தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

செம்மொழி மாநாடு செம்மையாக நடைபெற இந்த நாடகமும் நடத்த வேண்டியுள்ளது.

செம்மொழி மாநாடு செம்மையாக நடைபெற இந்த நாடகமும் நடத்த வேண்டியுள்ளது.

பார்வதி அம்மாளை சென்னைக்கு அழைத்துச் செல்ல திருமாவளவன் முயற்சி

செய்தி முதலில் :


பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டார்.அப்போது தமிழ்நாட்டில் உள்ள முசிறியில் வந்து சிகிச்சை பெற்றதால் குணமடைந்தார்.பிறகு அமைதி ஒப்பந்தம் ஏற்பட்ட காலத்தில் இலங்கை சென்று பிரபாகரனுடன் வசித்து வந்தார்.

கடந்த ஆண்டு விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை இராணுவத்திற்கும் இடையே இறுதிக்கட்ட போரின் போது இடம்பெயர்ந்த சுமார் 3 இலட்சம் ஈழத் தமிழர்களுடன் பார்வதி அம்மாளும் அவரது கணவர் வேலுப்பிள்ளையும் முகாம்களில் தஞ்சம் அடைந்தனர்.

சில மாதங்களுக்கு முன்பு வேலுப்பிள்ளை மரணம் அடைந்தார்.அதன் பிறகு பார்வதி அம்மாள் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் கனடாவில் உள்ள தனது மகள் வீட்டில் சிகிச்சை பெற பார்வதி அம்மாள் மேற்கொண்ட முயற்சி வெற்றிபெறவில்லை.

எனவே மீண்டும் தமிழகத்தில் தங்கி சிகிச்சை பெற விரும்பினார். இதற்காக மலேசியாவிலிருந்து சென்னைக்கு சிகிச்சைக்காக பார்வதி அம்மாள் வந்தார். ஆனால், சென்னை விமான நிலையத்தில் இறங்கக் கூட அனுமதிக்காமல் அதிகாரிகள் திருப்பி அனுப்பினர்.

இந்த நிலையில் தமிழக அரசின் முயற்சியால் பார்வதி அம்மாள் சிகிச்சை பெற நிபந்தனைகள் விதிக்கப்பட்டு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், இதனை விரும்பாத பார்வதி அம்மாள் நிபந்தனையை ஏற்காமல் இலங்கையில் உள்ள தனது சொந்தவூரான வல்வெட்டித்துறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு தன் நிபந்தனைகளைத் தளர்த்தி சிகிச்சைக்கு அனுமதியளித்தது.இதையடுத்து இலங்கையில் உள்ள இந்திய தூதர் மற்றும் தமிழக அரசுக்கு மத்திய அரசு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றில் பார்வதி அம்மாள் தமது மகள் வீட்டில் தங்கலாம். நண்பர்கள்,உறவினர்கள் சந்திக்கலாம். ஆனால், அரசியல் கட்சியினர், தடை செய்யப்பட்ட இயக்கத்தினர் சந்திக்கக்கூடாது என்று மத்திய அரசு தெரிவித்தது.

ஆனால், அதைப் பரிசீலிக்கும் மன நிலையில் பார்வதி அம்மாள் இல்லை என்று அவரது உறவினரும் முன்னாள் எம்.பி.யுமான சிவாஜிலிங்கம் தரப்பில் கூறப்பட்டது.

இந்த நிலையில், பார்வதி அம்மாள் உடல் நிலை திடீரென மோசமடைந்தது. இதையடுத்து, அவர் யாழ்ப்பாணத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனை அறிந்த இலங்கைத் தமிழர்களும் அவரது நெருங்கிய உறவினர்களும் மருத்துவமனைக்கு வந்து அவரை பார்த்த வண்ணம் உள்ளனர்.இந்த நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி.பார்வதி அம்மாளை சென்னைக்கு அழைத்து வந்து சிகிச்சை அளிக்க தீவிர ஏற்பாடு செய்து வருகிறார்.

பார்வதி அம்மாளை கவனித்து வரும் முன்னாள் எம்.பி. சிவாஜிலிங்கம் மற்றும் கனடாவில் இருந்து வரும் அவரது மகளையும் திருமாவளவன் எம்.பி.தொடர்பு கொண்டு பேசி வருகிறார். அவர்களின் இசைவு கிடைத்த பின்பு திருமாவளவன் யாழ்ப்பாணம் மருத்துவமனைக்குச் சென்று பார்வதி அம்மாளை அழைத்து வருவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இருப்பினும், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு முடிந்த பின்னரே பார்வதி அம்மாள் அழைத்து வரப்படுவார் என விடுதலைச் சிறுத்தைகள் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

தலையங்கம் :

என்னத்த சொல்லுறது . முதல் வரியை படியுங்கள்

கருணாநிதியுடன் இருந்த காரணத்தினால் மட்டுமல்ல, காங்கிரசுடன் கைகோர்த்து செயல்படும் திருமா,  ஈழத்தில் , ஈழதமிழர்களின்    ஆதரவை  இழந்துவிட்டார்.

அவர் ஆதரவை இழக்க வேண்டும் எனபது உணர்வாளர்களின் எண்ணம் இல்லை. 

தமிழகத்தில் ஈழ ஆதரவு எழுச்சி வரும் பொழுதெல்லாம் , உள்ளிருந்து  நாடகமாடி உணர்வுகளை நீர்த்துப்போக செய்யும் கருணாநிதிக்கு உடந்தை வேலைகளை திருமா மற்றும் வீரபாண்டியன் போன்றவர்கள்செய்கிறார்கள்.

 

சென்றதெல்லாம் போகட்டும் இனி மேலாவது உண்மையின் பக்கம் இவர்கள் நிற்கட்டும்.

கடைசியாக திருமா மற்றும் ராமதாசுக்கு ஒரு கேள்வி , நீங்கள் சேர்ந்து ஆரம்பித்த 'இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம்' என்னாயிற்று ?  இலங்கையில் தமிழர்கள் கருணாநிதி ஆட்சியில் உரிமை பெற்றுவிட்டார்களா ?

மண்டை காய்கிரதையா !  துரோகங்களை பார்த்து பார்த்து !