தலைப்பும் செய்தியும் :
அரசுக் கட்டிலில் வீற்றிருக்க ஆசையில்லை : முதல்வர் கருணாநிதி
"எழுத்துக்கு விருது வழங்கினால், முதல்வர் பதவியை விட 30 ஆயிரம் மடங்கு மகிழ்ச்சி அடைவேன். எனக்கு அரசுக் கட்டிலில் வீற்றிருக்க ஆசையில்லை" என்று முதல்வர் கருணாநிதி பேசினார்.
பகலவனின் பதில்
'அரசுக் கட்டிலில் வீற்றிருக்க ' என்ற வார்த்தை பிரயோகமே ஜனநாயகத்தை மறக்கடித்து முடியாட்சியை நினைவு படுத்தும் வெளிப்பாடு.
'அரசு கட்டிலில் வீற்றிருக்கும் மன்னன் ' என்று முடியாட்சியை தலைமை கொண்டாடும் அரசனை குறிபிடுவார்கள். மக்களாட்சியில் முதல்வர் பதவி என்பது எல்லா அரசாங்க வேலைகளுக்கும் தலைமை ஏற்கும் முதல் குடிமகன் அல்லது முதல்நிலை ஊழியன் என்பதே அர்த்தம். ஆனால் முதல்வராக வரும் யாரும் அல்லது இருக்கும் எவரும் தன்னை மன்னனாகவோ அல்லது அரசியாகவோ வெளிக்காட்டவே விருப்பபடுகிரார்கள் .
முதல்வர் பதவியில் இருக்க விருப்பம் இல்லையென்றால் உடனடியாக பதவியை ராஜினாமா செய்யவேண்டும் . அந்த இடத்திற்கு வேறு ஒருவர் வருவார். அவர் தமது வேலைகளை அலுவல்களை கவனிப்பார். அவர் தற்போதைய முதல்வரின் புதல்வர் ஸ்டாலினாக கூட இருக்கலாம் .
ஆனால் அதை விடுத்து , தம் விருப்பம் இல்லா பதவியில் இருப்பதை போல காட்டிகொள்ளும் செயல் அல்லது இப்படி பேசுவதன் மூலம் ' ஐயோடா முதல்வர் பதவியையே துச்சமாக நினைக்கிறாரே இவர் ' என்று மக்கள் அனுதாபம் காட்டவேண்டும் என்று நினைத்தாலோ , விரும்பினாலோ அது மக்களை முட்டாளாக்கும் செயல்.
ஒருவர் பதவியில் இருந்து இறங்கினால் பிறிதொருவர் வருவார் . எந்த நாடும் எந்த தேசமும் ஒருவரை மட்டுமே நம்பி இல்லை .இது இயற்க்கை. இதை விட்டு செயற்கையாய் பச்சாதாபத்தை எதிர்பார்த்தால் அது பச்சோந்தித்தனம் தான்.
விருப்பம் இல்லா முதல்வர் பதவியில் இருந்து கலைஞர் உடனே இறங்கட்டும் . உன்னை போன்ற கேடுகெட்ட அரசியல்வாதி தமிழ் வரலாற்றில் ஒரு சாபக் கேடு.