தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

அம்மண காந்தியை ஆயிரம் கோடிக்கு



எனது தடத்தில் படிந்த
குருதிக்கறையை கழுவ
நீண்ட வரிசையில் நான்

பற்களில் படிந்த இரத்தக்கறையை
கழுவ என் முன்னால் நின்ற காந்தி
தன் கோவணத்தை தேடியபடியே
தன் தடியைத் தவறவிட்டார்

கந்தக நெடி பரவிய விழிகளுடன்
பிணவாடை சுமந்த புத்தனோ
தன் சாம்பல் குவியலை காந்தியின்
கோவணத்தில் கவனமாய் மறைத்தார்

காந்தியின் தடியைக் களவாடிய
ஊடகங்களோ ஒளிபரப்பின
அம்மணக்காந்தியை ஆயிரம் கோடிக்கு...

நன்றி - கவிஞர் ஒட்டக்கூத்தன்