பவம் வெளியானது. முன்பதாக இலங்கையில் இனப்படுகொலையை தடையின்றி நடத்தி முடிப்பதற்காக ராஜபக்ச குடும்ப அரசுடன் இணைந்து நடத்திய சதி நாடகம் வெளிச்சத்திற்கு வந்தது. விழுப்புரம் தண்டவாளத் தகர்ப்பு நடவடிக்கை மற்றொரு நாடகம் என்பது சந்தேகத்திற்கிடமானதாக உள்ளது.
இந்த நிலையில் கருணாநிதிக்கு பார்வதியம்மாள் எழுதியதாகக் கூறப்படும் மடலும் கருணாநிதி குடும்பம் சார்ந்த கும்பலின் நாடகமே எனத் தெரியவருகிறது.
இந்த நாடகம் எவ்வாறு நடத்தப்பட்டது என சிவாஜிலிங்கம் இனியொருவிற்குத் தெரிவித்தார். இன்று 21.06.2010 இலங்கையிலிருந்து இனியொருவிற்கு தொலைபேசியில் தொடர்புகொண்ட சிவாஜிலிங்கம், பார்வதியம்மாள் கருணாநிதிக்கு அப்படியொரு கடித்ததையும் எழுதவில்லை எனக் குறிப்பிட்டார்.
மலேசியாவிலிருந்து தமிழ்நாட்டில் திருச்சியிலுள்ள மருத்துவர் ஒருவரிடம் பக்கவாதத்திற்கான சிக்கைச்சை பெறுவதற்காக அங்கிருந்த பிரயாண முகவரூடாகவே மருத்துவ விசாவிற்கு விண்னப்பித்திருந்தார். விண்ணப்பம் அனுப்பப்பட்ட சில நாட்களில், முழு நினைவாற்றலும் அற்றிருந்த நிலையில், ஒரு வெள்ளைப் பேப்பரில் அவரிடம் அவரது பெருவிரல் அடையாளம் வாங்கப்பட்டது. இவ்வாறான கைவிரல் அடையாளத்தைக் கோரி பிரயாண முகவரே பார்வதியம்மாளிடம் வந்தார். அப்போது விசா பெறுவதற்கான ஏற்பாடுகளுக்காகவே பெருவிரல் அடையாளத்தைக் கோருகிறோம் எனக் குறிப்பிட்டனர்.
எந்த சந்தர்ப்பத்திலும் இது கருணாநிதிக்கு எழுதப்படும் கடிதம் என்றோ அல்லது கடிதத்தின் உள்ளடக்கம் குறித்தோ அவரிடம் கூறப்படவில்லை.
இந்தியாவிலிருந்த சிலரும், கனேடியத் தமிழர் பேரவையைச் சேர்ந்த சிலரும் கருணாநிதியின் நலன் கருதி கடிதத்தைத் தாமே தயார்செய்து அனுப்பியுள்ளனர். கடிதம் அனுப்பப்பட்ட மறுநாளே அது ஊடகங்களில் பிரபலப்படுத்தப்பட்டது. இவ்வாறு சிவாஜிலிங்கம் இனியொருவிற்குத் தெரிவித்தார். இந்த நாடகத்தில் பங்காற்றிய ஏனைய "நடிகர்களின்" பெயர்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.
இந்த நாடகங்களை எல்லாம் கருணாநிதி தனது கடந்த காலத்தைப் போல சாவகாசமாக நடத்தி முடிக்க முடியாத அளவிற்கு இன்று தமிழ் நாட்டில் ஒரு புதிய இளைஞர் கூட்டம் விழிப்படைந்து வருகிறது.
ஜெயலலிதா கருணாநிதி போன்ற பிழைப்புவாத அரசியல் வியாபாரிகளை இனம் கண்டுகொள்ள இன்னொரு கூட்டம் எழுச்சிபெறுகிறது.
ஐம்பதாயிரம் தமிழர்களை துடிக்கத் துடிக்க இரசாயன ஆயுதங்களால் கொன்று குவித்த போது அண்ணாந்து பார்த்து ரசித்துக்கொண்டிருந்த கருணாநிதிக்கு பார்வதியம்மாள் எந்த மூலைக்கு?
பக்கவாததால் பாதிக்கப்பட்ட ஒரு முதியவரை முன்வைத்து நடத்திய கேவலமான அரசியல் நாடகம் சீரழிந்து போன திராவிட இயக்கத்தின் கோர முகத்தைக் காட்டுகிறது.
பட்டினிச் சாவை எதிர் நோக்கியிருக்கும் ஈழத் தமிழர்கள் மரண ஓலத்திற்கு மத்தியில், ரகுமானின் பொப்பிசைப் பாடலுடன் கருணாநிதி குடும்பத்திற்காகக் குதூகலமாக நடத்தப்படும் செம்மொழி நாடகத்தில் கலந்துகொள்ளும் பேராசிரியர் "ஈழத்துச்" சிவத்தம்பிக்குமா இந்த மரண ஓலங்கள் கேட்கவில்லை?