உணர்வற்றவர்களுக்கு மட்டும்!-கவிதை
உறவுகளின் ரத்த
வாடையா மூக்கை மூடிக் கொள்வோம்;
அழுகுரலா
காதை அடைத்துக் கொள்வோம்;
கதறுகிறார்களா
அங்கே நோக்க மறுப்போம்;
ஈழம் பற்றி பேச்சா
தூரே விலகுவோம்..
வேறேதும் கதை அடித்து காலம்
கழிக்கும் இடைவெளிகளில் - யாரேனும்
நீ யாரென்றால்
தமிழனென சொல்ல வெட்கப் படுவோம்!
உணர்வற்றவர்களுக்கு மட்டும்
நன்றி - வித்யாசாகர்
தொகுப்பு
ஈழத் தமிழர் வரலாறு