தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

போரினால் மிகப் பெரிய அவலங்கள் இடம்பெற்ற முதல் 10 நாடுகளில் இலங்கையும் இணைப்பு


உலகில் போர் நடைபெற்றபோது, மிகப் பெரிய அவலங்கள் இடம்பெற்ற நாடுகள் வரிசையில் முதல் 10 நாடுகளில் சிறிலங்காவும் உள்ளடக்கப்பட்ட விரிப்பு ஒன்றை தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் ஒன்றான எம்.எஸ்.எவ் எனும் எல்லைகளற்ற மருத்துவர் அமைப்பு வெளியிட்டுள்ளது.

சிறீலங்காப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரில் ஆயிரக்கணக்கான மக்கள் உதவிகள் துண்டிக்கப்பட்டு, மருத்துவ தேவைகள் மட்டுப்படுத்தப்பட்டும் அவதிப்பட்டார்கள் என அந்த அமைப்புத் தெரிவித்துள்ளது.போர் நடைபெற்றபோது, அப்பகுதிக்குள் மக்களின் மருத்துப் பராமரிப்புக்கு எங்களை அனுமதிக்கவில்லை. அதேநேரத்தில் போர் நடைபெற்ற பகுதிக்கு வெளியே பணிக்கு அமர்த்தப்பட்டதாகவும் என எல்லைகளற்ற மருத்துவ அமைப்பைச் சேர்ந்த வனசா வான் ஸ்கோர் தமிழோசைக்குத் தெரிவித்துள்ளார்.

போர் நடைபெற்ற பகுதியில் சிறீலங்கா சுகாதார அமைச்சின் பணியாளர்கள் பணியாற்றுகின்றனர் எனவும், எங்களை போர் நடைபெற்ற பிரதேசங்களுக்கு வெளியே ஓரமாக இருக்கும் மருத்துவமனைகளில் கடமையாற்றுமாறும், வெளியே வரும் மக்களுக்கு சிகிற்சை வழங்குமாறும் அரசாங்கத்தினால் பணிக்கப்பட்டுள்ளது.இதனால் பல சிரமங்களை எதிர்கொண்டோம். எடுத்துக்காட்டாக காயப்பட்டு வரும் நோயாளியைப் பராமரிக்கக் வெளியே இருந்து வர அனுமதிக்கப்படுவதில்லை. இதனால் மிகவும் அவதிப்பட்டோம்.

கடந்த பெப்ரவரி மாதம் முதல் யூன் மாதம் வரைர 4,000 பேருக்கு மருத்துவ சிகிச்சைகள் வழங்கினோம். இவர்களில் யார் போராளிகள், மக்கள் என அடையாளம் காணுவது கடினம்.எறிகணைக் காயங்களுக்கும் சிகிற்சை வழங்கியுள்ளோம். அவை முன்னால் தாக்கப்பட்டுள்ளது. எலும்பு முறிவுக் காயங்களுக்கும் சிகிற்சை வழங்கினோம். அத்துடன் போசாக்கு வழங்கியும் உதவியுள்ளோம் என்றார் அவர்.