தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

அம்மா நானும் விபச்சாரம் செய்யவா?

உண்மைக் கதை.

பொதுவாக நான் கதைகளை படிப்பதில்லை ,அப்படி இருந்தும் நான் கண்ட ஒரு தலைப்பே என்னை கதி கலங்கச்செய்தது.என் பின்னுட்டத்தில் வந்த புகழினி என்ற தொழார் ஒருவர் எழுதிய கதை என்னை அதிகமாகவே பாதித்து விட்டது.அந்த உண்மை கதையை தொடர்கிறேன்.

அந்த வீட்டுக்கு செயற்கை வெளிச்சம் வந்து ஆண்டுகளாயிருக்கும். அங்கு ஒருத்தி குந்தி இருந்து குலுங்கிக் கொண்டிருந்தாள்.அவளுக்கு வயதொனறும் அதிகமில்லை. இப்பொழுது தான் 38 ஆகிறது. பார்த்தால் ஏதோ சவப் பெட்டிக்குள் படுத்திருப்பவள் போலத் தோற்றம். வறுமை அவளை அப்படி ஆக்கி வீடிருந்தது. நிஜமாகவே எப்பொழுதோ சவப் பெட்டிக்குள் போயிருப்பாள். ஆனாலும் தான் பெற்ற குழந்தைகளை முன்னிட்டு அந்த முடிவைக் கொஞ்சம் தள்ளிப் போட்டிருந்தாள். மூத்தவளுக்கு இப்பொழுது தான் 13 வயசாகிறது. அடுத்த இரண்டும் வாலுங்கள். 11ம் 9ம் நடக்குது.

14 வருடங்களுக்கு முன்னர் திருமணம். மிகவும் கோலாகலமாகத் தான் நடந்தது. காதல் திருமணம். கணவனுக்கு நல்ல உத்தியோகம். அவளும் வேலைக்குப் போய், கொஞ்சம் பணம் சேர்த்திருந்தாள். சிறப்பாகவே குடும்ப வாழ்க்கை போய்க் கொண்டிருந்தது, கடந்த வருடம் கணவனுக்கு வேலை பறிபோகும் வரை. கணவனுக்கு வேலை போனாலும் குடும்பம் ஆறுதலாக ஓடிக் கொண்டிருந்தது. ஆனால் சுற்றுச் சூழல் மாற்றங்கள் மிகவும் கொடுமையானதாக இருந்தது. விலைவாசி கடும் உச்சத்தில் இருந்தது. சேமிப்புகளும் விரைவாகக் கரையத் தொடங்கியது. 5 உருப்படிகளுக்கும் அவள் தனி ஒருவளாகச் சாப்பாடு போடக் கட்டவில்லை.

திடீரென்று ஒருநாள் கட்டியவனைக் காணவில்லை. தனது ஆண்பிள்ளைத் தனத்தைக் காட்டி விட்டு ஓடி விட்டான். ஓடினானா இல்லை தன்னைத் தானே மரித்துக் கொண்டானா தெரியவில்லை. அவளுக்கும் அதைப் பற்றிக் கவலைப் பட நேரங் கிடைத்ததில்லை.தனது குஞ்சுகளுக்கு தீனி போடுவதிலேயே அவளது காலம் கழிந்து கொண்டிருந்தது.அதுக்கும் இப்பொழுது சிரமப் பட வேண்டி இருந்தது. கிடைக்கும் சம்பளப் பணம் ஒருவாரத்துக்கு கூடத் தேறவில்லை. மூன்று குழந்தைகளும் ஏதோ தங்களால் முடிந்தவரை. குப்பை பொறுக்கியோ, சாப்பாடு அள்ளியோ வயிற்றைக் கழுவிக் கொள்ளக் கூடியதாக இருந்தது.

மூத்த மகளும் வயசுக்கு வந்து விட்டாள். உடம்பு திமிர் பிடித்து வளர்ந்திருந்தது. சதைகள் எல்லாம் சகட்டு மேனிக்கு வளர்ந்து கவனிப்போரை சுண்டத் தொடங்கி விட்டது. அவளும் பாவம். அறியா வயசில் தன்னை எப்படி எல்லாம் மேய்கிறார்கள் என்று தெரியாமல் அங்கமெல்லாம் பிதுங்க கிழிசல்களை போட்டுக் கொண்டு தெரு நாய்களுடன் சண்டை போட்டு பிச்சை எடுத்துக் கொண்டிருந்தாள்.

மூத்த பொடி கொஞ்சம் விளப்பம். பெரிய உணவு விடுதிகளின் குப்பைத் தொட்டிகளைக் குறிவைப்பதிலே சூரன். அவனுக்குத் தெரியும், உணவு முக்கியம். அது எங்கே மிதமிஞ்சி வெளியே கொட்டப் படும் என்றும் இந்த வயசுக்குள்ளேயே நல்ல தெளிவு. கடைக் குட்டி பாவம் சொறிப் பிடித்த தெரு நாய்களுடன் சண்டை போடவே அவனுக்கு நேரம் போயிரும். ஆனாலும் எல்லோருடைய கூட்டு முயற்சியாலும் ஒரு வேளைக்காவது நல்ல உணவு கிடைத்து வந்தது.

இது கூட யாருக்கோ பிடிக்க வில்லை. நாட்டு நிலைமை அதள பாதாளத்தில் இருந்தது. பிச்சைகாரர்களின் கூட்டம் அதிகமாகி விட்டது. பொறுக்குவதில் போட்டி அதிகம். ஒரு நேரச் சாப்பாடும் மிகவும் அரிதாகிக் கொண்டு வந்தது.

அவளது மகளின் நடவடிவைக்கைகள் கொஞ்சம் மாறத் தொடங்கிவிட்டன. அவளுக்கும் தான் யார் என்பதும், தனது மூலதனம் என்பதும் சிறிது சிறிதாகப் புரிய வந்து கொண்டிருந்தது. அயல் வீடுகளில் இளம் பெண்கள் என்ன வேலை செய்கிறார்கள், எப்படி பணம் சேர்க்கிறார்கள், நல்ல உணவு கூடக் கிடைக்குதே என்று சிந்திப்பது தாயாருக்கும் வெளிச்சமாகிக் கொண்டிருந்தது. தாய்க்கும் தெரியும் சில பெற்றோர்களுக்கு தமது இளங் குருத்துகளை அந்த மாதிரி இடங்களுக்கு பக்குவமாக கூட்டிச் சென்று வருவதே வேலை என்று. அவளும் கண் கூடாகக் கண்டிருக்கிறாள்.

ஒரு நாள் இரவு மூத்த பையன் தெரு நாய்களுடனும், பொடிகளுடனும் போராடி கொஞ்சம் சாப்பாடு கொண்டு வந்திருந்தான். முழங்கால்களிலும் கைகளிலும் சிராய்ப்புகள். அவன் ஊதி ஊதி ஆற்றிக் கொண்டிருந்தான். வழமையாக அக்கா ஓடி வந்து தடவிக் கொடுப்பாள். இன்று எதுவுமே பேசவில்லை. மனசு கல்லாகியிட்டுதோ? பின்ன, தினமும் ஒரே மாதிரித் தானே நடக்குது.

ஏதோ வயிற்றை நனைத்து விட்டு எல்லோரும் தூங்கிவிட்டார்கள். மகளுக்கு தூக்கம் பிடிக்கவில்லை. மெதுவாகாத் தாயிடம் நகர்ந்து வந்தாள். என்ன என்பது மாதிரி தாய் ஏறிட்டுப் பார்த்தாள். அவள்,
‘அம்மா நானும் விபச்சாரம் செய்யவா?‘ என்று கேட்டாள். அது தான் அவள் சிந்தித்துக் கொண்டிருக்கிறாள்.