தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

தமிழக மீனவர்களை கொல்லுவதற்கு -பயிற்சி


இலங்கை கடற்படைக்கு இந்தியாவில் பயிற்சி அளிப்பது குறித்து இந்தியத் தூதரக அதிகாரியுடன் பேச்சு நடத்தப்பட்டுள்ளது.


இலங்கைக் கடற்படைத் தளபதி துணை அட்மிரல் திசர சமரசிங்க நேற்று மாலையில்
இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அஷோக் கே. காந்தாவுடன் சந்தித்து பேச்சுக்கள் நடத்தியுள்ளார்.

அப்போது இலங்கைக் கடற்படையினருக்கு இந்தியாவில் பயிற்சி கொடுப்பது
குறித்தும் பேசப்பட்டதாக கடற்படைப் பேச்சாளர் கேப்டன் அத்துல சேனாரத் கூறியுள்ளார்.

இந்த பேச்சுவார்த்தையின்போது, இந்திய தூதுவருடன் பாதுகாப்புக்காக உடனிருக்கும் இந்திய கேப்டன் பிரதீப் சிங்கும் உடன் இருந்தததாகக் கூறப்படுகிறது.
தமிழக மீனவர்கள் படும் துயரங்களை எத்தனை முறை சொன்னல்லும் மத்திய அரசு கேட்கும் நிலையில் இல்லை. வெகு சீக்கிரம் மத்திய அரசை எதிர்த்து தமிழகம் கொந்தளிக்கும் என்பது மட்டும் திண்ணம்.